மத்தேயு 19

Matthew 19
அத்தியாயம் 19

விவாகரத்தைப்பற்றிய இயேசுவின் போதனை

இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார். யோவா 10:40மத் 19:1-9மத் 7:28மாற் 10:1-12 திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார். மத் 12:15மத் 14:35-36மத் 15:30-31மத் 4:23-25மத் 9:35-36மாற் 6:55-56 அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள். மாற் 10:2எபி 3:9யோவா 8:6லூக் 11:53-54மத் 16:1மத் 22:16-18மத் 22:35மத் 5:31-32 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், ஆதி 2:23ஆதி 1:27ஆதி 5:2லூக் 10:26மல்கி 2:15ஆதி 2:18மத் 22:31மத் 21:42 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? ஆதி 2:21-241 கொரி 7:41 கொரி 7:2எபே 5:31மாற் 10:5-91 கொரி 6:161 சாமு 18:1சங் 63:8 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். எபி 13:4மாற் 10:91 கொரி 7:10-14ரோம 7:2எபே 5:28மல்கி 2:14நீதி 2:17 அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். உபா 24:1-4மத் 5:31மாற் 10:4மல்கி 2:16ஏசா 50:1எரே 3:8மத் 1:19 அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை. மல்கி 2:13-14ஆதி 2:24எரே 6:16மாற் 10:5சகரி 7:12ஆதி 7:7மத் 3:151 கொரி 7:6 ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 5:32லூக் 16:181 கொரி 7:391 கொரி 7:10-13மாற் 10:11-12ரோம 7:2-3ஆதி 12:18-19ஆதி 20:3 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள். 1 கொரி 7:32-351 கொரி 7:1-21 கொரி 7:39-401 கொரி 7:81 தீமோ 4:31 தீமோ 5:11-15நீதி 18:22நீதி 19:13-14 அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 1 கொரி 7:171 கொரி 7:21 கொரி 7:351 கொரி 7:7-9மத் 13:11 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். 1 கொரி 7:32-381 கொரி 9:5ஏசா 56:3-4ஏசா 39:71 கொரி 9:15

இயேசுவும் சிறுபிள்ளைகளும்

அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். மாற் 10:13-16லூக் 18:15-17மத் 18:2-5அப் 2:391 கொரி 7:141 சாமு 1:24ஆதி 48:1ஆதி 48:9-20 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, மத் 18:3லூக் 18:16-171 கொரி 14:20மத் 11:25மாற் 10:141 பேது 2:1-21 சாமு 1:11ஆதி 17:24-26 அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார். மாற் 10:161 கொரி 7:142 தீமோ 3:15ஏசா 40:11

செல்வந்தனான இளைஞன்

அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். மாற் 10:17-30யோவா 3:15லூக் 18:18-30யூதா 1:21மத் 25:461 யோவா 1:21 யோவா 5:20தீத் 3:7 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார். லேவி 18:5கலா 3:11-13லூக் 10:26-281 சாமு 2:2ரோம 10:51 யோவா 4:16எசேக் 20:11-12எசேக் 20:21 அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உபா 5:16-21யாத் 20:12-17யாக் 2:10-11லூக் 18:20மாற் 10:19கலா 3:10மத் 5:21-28ரோம 13:8-10 உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார். லேவி 19:18உபா 5:16யாத் 20:12மத் 22:39எபே 6:1-2யாக் 2:8லூக் 10:27மத் 15:4-6 அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். கலா 3:24மாற் 10:20-21பிலி 3:6யோவா 8:7லூக் 15:29லூக் 15:7லூக் 18:11-12லூக் 18:21-22 அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். மாற் 10:21லூக் 18:22லூக் 12:33அப் 2:45லூக் 14:33மத் 5:481 தீமோ 6:17-19யோவா 10:27 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான். எசேக் 33:31மத் 6:24மத் 13:22கொலோ 3:5எபே 5:5மத் 16:26மாற் 10:22லூக் 18:23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 1 தீமோ 6:9-10மத் 13:22யாக் 5:1-4லூக் 18:24மாற் 10:231 கொரி 1:26யோவா 3:3மத் 18:3 மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 5:44லூக் 18:25மாற் 10:24-25எரே 13:23மத் 19:26மத் 23:24 அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள். ரோம 10:13மத் 24:22லூக் 13:23-24மாற் 13:20ரோம 11:5-7 இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். எரே 32:27லூக் 1:37யோபு 42:2லூக் 18:27மாற் 10:27எரே 32:17ஆதி 18:14சங் 62:11 அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். பிலி 3:8லூக் 18:28லூக் 5:11மாற் 1:17-20லூக் 15:29உபா 33:9லூக் 5:27-28மத் 4:20-22 அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 22:28-301 கொரி 6:2-3மத் 25:31வெளி 20:4ஏசா 65:172 தீமோ 2:12மத் 16:27வெளி 2:26-27 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; லூக் 18:29-30மாற் 10:29-30பிலி 3:8லூக் 14:26மத் 16:25மத் 10:37-38மத் 6:331 பேது 4:14 ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார். லூக் 13:30மத் 20:16மாற் 10:31மத் 21:31-32லூக் 18:13-14ரோம 5:20-21ரோம 9:30-33லூக் 7:29-30