நிக்கொதேமுக்குப் போதனை
யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். யோவா 19:39யோவா 3:10யோவா 7:47-50லூக் 23:13 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். யோவா 5:36அப் 10:38அப் 2:22அப் 4:16-17யோவா 9:16யோவா 9:30-33மத் 22:16யோவா 1:38 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 2 கொரி 5:17யோவா 3:5-61 பேது 1:23-251 யோவா 3:91 யோவா 5:1தீத் 3:5யோவா 1:131 யோவா 2:29 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான். 1 கொரி 2:141 கொரி 1:18யோவா 3:3யோவா 4:11-12யோவா 6:53யோவா 6:60 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன். எசேக் 36:25-27எபே 5:26அப் 2:381 பேது 3:211 கொரி 6:111 யோவா 5:6-8ஏசா 44:3-4மத் 3:11 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும். கலா 5:16-21எசேக் 36:26-27ரோம 8:4-92 கொரி 5:171 கொரி 15:47-501 கொரி 6:17ரோம 7:181 யோவா 3:9 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்; எபே 4:22-24யோவா 3:3ரோம 12:1-21 பேது 1:22யோவா 3:12வெளி 21:271 பேது 1:14-16கொலோ 1:12 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். பிரச 11:4-51 கொரி 2:11அப் 2:2எசேக் 37:91 யோவா 2:29மாற் 4:26-29அப் 4:31யோவா 1:13 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். ஏசா 42:16யோவா 6:52யோவா 6:60லூக் 1:34யோவா 3:4மாற் 8:24-25நீதி 4:18 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா? மத் 22:29எரே 8:8-9எசேக் 11:19மத் 15:14எசேக் 36:25-27சங் 51:10சங் 51:6சங் 73:1 உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை. யோவா 8:381 யோவா 5:6-12யோவா 1:18யோவா 12:49யோவா 14:24யோவா 8:14யோவா 7:16யோவா 8:28-29 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 1 கொரி 3:1-21 கொரி 2:7-9எபி 5:11யோவா 3:31-361 பேது 2:1-3யோவா 1:1-14யோவா 3:13-17யோவா 3:5 பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை. நீதி 30:4அப் 2:34யோவா 6:38யோவா 1:181 கொரி 15:47யோவா 13:3எபே 4:9-10யோவா 6:62 பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும், எண் 21:7-9யோவா 8:28யோவா 12:32-34லூக் 24:26-27லூக் 24:44-462இராஜா 18:4சங் 22:16அப் 2:23 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். யோவா 3:16யோவா 6:40யோவா 3:361 யோவா 5:11-13யோவா 12:44-461 யோவா 5:11 யோவா 5:20ரோம 10:9-14
தேவனின் அன்பு
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். ரோம 5:81 யோவா 4:9-10ரோம 8:32யோவா 3:15யோவா 11:25-26யோவா 6:40யோவா 3:361 யோவா 4:19 உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 1 யோவா 4:14லூக் 19:10யோவா 12:47-48யோவா 6:57யோவா 6:401 தீமோ 2:5-6யோவா 6:29யோவா 20:21 அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். 1 யோவா 5:10மாற் 16:16ரோம 8:1யோவா 5:241 யோவா 5:12யோவா 3:36ரோம 5:11 யோவா 4:9 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. யோவா 8:122 தெச 2:12யோவா 9:39-41ரோம 2:8யோவா 12:43யோவா 5:44ரோம 1:322 பேது 3:3 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். எபே 5:11-13யோவா 7:7யோபு 24:13-17நீதி 1:29நீதி 4:18யாக் 1:23-251 இராஜா 22:8சங் 50:17 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். 1 யோவா 1:6சங் 139:23-243 யோவா 1:11எபே 5:9பிலி 2:131 யோவா 4:15-16சங் 119:1051 யோவா 2:27-29
இயேசுவைக்குறித்து யோவான்ஸ்நானனின் சாட்சி
இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். யோவா 4:1-3யோவா 3:26யோவா 7:3யோவா 2:13 சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். மாற் 1:4-51 சாமு 9:4எசேக் 43:2லூக் 3:7மத் 3:5-6எசேக் 19:10ஆதி 33:18எரே 51:13 அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை. மத் 4:12மத் 14:3மாற் 6:17லூக் 3:19-20லூக் 9:7-9 அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது. யோவா 2:6மத் 3:11எபி 6:21 பேது 3:21எபி 9:10எபி 9:23எபி 9:13-14மாற் 7:8 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். யோவா 1:7கலா 6:12-13யாக் 3:14-18யோவா 1:15யோவா 12:191 கொரி 3:3-5அப் 19:26-27கலா 5:20-21 யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான். யாக் 1:171 கொரி 4:71 கொரி 15:101 பேது 4:10-11ஆமோ 7:151 கொரி 2:12-14எரே 1:5மத் 25:15 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். யோவா 1:20யோவா 1:23லூக் 1:16-17மத் 3:11-12யோவா 1:25மல்கி 3:1லூக் 1:76மத் 3:3 மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது. எபே 5:25-27ஓசி 2:19ஏசா 54:5மத் 9:15எசேக் 16:8வெளி 19:7-9வெளி 21:9பிலி 2:2 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். கொலோ 1:18சங் 72:17-19எபி 3:2-6ஏசா 9:71 கொரி 3:5வெளி 11:15அப் 13:36-37தானி 2:34-35 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர். யோவா 8:23மத் 28:18ரோம 9:5யோவா 6:331 யோவா 4:5யோவா 3:12-13பிலி 2:9-11யோவா 6:51 தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை. யோவா 3:11யோவா 15:15யோவா 1:11யோவா 8:26யோவா 5:20யோவா 3:33ஏசா 50:2ஏசா 53:1 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான். எபே 1:13எபி 6:172 கொரி 1:18தீத் 1:1-22 கொரி 1:22யோவா 6:27ரோம 3:3-4ரோம 4:18-21 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். அப் 10:38மத் 12:18யோவா 15:26யோவா 5:26கொலோ 2:9ஏசா 11:2-5லூக் 4:18யோவா 7:37-39 பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். மத் 28:18யோவா 5:20லூக் 10:22யோவா 5:22யோவா 17:2மத் 11:27எபே 1:221 கொரி 15:27 குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவா 5:24யோவா 1:121 தெச 5:9எபே 5:6யோவா 3:15-161 யோவா 5:10-13ரோம 1:17-18ரோம 5:9