மாற்கு 9

Mark 9
அத்தியாயம் 9

இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக் 9:27எபி 2:9மாற் 13:30மத் 16:28யோவா 8:51-52லூக் 2:26லூக் 22:18லூக் 22:30

இயேசு மறுரூபமடைதல்

ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். லூக் 9:28-36மத் 17:1-8ஏசா 33:17மாற் 5:37மாற் 14:332 கொரி 13:1யாத் 24:131 இராஜா 18:42 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது. மத் 28:3தானி 7:9ஏசா 1:18மல்கி 3:2-3சங் 104:1-2சங் 51:7சங் 68:14வெளி 7:14 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். லூக் 9:30-31அப் 3:21-24யோவா 5:39லூக் 24:44மத் 17:3-4லூக் 24:27லூக் 9:19மத் 11:13 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். யோவா 14:21-23யோவா 14:8-9மத் 23:7பிலி 1:23சங் 62:2-3சங் 84:10வெளி 22:3-41 யோவா 3:2 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான். தானி 10:15-19மாற் 16:5-8வெளி 1:17 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. 2 பேது 1:17மத் 3:17லூக் 9:34-36மாற் 1:11எபி 2:1யாத் 23:21-22யோவா 5:22-25மத் 17:5-7 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை. அப் 10:16அப் 8:39-40லூக் 24:31லூக் 9:36 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். மத் 17:9-13மாற் 5:43மத் 12:40லூக் 24:46மத் 16:21மத் 27:63மாற் 10:32-34மாற் 8:29-31 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: அப் 17:18யோவா 16:17-19யோவா 2:19-22லூக் 18:33-34லூக் 24:25-27லூக் 24:7-8யோவா 12:16யோவா 12:33-34 எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். மல்கி 4:5மல்கி 3:1மத் 11:14மத் 17:10-11மாற் 9:4 அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். ஏசா 53:1-12ஏசா 50:6ஏசா 52:14ஏசா 40:3-5லூக் 1:16-17ஏசா 49:7லூக் 23:11மத் 11:2-18 ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 14:3-11மத் 11:14மத் 17:12-13அப் 7:52லூக் 1:17லூக் 3:19-20மாற் 6:14-28

இயேசு அசுத்தஆவி பிடித்த வாலிபனை சுகப்படுத்தல்

பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார். லூக் 9:37-42மத் 17:14-20லூக் 11:53-54மாற் 11:28மாற் 12:14மாற் 2:6எபி 12:3 மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள். யாத் 34:30மாற் 9:2-3 அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். லூக் 5:30-32மாற் 8:11 அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். லூக் 11:14மாற் 9:25லூக் 9:38மாற் 10:13யோவா 4:47மத் 12:22மத் 17:15மாற் 5:23 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான். மாற் 11:23லூக் 9:39-40மத் 17:19-20மாற் 9:28-29மத் 17:16மாற் 9:20மாற் 9:262இராஜா 4:29-31 அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். எண் 14:11லூக் 9:41மத் 17:17மாற் 16:14எண் 14:27சங் 106:21-25எபி 3:10-12யோவா 20:27 அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். மாற் 1:26லூக் 4:351 பேது 5:8லூக் 9:42யோவா 8:44யோபு 1:10-12யோபு 2:6-8லூக் 8:29 இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது; அப் 9:33யோவா 9:20-21அப் 14:8அப் 3:2அப் 4:22யோவா 5:5-6யோவா 9:1யோபு 14:1 இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். மத் 14:31மத் 15:22-28மத் 20:34மத் 8:2மாற் 1:40-42மாற் 5:19லூக் 7:13மத் 8:8-9 இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார். யோவா 11:40எபி 11:6மத் 17:20மாற் 11:23மத் 21:21-22லூக் 17:62 நாளாக 20:20யோவா 4:48-50 உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான். லூக் 17:5எபி 12:2எபே 2:82 தெச 1:112 தெச 1:3சங் 126:5பிலி 1:292 கொரி 2:4 அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப் 16:18ஏசா 35:5-6லூக் 9:42மத் 17:18மாற் 9:15யூதா 1:9லூக் 11:14லூக் 4:35 அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான். மாற் 9:20மாற் 1:26யாத் 5:23மாற் 9:18வெளி 12:12 இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். அப் 3:7மாற் 1:31அப் 9:41ஏசா 41:13மாற் 1:41மாற் 5:41மாற் 8:23 அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள். மத் 17:19-20மத் 13:10மத் 13:36மத் 15:15மாற் 4:10மாற் 4:34மாற் 7:17 அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார். யாக் 5:15தானி 9:3மத் 17:20எபே 6:182 கொரி 12:82 கொரி 11:271 இராஜா 17:20-22லூக் 11:26 பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார். லூக் 9:43-45மத் 17:22-23மாற் 6:31-32மத் 27:22-23 ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். மத் 16:21மாற் 9:12லூக் 24:44-46மத் 20:18-19மாற் 8:31லூக் 24:26மத் 20:28மத் 26:2 அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். யோவா 16:19லூக் 18:34லூக் 2:50லூக் 9:45யோவா 12:16மாற் 9:10யோவா 4:27லூக் 24:45

யார் பெரியவன்?

அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார். மத் 18:1-5எபி 4:13லூக் 9:46-48யோவா 2:25யோவா 21:17மத் 17:24மாற் 2:8சங் 139:1-4 அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள். மாற் 9:501 பேது 5:33 யோவா 1:9லூக் 22:24-30லூக் 9:46-48பிலி 2:3-7ரோம 12:10மத் 18:1-5 அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி; மத் 20:25-28லூக் 22:26மாற் 10:42-45லூக் 14:10-11மத் 23:11யாக் 4:6லூக் 18:14எரே 45:5 ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: மாற் 10:16மத் 18:2மத் 19:14-15 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். மத் 18:3-5லூக் 10:16மத் 10:40-42யோவா 10:30யோவா 12:44-45யோவா 14:21-23லூக் 9:48யோவா 5:23

நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்

அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான். லூக் 9:49-50எண் 11:26-29லூக் 11:19 அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். 1 கொரி 12:31 கொரி 13:1-2பிலி 1:18மத் 13:28-29மத் 7:22-231 கொரி 9:27மாற் 10:13-14அப் 19:13-16 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான். மத் 12:30லூக் 11:23 நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 10:42மத் 25:401 கொரி 15:23கலா 3:29கலா 5:24ரோம 14:15ரோம 8:9யோவா 19:25-27

இடறுதலுக்குக் காரணமாகுதல்

என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும். மத் 18:6லூக் 17:1-2மத் 18:102 கொரி 6:32 தெச 1:6-9அப் 26:11-14மத் 25:45-46ரோம 14:13 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். மத் 5:29-30மத் 18:8-9மத் 25:41எபி 12:1மத் 5:22மத் 3:12கொலோ 3:5கலா 5:24 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். மத் 18:8மத் 5:22மாற் 9:43 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். மத் 18:9மத் 5:22மத் 5:28-29ஆதி 3:6யோபு 31:1மாற் 9:43பிலி 3:7-8சங் 119:37 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். ஏசா 66:24மத் 25:41மாற் 9:43-45 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். லேவி 2:13எசேக் 43:24 உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார். கொலோ 4:6மத் 5:13ரோம 12:182 கொரி 13:11எபி 12:14பிலி 1:27எபே 4:29யோபு 6:6