எண்ணாகமம் 21

Numbers 21
அத்தியாயம் 21

ஆராத் அழிக்கப்படுதல்

வேவுகாரர்கள் காண்பித்த வழியாக இஸ்ரவேலர்கள் வருகிறார்கள் என்று தெற்கே வாழ்கிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலர்களுக்கு எதிராக யுத்தம் செய்து, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். நியாயாதி 1:16எண் 33:40யோசு 12:14உபா 2:32யோசு 11:19-20யோசு 7:5எண் 13:21-22எண் 14:45 அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் அழிப்போம்” என்று சபதம் செய்தார்கள். ஆதி 28:20நியாயாதி 11:301 சாமு 1:11யோசு 6:262 சாமு 15:7-8உபா 13:15லேவி 27:28-29சங் 116:18 யெகோவா இஸ்ரவேலின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியர்களை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் அழித்து, அந்த இடத்திற்கு ஓர்மா 1 என்று பெயரிட்டார்கள். எண் 14:45உபா 1:441 சாமு 30:30சங் 10:17சங் 102:17சங் 91:15

வெண்கல பாம்பு

அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படி, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாகப் பயணம்செய்தார்கள்; வழிப்பயணத்தின் காரணமாக மக்கள் மனவேதனையடைந்தார்கள். யாத் 6:9நியாயாதி 11:18அப் 14:22எண் 32:71 தெச 3:3-4எண் 32:9எண் 33:41உபா 1:40 மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள். சங் 78:19யாத் 17:2-3எண் 16:13-14எண் 16:41யாத் 14:11யாத் 16:2-3எண் 11:1-9எண் 14:1-4 அப்பொழுது யெகோவா விஷமுள்ள பாம்புகளை மக்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் மக்களைக் கடித்ததினால் இஸ்ரவேலர்களுக்குள்ளே அநேக மக்கள் இறந்தார்கள். 1 கொரி 10:9உபா 8:15எரே 8:17ஆமோ 9:3-4ஏசா 30:6ஏசா 14:29ஆதி 3:14-15 அதினால் மக்கள் மோசேயினிடத்தில் போய்: “நாங்கள் யெகோவாவுக்கும் உமக்கும் விரோதமாகப் பேசினதினால் பாவம்செய்தோம்; பாம்புகள் எங்களைவிட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யவேண்டும்” என்றார்கள்; மோசே மக்களுக்காக விண்ணப்பம்செய்தான். அப் 8:24யாத் 8:8சங் 78:34எண் 11:21 இராஜா 13:6யாத் 8:281 சாமு 12:19-231 சாமு 15:24 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். யோவா 3:14சங் 106:43-45சங் 145:8 அப்படியே மோசே ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப் பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். யோவா 3:14-15எபி 12:2யோவா 6:402இராஜா 18:4யோவா 12:32ஏசா 45:22ரோம 8:32 கொரி 5:21

மோவாபுக்கு பயணம்

இஸ்ரவேல் மக்கள் பயணப்பட்டுப்போய், ஓபோத்தில் முகாமிட்டார்கள். எண் 33:43-45 ஓபோத்திலிருந்து பயணம் செய்து, கிழக்குதிசைக்கு நேராக மோவாபுக்கு எதிரான வனாந்திரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள். அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், சேரேத் பள்ளத்தாக்கிலே முகாமிட்டார்கள். உபா 2:13-14 அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்திரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இந்தப்பக்கம் முகாமிட்டார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களுக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை. நியாயாதி 11:18எண் 22:36உபா 2:24ஏசா 16:2எரே 48:20எண் 21:14 அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும், 2 சாமு 1:18யோசு 10:13 ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் யெகோவாவுடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது. உபா 2:18உபா 2:9எண் 21:28உபா 2:29ஏசா 15:1 அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; “மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். எண் 20:8ஏசா 12:3ஏசா 41:17-18நியாயாதி 9:21யாத் 17:6ஏசா 43:20வெளி 21:6வெளி 22:1 அப்பொழுது இஸ்ரவேலர்கள் பாடின பாட்டாவது: “ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். யாத் 15:1-2ஏசா 12:1-2ஏசா 12:5யாக் 5:13நியாயாதி 5:1சங் 105:2சங் 106:12 நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள்” என்று பாடினார்கள். ஏசா 33:221 தீமோ 6:17-182 நாளாக 17:7-9உபா 33:4உபா 5:31யாக் 4:12யோவா 1:17நெகே 3:1 அந்த வனாந்திரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும், பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள். எண் 23:28உபா 1:5உபா 3:27உபா 34:1உபா 4:49எண் 22:1எண் 23:14எண் 26:63

