நான்காயிரம்பேரைப் போஷித்தல்
அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மத் 15:32-39மாற் 6:34-44 மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். மத் 9:36மீகா 7:19சங் 103:13சங் 145:15எபி 4:15எபி 5:2லூக் 7:13மத் 14:14 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். ஏசா 40:31நியாயாதி 8:4-61 சாமு 14:28-311 சாமு 30:10-12 அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள். மத் 15:33மாற் 6:52மாற் 6:36-37சங் 78:19-202இராஜா 7:2யோவா 6:7-9எண் 11:21-232இராஜா 4:42-44 அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள். மத் 14:15-17லூக் 9:13மத் 15:34மாற் 6:38 அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். கொலோ 3:17யோவா 6:10-11மத் 14:18-19மத் 15:35-361 கொரி 10:30-31யோவா 2:5யோவா 6:23ரோம 14:6 சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார். மத் 14:19யோவா 21:5யோவா 21:8-9லூக் 24:41-42லூக் 6:41 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள். மத் 16:10சங் 145:162இராஜா 4:42-44மாற் 8:19-20சங் 107:8-92இராஜா 4:2-7யோவா 6:11-13யோவா 6:32-35 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார். மத் 15:39 அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். மத் 12:381 கொரி 10:9யோவா 4:481 கொரி 1:22-23உபா 6:16யாத் 17:7லூக் 11:16லூக் 12:54-57 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, மத் 12:39-40யோவா 12:37-43மத் 16:4மாற் 7:34லூக் 11:29-30லூக் 22:67-70மாற் 3:5ஏசா 53:3 அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார். அப் 18:6அப் 13:45-46ஓசி 4:17ஓசி 9:12எரே 23:33யோவா 12:36யோவா 8:21லூக் 8:37
பரிசேயர்கள் மற்றும் ஏரோதின் புளித்த மாவு
சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது. மத் 16:5 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார். 1 கொரி 5:6-8மத் 16:6மத் 16:11-12மாற் 12:13லூக் 12:1-2யாத் 12:18-20லேவி 2:11நீதி 19:27 அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். லூக் 20:5லூக் 9:46மத் 16:7-8 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா? மாற் 6:52எபி 5:11-12ஏசா 63:17மாற் 2:8மாற் 3:5மத் 16:8-9எபி 4:12-13யோவா 16:30 உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா? அப் 28:26-27மத் 13:14-15எரே 5:21மாற் 4:12எசேக் 12:2யோவா 12:40ஏசா 6:9-10ஏசா 42:18-20 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். யோவா 6:5-13லூக் 9:12-17மத் 14:17-21மாற் 6:38-44 நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார் . ஏழு என்றார்கள். மத் 15:34-38மாற் 8:1-9 அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார். மாற் 6:52சங் 94:81 கொரி 15:341 கொரி 6:5யோவா 14:9மத் 16:11-12மாற் 8:12மாற் 8:17
பெத்சாயிதாவில் குருடன் சுகமாக்கப்படுதல்
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். மத் 11:21லூக் 10:13மாற் 6:45யோவா 1:44யோவா 12:21மத் 8:15மத் 9:29மாற் 2:3 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார். மாற் 7:33யோவா 9:6-7அப் 9:8மாற் 5:23ஏசா 44:2ஏசா 51:18எபி 8:9எரே 31:32 அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான். ஏசா 29:181 கொரி 13:9-12ஏசா 32:3நியாயாதி 9:36 பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான். பிலி 1:6நீதி 4:181 பேது 2:92 பேது 3:18மத் 13:12 பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். மத் 8:4மத் 12:16மத் 9:30மாற் 5:43மாற் 7:36மாற் 8:23
கிறிஸ்துவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். லூக் 9:18-20மத் 16:13-20 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். யோவா 1:21மல்கி 4:5மத் 14:2மாற் 9:11-13லூக் 9:7-9மத் 16:14மாற் 6:14-16 அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான். 1 யோவா 4:15மத் 16:15-161 யோவா 5:1யோவா 11:27லூக் 9:20அப் 9:20யோவா 4:42யோவா 1:41-49 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். லூக் 9:21மத் 16:20மாற் 9:9மத் 8:4மாற் 7:36மாற் 8:26
கிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து முன்னறிவித்தல்
அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார். மாற் 10:33-34யோவா 2:19லூக் 24:261 சாமு 10:19அப் 7:35ஓசி 6:2லூக் 17:25மத் 16:21-28 இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான். மத் 16:22யோவா 16:25யோவா 16:29யோவா 18:20யோவா 13:6-8லூக் 10:40மாற் 4:38 அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார். மத் 4:10பிலி 3:191 யோவா 2:15யாக் 3:15-18ஆதி 3:4-6மத் 6:31-32மாற் 3:34சங் 141:5 பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும். மத் 10:38லூக் 14:26-27யோவா 10:27கலா 5:24கலா 2:201 இராஜா 14:81 யோவா 3:16எண் 14:24 தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். 2 தீமோ 2:11-131 கொரி 9:23லூக் 17:332 தீமோ 1:8மத் 16:25யோவா 12:25-26மத் 10:392 கொரி 12:10 மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மத் 16:26லூக் 9:25சங் 49:17யாக் 1:9-11பிலி 3:7-9லூக் 12:19-20எபி 11:24-26ரோம 6:21 மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? சங் 49:7-81 பேது 1:18-19 எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார். லூக் 12:8-9ரோம 1:161 யோவா 2:23யாக் 4:4லூக் 9:26மத் 10:32-332 தீமோ 1:8மத் 26:64