அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: மத் 27:1-2லூக் 22:66மத் 27:11-14மாற் 15:1-5யோவா 18:28-38 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள். அப் 17:6-7யோவா 19:12லூக் 23:141 இராஜா 21:10-131 பேது 3:16-18அப் 16:20-21அப் 24:5எரே 20:10 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 1 தீமோ 6:13யோவா 1:49லூக் 1:32-33லூக் 22:70மாற் 15:2யோவா 19:3லூக் 19:38-40லூக் 23:38 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். யோவா 18:381 பேது 1:191 பேது 2:22எபி 7:26லூக் 23:14-15லூக் 23:22மாற் 15:141 பேது 3:18 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள். யோவா 1:43யோவா 2:11மாற் 1:14மத் 4:23அப் 10:37அப் 23:10அப் 5:33அப் 7:54 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து, அப் 5:37லூக் 13:1 அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான். லூக் 3:1லூக் 13:31மத் 14:1 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, லூக் 9:7-9மத் 14:1மாற் 6:142இராஜா 5:11அப் 8:19லூக் 4:232இராஜா 5:3-6 அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. மத் 27:141 பேது 2:23அப் 8:32ஏசா 53:7லூக் 13:32மத் 7:6சங் 38:13-14சங் 39:1-2 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள். அப் 24:5லூக் 11:53லூக் 23:14-15லூக் 23:2லூக் 23:5 அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான். மாற் 15:16-20மத் 27:27-30ஏசா 53:3சங் 69:19-20யோவா 19:5மாற் 9:12ஏசா 49:7சங் 22:6 முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள். அப் 4:27வெளி 17:13-14மத் 16:1சங் 83:4-6 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து, யோவா 18:38மத் 27:21-23மாற் 15:14யோவா 19:4 அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. தானி 6:4எபி 7:26அப் 13:28லூக் 23:1-2லூக் 23:4-5மத் 27:19மத் 27:24மத் 27:4 உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். மத் 27:26லூக் 23:22மாற் 15:15அப் 16:37அப் 5:40-41ஏசா 53:5யோவா 19:1-4 பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான். மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள். அப் 21:36அப் 22:22அப் 3:14யோவா 18:39-40யோவா 19:15-16மாற் 15:6-15மத் 27:15-26 அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். அப் 3:14லூக் 23:2லூக் 23:5 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். மாற் 15:15யோவா 19:12மத் 14:8-9மத் 27:19 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள். யோவா 19:15லூக் 23:23மத் 27:22-25மாற் 15:13 அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். லூக் 23:141 பேது 1:191 பேது 3:18லூக் 23:16லூக் 23:20 அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது. சகரி 11:8சங் 57:4லூக் 23:5சங் 22:12-13 அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, மத் 27:26நீதி 17:15யாத் 23:2மாற் 15:15யோவா 19:1 கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான். அப் 3:14மாற் 15:15மாற் 15:6-71 சாமு 12:13லூக் 23:2லூக் 23:5மத் 27:26யோவா 18:40
இயேசு சிலுவையில் அறையப்படுதல்
அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். மத் 27:32-44மாற் 15:21-32அப் 13:1அப் 2:10அப் 6:6அப் 6:9யோவா 19:16-17லூக் 14:27 திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள். லூக் 8:52லூக் 8:2மாற் 15:40லூக் 23:55மத் 27:55 இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். உன்னத 8:4உன்னத 1:5உன்னத 2:7உன்னத 3:10உன்னத 3:5உன்னத 5:16உன்னத 5:8 இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். மத் 24:19லூக் 21:23-24மாற் 13:17-19ஓசி 9:12-16ஓசி 13:16உபா 28:53-57
அப்பொழுது மலைகளைப் பார்த்து: வெளி 6:16ஓசி 10:8ஏசா 2:19வெளி 9:6
எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து:
எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், 1 பேது 4:17-18யோவா 15:6நீதி 11:31எசேக் 20:47-48எசேக் 15:2-7எசேக் 21:3-4மத் 3:12எரே 25:29
பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். மாற் 15:27ஏசா 53:12மத் 27:38யோவா 19:18எபி 12:2லூக் 22:37 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். மாற் 15:22-23யோவா 19:17-18சகரி 12:101 பேது 2:24உபா 21:23யோவா 18:32மத் 27:33-34அப் 13:29 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். மத் 5:44அப் 7:601 பேது 3:91 பேது 2:20-23லூக் 6:27-28ரோம 12:14ஆதி 50:171 கொரி 2:8 மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். சங் 22:17ஏசா 42:11 பேது 2:4மத் 12:18மாற் 15:29-32ஏசா 53:3லூக் 16:14சங் 22:6-8 போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: சங் 69:21மத் 27:48மத் 27:34மாற் 15:36யோவா 19:28-30லூக் 23:11மத் 27:29-30மாற் 15:19-20 நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள். இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. மத் 27:37மாற் 15:26யோவா 19:19-22லூக் 23:3மாற் 15:32யோவா 19:3மத் 27:11மாற் 15:18 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். மத் 27:44மாற் 15:32லூக் 23:35லூக் 23:37லூக் 17:34-35 மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 2 நாளாக 28:22எபே 5:11எரே 5:3லூக் 12:5சங் 36:1வெளி 15:4லேவி 19:17வெளி 16:11 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, லேவி 26:40-41எஸ்றா 9:131 பேது 1:19மத் 27:24மத் 27:42 நாளாக 33:12தானி 9:4யாக் 4:7 இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். அப் 16:31ரோம 10:9-141 யோவா 5:11-131 கொரி 6:10-11லூக் 12:8லூக் 18:13அப் 20:211 யோவா 5:1 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். வெளி 2:7சங் 50:151 தீமோ 1:15-16லூக் 19:10சங் 32:5யோவா 14:3எபி 7:25யோவா 17:24
இயேசுவின் மரணம்
அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது. மத் 27:45மாற் 15:33-34ஆமோ 8:9அப் 2:20யோவா 19:14மத் 27:52ஆமோ 5:18மாற் 15:39 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. எபி 10:19-22மத் 27:51எபி 9:3-8மாற் 15:38எபே 2:14-18லேவி 16:12-162 நாளாக 3:14எபி 6:19 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். சங் 31:5அப் 7:59யோவா 19:301 பேது 2:23மாற் 15:34-41மத் 27:46-56 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். மத் 27:54மாற் 15:39லூக் 23:41மத் 9:8யோவா 19:7 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். லூக் 18:13அப் 2:37எரே 31:19 அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லூக் 8:2சங் 38:11லூக் 23:55மத் 27:55-56லூக் 23:27மாற் 15:40-41மாற் 15:47சங் 142:4
இயேசுவின் அடக்கம்
யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான். யோவா 19:38-42அப் 10:22அப் 11:24அப் 10:2மத் 27:57-61மாற் 15:42-47லூக் 2:25 அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான். லூக் 2:25லூக் 2:38ஆதி 37:21-22ஆதி 42:21-22ஆதி 49:18ஏசா 8:12மாற் 15:431 சாமு 1:1 அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, யோவா 19:38-42 அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். மத் 27:59-60ஏசா 53:9மாற் 15:46 அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது. மத் 27:62யோவா 19:31மாற் 15:42யோவா 19:14யோவா 19:42 கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, லூக் 23:49லூக் 8:2மத் 27:61மாற் 15:47 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். லூக் 24:1மாற் 16:1உபா 5:14யாத் 20:8-10யாத் 31:14யாத் 35:2-3ஏசா 58:13-14எரே 17:24-25