நீதிமொழிகள் 30

Proverbs 30
அத்தியாயம் 30

ஆகூரின் நீதிமொழிகள்

யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, நீதி 31:12 பேது 1:19-21

ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்:

மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; 1 கொரி 3:18சங் 73:22நீதி 5:121 கொரி 8:22 பேது 2:12-16ஏசா 6:5யாக் 1:5எரே 10:14

மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.

நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, எபே 3:18-19நீதி 9:10வெளி 3:7ரோம 11:33ஆமோ 7:14-15ஏசா 30:11ஏசா 57:15ஏசா 6:10

பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.

வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? யோவா 3:13எபே 4:8-10யோபு 26:8உபா 30:12ஏசா 7:14ஏசா 9:6மத் 1:21-23ஏசா 40:12-31

காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்?

தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்?

பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்?

அவருடைய பெயர் என்ன?

அவருடைய மகனுடைய பெயர்

என்ன? அதை அறிவாயோ?

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; சங் 18:30சங் 12:6யாக் 3:17சங் 3:3சங் 84:11சங் 119:140ஆதி 15:1சங் 91:2

தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, உபா 12:32உபா 4:2வெளி 22:18-19யோபு 13:7-91 கொரி 15:15

கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார்,

நீ பொய்யனாவாய்.

இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; லூக் 10:42சங் 27:42இராஜா 2:91 இராஜா 3:5-9சங் 21:2

நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; 1 தீமோ 6:6-8சங் 62:9-10சங் 119:37மத் 6:33லூக் 11:3சங் 119:29யோபு 23:12நீதி 21:6

தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.

நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; ஓசி 13:6உபா 31:20எசேக் 16:49-50உபா 8:10-14உபா 32:15யோபு 31:24-28நெகே 9:25-26உபா 6:10-12

தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும்,

என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.

எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; பிரச 7:21ரோம 14:42 நாளாக 24:22-242 சாமு 19:26-27தானி 3:8-18தானி 6:13தானி 6:24நீதி 24:23-24

அவன் உன்னைச் சபிப்பான்,

நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.

தங்களுடைய தகப்பனைச் சபித்தும், நீதி 20:20நீதி 30:17உபா 27:16யாத் 21:17நீதி 30:12-14லேவி 20:9உபா 21:20-211 தீமோ 5:4

தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.

தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், லூக் 18:112 தீமோ 3:5நீதி 16:2எரே 2:351 யோவா 1:7-10நீதி 21:2தீத் 3:5எசேக் 36:25

தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.

வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள். நீதி 6:17ஏசா 2:11சங் 101:5சங் 131:1தானி 11:36-37எசேக் 28:2-5எசேக் 28:9ஆப 2:4

தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சங் 57:4சங் 3:7சங் 14:4யோபு 29:17ஆமோ 8:4பிரச 4:1சங் 12:5சங் 58:6

சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.

கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. நீதி 30:21நீதி 30:29நீதி 6:16ரோம 16:182 பேது 2:13-152 பேது 2:3ஆமோ 1:11யோவா 8:39

திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.

அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், நீதி 27:20ஆப 2:5ஆதி 30:1

தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே.

தகப்பனைப் பரியாசம்செய்து, உபா 21:18-21நீதி 23:22நீதி 30:112 சாமு 18:14-17லேவி 20:9ஆதி 9:21-27நீதி 20:201 சாமு 17:44

தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும்,

கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.

எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, யோபு 42:3சங் 139:6

என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.

அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், ஏசா 40:31யோபு 39:27யாத் 22:16

கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும்,

ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.

அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; நீதி 5:6நீதி 7:13-23எண் 5:11-30

அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து;

நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது,

நான்கையும் அது தாங்கமுடியாது.

அரசாளுகிற அடிமைக்காகவும், நீதி 19:10பிரச 10:71 சாமு 25:10-111 சாமு 25:251 சாமு 25:31 சாமு 25:36-381 சாமு 30:16ஏசா 3:4-5

உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,

பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், நீதி 21:19நீதி 27:15நீதி 21:9நீதி 29:21நீதி 19:13

தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.

பூமியில் சிறியவைகளாக இருந்தும், யோபு 12:7

மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.

அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், நீதி 6:6-8

கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,

பெலமில்லாத உயிரினமாக இருந்தும், சங் 104:18லேவி 11:5

தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,

ராஜா இல்லாமல் இருந்தும், யாத் 10:4-6யோவே 1:6-7யோவே 2:25யோவே 2:7-11சங் 105:34யாத் 10:13-15யோவே 1:4வெளி 9:3-11

கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,

தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி,

அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.

விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு;

விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.

அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், நியாயாதி 14:18எண் 23:24

பெருமையாய் நடக்கிற சேவலும் 1, வெள்ளாட்டுக் கடாவும், தானி 3:15-18நீதி 16:14நீதி 20:2

ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.

நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, யோபு 21:5யோபு 40:4மீகா 7:16-17நீதி 26:12ரோம 3:19பிரச 8:3-4நீதி 17:28

துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.

பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; நீதி 17:14நீதி 28:25நீதி 29:22நீதி 15:18நீதி 16:28நீதி 26:21

மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்;

அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.