ஆவியானவரின் பிரமாணம்
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. யோவா 3:18-192 கொரி 5:17கலா 3:13ரோம 5:11 கொரி 1:30யோவா 5:24தீத் 2:11-14ரோம 4:7-8 ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே. ரோம 6:142 கொரி 3:17ரோம 6:182 கொரி 3:6ரோம 8:10-111 கொரி 15:45யோவா 8:32யோவா 8:36 அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார். அப் 13:39கலா 4:4-5எபி 7:18-192 கொரி 5:21கலா 3:13எபி 10:141 பேது 2:24ரோம 6:6 சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார். கலா 5:16கலா 5:22-25கொலோ 1:22எபே 5:26-27எபி 12:23யூதா 1:24வெளி 14:51 யோவா 3:2 அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 1 கொரி 2:14கலா 5:19-25யோவா 3:6கொலோ 3:1-3ரோம 8:6-7பிலி 3:18-19ரோம 8:9மாற் 8:33 சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும். கலா 6:8ரோம 8:7ரோம 8:13ரோம 13:14ரோம 6:23யாக் 1:14-15கலா 5:22யோவா 14:27 எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது. 1 கொரி 2:141 யோவா 2:15-16யாக் 4:4எபே 4:18-192 தீமோ 3:4கொலோ 1:21எபி 8:10ரோம 7:22 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள். யோவா 3:5-6எபி 11:5-6ரோம 8:9ரோம 7:5கொலோ 1:10எபி 13:21யோவா 3:31 யோவா 3:22 தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை. கலா 4:61 கொரி 3:162 தீமோ 1:141 கொரி 6:19யோவா 14:17எபே 1:13கலா 5:24ரோம 8:11 மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும். கலா 2:20எபே 3:172 கொரி 5:212 கொரி 5:1-4யோவா 11:25-26யோவா 17:23ரோம 8:11கொலோ 1:27 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 2 கொரி 4:14ரோம 6:4-52 கொரி 4:11எபே 1:19-20ரோம 8:91 கொரி 6:14ரோம 8:2அப் 2:24 எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை. ரோம 6:2-151 கொரி 6:19-201 பேது 4:2-3சங் 116:16 சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள். கலா 6:81 பேது 2:11கொலோ 3:5-81 கொரி 9:27தீத் 2:12கலா 5:24எபே 4:221 பேது 1:22 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். கலா 5:18யோவா 1:12கலா 3:26கலா 5:16சங் 143:10வெளி 21:7கலா 5:22-25ரோம 8:16-17 அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள். கலா 4:5-72 தீமோ 1:71 கொரி 2:12ரோம 8:16எபே 1:5எபி 2:15மாற் 14:361 யோவா 4:18 நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார். 1 யோவா 4:132 கொரி 1:222 கொரி 5:5எபே 1:13ரோம 8:261 யோவா 3:19-22எபே 4:302 கொரி 1:12 நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும். கலா 4:7கலா 3:29எபே 3:61 பேது 4:13வெளி 21:71 பேது 1:42 தீமோ 2:10-14பிலி 1:29
எதிர்காலத்து மகிமை
ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 2 கொரி 4:17-181 பேது 4:131 பேது 1:5-7மத் 5:11-12அப் 20:24கொலோ 3:41 யோவா 3:21 பேது 1:13 மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. மல்கி 3:17-18ரோம 8:231 யோவா 3:22 பேது 3:11-13பிலி 1:20ஏசா 65:17வெளி 21:1-5அப் 3:21 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு, ஆதி 3:17-19ஆதி 5:29ரோம 8:22எரே 12:4ஏசா 24:5-6ஓசி 4:3எரே 14:5-6பிரச 1:2 அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. வெளி 22:3-5அப் 3:212 பேது 3:13வெளி 21:1ரோம 8:19 எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. எரே 12:4எரே 12:11யோவா 16:21கொலோ 1:23ரோம 8:20மாற் 16:15சங் 48:6வெளி 12:2 அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். பிலி 3:20-212 கொரி 5:2-5எபி 9:28தீத் 2:13எபே 1:14எபே 4:30கலா 5:5ரோம 7:24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன? 2 கொரி 5:7எபி 11:12 கொரி 4:181 பேது 1:211 தெச 5:8ரோம 12:12ரோம 15:13ரோம 5:2 நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம். ரோம 12:12எபி 10:36சங் 27:14புலம் 3:25-26யாக் 5:7-111 தெச 1:3எபி 12:1-3சங் 130:5-7 அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். மத் 10:20எபே 6:18கலா 4:6யோவா 14:16யூதா 1:20-21எபே 2:18ரோம 8:15சங் 6:9 ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார். எரே 17:101 யோவா 5:14-15எபே 2:18அப் 1:24ரோம 8:341 நாளாக 28:91 யோவா 3:21-22எரே 11:20
கிறிஸ்தவர்களின் நம்பிக்கை
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 1 பேது 5:10யாக் 1:12ஆதி 50:20ரோம 5:3-51 கொரி 2:9ரோம 8:35-39யாக் 1:3-4ரோம 8:30 தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எபே 1:4-5எரே 1:5எபே 1:112 தீமோ 1:91 பேது 1:20வெளி 13:82 தீமோ 2:191 கொரி 2:7 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார். வெளி 17:14ரோம 8:28எபே 1:11ரோம 9:23-24எபே 1:51 பேது 2:9எபி 9:151 கொரி 6:11 இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்? சங் 118:6எரே 1:19சங் 56:111 யோவா 4:4ஏசா 54:17எரே 20:11சங் 56:4சங் 27:1-3 தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி? யோவா 3:16ரோம 8:28சங் 84:111 யோவா 4:102 கொரி 5:211 கொரி 2:12ரோம 5:6-101 கொரி 3:21-23 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஏசா 50:8-9வெளி 12:10-11ஏசா 54:17ரோம 8:1லூக் 18:71 தெச 1:4சகரி 3:1-4ரோம 3:26 தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. எபி 7:25ரோம 8:27எபி 9:241 பேது 3:22ரோம 8:1கொலோ 3:1எபி 10:19-22மாற் 16:19 “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும், யோவா 10:28சங் 103:17யோவா 16:33ரோம 5:3-52 கொரி 4:171 பேது 4:12-14ரோம 8:392 தீமோ 4:16-18 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? சங் 44:22ஏசா 53:71 கொரி 15:301 கொரி 4:92 கொரி 4:10-11அப் 8:32அப் 20:24எரே 11:19 இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே. 1 கொரி 15:571 யோவா 4:41 யோவா 5:4-52 கொரி 2:14வெளி 21:7வெளி 12:11யூதா 1:242 கொரி 12:9 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், யோவா 10:28ரோம 14:82 தீமோ 1:121 பேது 5:8-101 பேது 3:22கொலோ 1:161 கொரி 3:22-23கொலோ 2:15 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன். யோவா 10:28-30ரோம 8:35ரோம 5:81 யோவா 4:19எபே 3:18-191 யோவா 4:9-10யோவா 3:16எபே 1:4