இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல்
தெயோப்பிலுவே, நான் முன்பு எழுதிய புத்தகத்தில், இயேசு செய்ய ஆரம்பித்தவை போதித்தவை எல்லாவற்றையும் குறித்து எழுதினேன். லூக் 1:3லூக் 24:19மத் 4:23-24லூக் 3:231 பேது 2:21-23யோவா 10:32-38யோவா 18:19-21லூக் 7:21-23 அவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்கு பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டவைகளைக் கொடுத்தபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அந்த நாள்வரைக்கும், நிகழ்ந்தவைகளைப் பற்றி அதில் எழுதினேன். அப் 1:9அப் 10:38எபி 9:24ஏசா 59:20-21யோவா 20:21யோவா 13:18எபே 4:8-10மத் 28:19-20 இயேசு தாம் சிலுவையில் வேதனையை அனுபவித்த பின்பு தம்மை சீடர்களுக்குக் காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை நம்பத்தகுந்த பல ஆதாரங்களுடன் நிரூபித்தார். அவர் அவர்களுக்கு நாற்பது நாளளவும் காட்சியளித்து, இறைவனுடைய அரசைப்பற்றிப் பேசினார். 1 கொரி 15:5-7அப் 13:31யோவா 20:261 யோவா 1:1யோவா 21:1யோவா 21:14மத் 28:9அப் 28:31 ஒருமுறை இயேசு சீடர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அவர் சீடர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமைவிட்டுப் போகவேண்டாம். என் பிதாவின் வாக்குறுதியைக்குறித்து நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களே, நீங்கள் அதற்காகக் காத்திருங்கள். லூக் 24:49யோவா 14:16யோவா 15:26யோவா 14:26-28அப் 2:33யோவா 7:39லூக் 12:12யோவா 16:7-15 ஏனெனில் யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான், ஆனால் இன்னும் சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்கு பெறுவீர்கள்.” மத் 3:11அப் 11:15-161 கொரி 12:13லூக் 3:16தீத் 3:5மாற் 1:8அப் 2:1-4அப் 10:45
பின்பு சீடர்கள் இயேசுவோடு ஒன்றுகூடி இருந்தபோது அவரிடம், “ஆண்டவரே, நீர் இஸ்ரயேலரின் அரசை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும் காலம் இதுவா?” என்று கேட்டார்கள். லூக் 19:11லூக் 17:20தானி 7:27மத் 24:3எசேக் 37:24-27ஏசா 9:6-7எரே 23:5-6எரே 33:15-17
அதற்கு இயேசு அவர்களிடம்: “பிதா தமது அதிகாரத்தால் குறித்து வைத்திருக்கிற நேரங்களையும், காலங்களையும் அறிகிறது உங்களுக்குரியது அல்ல. மத் 24:361 தெச 5:1-2மாற் 13:32உபா 29:29மாற் 10:40தானி 2:21எபே 1:10லூக் 21:24 ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்கள்; அப்பொழுது நீங்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லைவரை, எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார். மத் 28:19மாற் 16:15ரோம 15:19அப் 4:33அப் 5:32அப் 6:8லூக் 24:46-49அப் 2:1-4
இயேசு இதைச் சொன்னபின்பு, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டது. தானி 7:13லூக் 24:50-51மாற் 16:19அப் 1:2எபே 4:8-12யாத் 19:9யோவா 6:62லூக் 21:27
இயேசு மேலே போய்க்கொண்டிருக்கையில், சீடர்கள் வானத்தை நோக்கி மேலே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே நின்றார்கள். லூக் 24:4யோவா 20:12மாற் 16:5வெளி 7:14அப் 10:30தானி 7:9மத் 17:2மத் 28:3 அவ்விருவர் சீடர்களிடம், “கலிலேயரே, வானத்தைப் பார்த்துக்கொண்டு நீங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு மீண்டும் உங்களிடம் வருவார். பரலோகத்திற்கு அவர் போவதை நீங்கள் கண்டவிதமாகவே, அவர் மீண்டும் வருவார்” என்றார்கள். வெளி 1:71 தெச 4:16மாற் 13:26யோவா 14:3மத் 24:30மத் 16:27மத் 25:31தானி 7:13-14
மத்தியா சீடனாக தெரிந்தெடுக்கப்படுதல்
பின்பு அவர்கள், ஒலிவமலை எனப்பட்ட அந்த மலையிலிருந்து எருசலேமுக்குச் சென்றார்கள். அது பட்டணத்திலிருந்து ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரத்தில் இருந்தது. லூக் 24:52மத் 21:1லூக் 24:50லூக் 21:37மத் 24:3மத் 26:30சகரி 14:4யோவா 11:18 அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள மேலறைக்குச் சென்றார்கள். அப் 20:8லூக் 22:12மாற் 14:15மத் 10:2-4மாற் 2:14அப் 10:9-33அப் 12:17அப் 2:38
அங்கே பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா;