சீகோனையும் ஓகையும் தோற்கடித்தல்

அப்பொழுது இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி: உபா 2:26-28நியாயாதி 11:19-21எண் 20:14-19 “உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி உத்திரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சைத்தோட்டங்களிலும் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், உமது எல்லையைக் கடந்துபோகும்வரை ராஜபாதையில் நடந்துபோவோம்” என்று சொல்லச்சொன்னார்கள். எண் 20:17 சீகோன் தன்னுடைய எல்லை வழியாகக் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்திரவு கொடாமல், தன்னுடைய மக்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்திரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான். நியாயாதி 11:20உபா 29:7-8உபா 2:30-32ஏசா 15:4எரே 48:34எண் 20:21 இஸ்ரவேலர்கள் அவனைப் பட்டயக்கூர்மையினால் வெட்டி, அர்னோன் துவங்கி அம்மோன் மக்களின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்கும் உள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் மக்களின் எல்லை பாதுகாப்பானதாக இருந்தது. ஆமோ 2:9ஆதி 32:22யோசு 24:8நெகே 9:22சங் 136:19உபா 2:31-37உபா 29:7உபா 3:16 இஸ்ரவேலர்கள் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியர்களுடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள். ஆமோ 2:10உபா 2:12எசேக் 16:46எசேக் 16:49எசேக் 16:53ஏசா 15:4ஏசா 16:8-9எரே 48:2 எஸ்போனானது எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாக இருந்தது; அவன் மோவாபியர்களின் முந்தின ராஜாவுக்கு எதிராக யுத்தம்செய்து, அர்னோன் வரைக்கும் இருந்த அவனுடைய தேசத்தையெல்லாம் அவனுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டான். அதினாலே நீதிமொழியைப் பேசுகிறவர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் உறுதியாகக் கட்டப்படட்டும். ஆப 2:6ஏசா 14:4எண் 21:14 எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவன்மார்களையும் எரித்தது. எண் 21:15எரே 48:45-46ஆமோ 1:10ஆமோ 1:12ஆமோ 1:14ஆமோ 1:4ஆமோ 1:7ஆமோ 2:2 ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன்னுடைய மகன்களையும் தன்னுடைய மகள்களையும் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான். 2இராஜா 23:13நியாயாதி 11:24எரே 48:461 இராஜா 11:331 இராஜா 11:7எரே 48:71 கொரி 8:4-5ஏசா 15:5 அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம், தீபோன் ஊர்வரைக்கும் அழிந்தது 2; மெதெபாவுக்கு அருகான நோப்பா பட்டணம்வரை அவர்களைப் பாழாக்கினோம்” என்று பாடினார்கள். ஏசா 15:2எரே 48:18எரே 48:22யோசு 13:17எண் 32:3எண் 32:342 சாமு 11:24ஆதி 49:23 இஸ்ரவேலர்கள் இப்படியே எமோரியர்களின் தேசத்திலே குடியிருந்தார்கள். உபா 3:16-17யோசு 12:1-6யோசு 13:8-12எண் 32:33-42 பின்பு, மோசே யாசேர் பட்டணத்திற்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கைப்பற்றி, அங்கே இருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள். எரே 48:32எண் 32:1எண் 32:35ஏசா 16:8-9எண் 32:3 பின்பு பாசானுக்குப் போகிற வழியாகத் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன்னுடைய எல்லா மக்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எத்ரேயிக்குப் புறப்பட்டு வந்தான். யோசு 13:12உபா 1:4உபா 29:7உபா 3:1-6ஆமோ 4:1உபா 32:14உபா 4:47எசேக் 27:6 யெகோவா மோசேயை நோக்கி: “அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும், அவனுடைய தேசத்தையும் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார். சங் 135:10-11உபா 3:2-3யோசு 8:7எண் 21:24-251 இராஜா 20:131 இராஜா 20:281 சாமு 23:42இராஜா 3:18 அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாக இல்லாதபடி அவனையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய எல்லா மக்களையும் வெட்டிப்போட்டு, அவனுடைய தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். உபா 29:7-8உபா 3:3-17யோசு 12:4-6யோசு 13:12சங் 135:10-12சங் 136:17-21ரோம 8:37