பிலிப்பு, தோமா,
பர்தொலொமேயு, மத்தேயு;
அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் வந்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாய்கூடி தொடர்ச்சியாக மன்றாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பெண்களும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரருங்கூட இருந்தார்கள். அப் 6:4எபே 6:18அப் 2:42கொலோ 4:2ரோம 12:12லூக் 18:1மத் 18:19-20மத் 21:22
அந்நாட்கள் ஒன்றில், விசுவாசிகளின் நடுவே பேதுரு எழுந்து நின்றான். அங்கு கூடியிருந்தவர்களோ கிட்டத்தட்ட நூற்றிருபது பேராய் இருந்தனர். 1 கொரி 15:6அப் 21:20சங் 32:5-6வெளி 3:4யோவா 21:23லூக் 22:32வெளி 11:13யோவா 14:12 பேதுரு அவர்களிடம், “பிரியமானவர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைக்குறித்து, பரிசுத்த ஆவியானவர் வெகுகாலத்திற்கு முன்பு, தாவீதின் மூலமாய்ப் பேசினார். அந்த வேதவசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது. சங் 41:9யோவா 13:18சங் 55:12-15அப் 1:20யோவா 12:38-40மத் 26:56மத் 26:54யோவா 18:2-8 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.” அப் 1:25அப் 20:24யோவா 17:12யோவா 6:70-71மாற் 3:19அப் 21:19எபே 4:11-12லூக் 22:47
அவன் தனது கொடிய செயலுக்கு வெகுமதியாகப் பெற்ற பணத்தைக்கொண்டு, ஒரு வயல் வாங்கப்பட்டது; அவன் அங்கே தலைகீழாக விழுந்தான். அவனது வயிறு வெடித்து, குடல்கள் எல்லாம் வெளியே சிதறி மரித்தான். மத் 27:3-10சங் 55:23மத் 26:14-15சங் 55:152இராஜா 5:20-272 பேது 2:15-16யோபு 20:12-15யோசு 7:21-26 எருசலேமிலுள்ள ஒவ்வொருவரும், இதைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள், அந்த வயல் நிலத்தைத் தங்கள் மொழியில் அக்கெல்தமா என்று சொல்லுகிறார்கள். அக்கெல்தமா என்றால், இரத்தநிலம் என்று அர்த்தமாகும். 2 சாமு 2:16அப் 2:22அப் 21:40மத் 28:15
மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இது எழுதப்பட்டுள்ளது: சங் 69:25சங் 109:8-15அப் 1:25லூக் 24:44அப் 13:33லூக் 20:42சகரி 5:3-4
“ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக;
அதில் யாரும் குடியேறாதிருப்பார்களாக,’ 1
என்பதும்,
“ ‘அவனுடைய பதவியை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்.’ 2
எனவே கர்த்தராகிய இயேசு நமது மத்தியில் இருந்த காலம் முழுவதும் நம்மோடு இருந்த ஒருவரைத் தெரிந்தெடுப்பது அவசியமாகும். யோவா 15:27லூக் 10:1-22 சாமு 5:2உபா 31:2யோவா 10:1-9எண் 27:171 இராஜா 3:7 யோவான் திருமுழுக்கு கொடுத்த காலத்தின் தொடக்கத்திலிருந்து, இயேசு நம்மிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்வரைக்கும், அவன் நம்முடனேகூட இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்படி இருந்தவர்களில் ஒருவன் நம்முடனேகூட, அவர் உயிருடன் எழுந்ததற்குச் சாட்சியாய் இருக்கவேண்டும்” என்றான். அப் 1:2அப் 1:8-9அப் 4:33மாற் 1:1-8அப் 13:24-25எபி 2:3யோவா 1:28-51யோவா 15:27
எனவே அவர்கள்: யுஸ்து என்னும் பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இரண்டுபேர்களை முன்னிறுத்தினார்கள். அப் 15:22அப் 1:26 பின்பு அவர்கள் மன்றாடி, “கர்த்தாவே, நீர் எல்லோருடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர், இந்த இருவரில் நீர் யாரைத் தெரிந்துகொண்டீர் என்பதை எங்களுக்குக் காண்பியும். 1 சாமு 16:7அப் 15:8எபி 4:13எரே 17:10அப் 14:23வெளி 2:23அப் 6:6ரோம 8:27 யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு போவதற்காக கைவிட்டுப்போன, இந்த அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு நீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பியும்” என்றார்கள். 1 கொரி 9:2ரோம 1:5யோவா 17:12யோவா 6:70-71அப் 1:16-21கலா 2:81 நாளாக 10:13-14யூதா 1:6-7 அதற்குப் பின்பு, அவர்கள் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலருடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான். லேவி 16:8யோசு 18:101 சாமு 14:41-42யோனா 1:71 நாளாக 24:5அப் 2:14நீதி 16:22அப் 13:19