அப்போஸ்தலருடைய நடபடிகள் 13

Acts 13

அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே இறைவாக்கினரும், ஆசிரியரும் இருந்தார்கள். பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூசியஸ், அரசனான ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோரே இவர்கள். அப் 4:36அப் 15:35அப் 11:22-27அப் 13:9கலா 2:91 கொரி 14:24-25அப் 15:32எபே 4:11 அவர்கள் கர்த்தரை வழிபட்டு உபவாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “நான் அவர்களை அழைத்த ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் எனக்கென வேறுபிரித்துவிடுங்கள்” என்றார். கலா 1:15அப் 9:151 கொரி 12:112 தீமோ 1:11ரோம 1:1அப் 14:26தானி 9:31 தீமோ 2:7 எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள். அப் 6:62 தீமோ 2:21 தீமோ 4:14அப் 13:2அப் 14:23அப் 14:261 தீமோ 5:223 யோவா 1:8

சீப்புரு தீவிற்கு பிரயாணம்

அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள். அப் 4:36அப் 13:2அப் 11:19அப் 20:23அப் 27:4 அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான். அப் 13:14அப் 13:46அப் 12:12அப் 14:1அப் 17:17அப் 18:4அப் 19:8அப் 9:20

அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், பொய் தீர்க்கதரிசியுமான பர்யேசு என்னும் ஒருவனைச் சந்தித்தார்கள். மத் 7:151 யோவா 4:12 கொரி 11:13உபா 13:1-3யாத் 22:18எசேக் 13:10-16எரே 23:14-15மத் 16:17 அவன் செர்கியுபவுல் என்னும் அதிபதியின் உதவியாளனாய் இருந்தான். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்துவர ஆளனுப்பினான். அப் 13:12அப் 19:38அப் 18:12நீதி 18:15அப் 13:81 தெச 5:21அப் 17:11-12ஓசி 14:9 ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று, அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடைசெய்ய முயற்சித்தான். எலிமா என்பது மந்திரவாதி என்ற அவனது பெயரின் அர்த்தமாகும். 2 தீமோ 3:82 தீமோ 4:14-15அப் 13:6-7அப் 13:12அப் 9:361 இராஜா 22:24அப் 6:7அப் 8:9 அப்பொழுது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நேரே எலிமாவைப் பார்த்துச் சொன்னதாவது, மீகா 3:8அப் 4:8அப் 2:4அப் 7:55மாற் 3:5அப் 4:31லூக் 20:17 “பிசாசின் பிள்ளையே, எல்லா நீதிக்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும் தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நேர்வழிகளைப் புரட்டுவதை நீ ஒருபோதும் நிறுத்தமாட்டாயோ? யோவா 8:442 கொரி 11:3மத் 13:38கலா 1:7ஓசி 14:9லூக் 11:521 யோவா 3:8அப் 8:20-23 இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கிறது. நீ இப்பொழுது குருடனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காணமாட்டாய்” என்றான். யாத் 9:3சங் 32:41 சாமு 5:11எபி 10:312 பேது 2:17யோவா 9:39யோபு 19:211 சாமு 5:6-7

உடனே அவன் பார்வை மங்கியது, இருளும் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன் கையைப் பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான். நடந்ததை அந்த அதிபதி கண்டபோது, அவன் கர்த்தருடைய போதனையைக்குறித்து வியப்படைந்து விசுவாசித்தான். 2 கொரி 10:4-5அப் 13:7லூக் 4:22அப் 13:49அப் 15:35அப் 19:7அப் 28:7அப் 6:10

பிசிதியாவிலுள்ள அந்தியோகியாவில் பவுல்

பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குச் சென்றார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிப் போவதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுப் போனான். அப் 15:38அப் 12:12அப் 13:5-6அப் 14:24-25அப் 2:10அப் 27:52 தீமோ 4:11அப் 27:13 அவர்கள் பெர்கேவிலிருந்து பிசீதியாவைச் சேர்ந்த அந்தியோகியாவுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளிலே அவர்கள் ஜெப ஆலயத்திற்குள்ளே போய் உட்கார்ந்தார்கள். அப் 16:13அப் 13:5அப் 14:19அப் 17:2அப் 18:4அப் 13:42அப் 13:44அப் 19:8 மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் வாசிக்கப்பட்ட பின்பு, ஜெப ஆலயத் தலைவர்கள் அவர்களுக்குச் செய்தி அனுப்பி, “சகோதரரே, மக்களை உற்சாகப்படுத்தக்கூடிய செய்தி உங்களிடம் இருந்தால், நீங்கள் பேசுங்கள்” என்றார்கள். எபி 13:22அப் 15:21மாற் 5:221 கொரி 14:3அப் 13:27அப் 18:17அப் 22:1லூக் 4:16-18

பவுல் எழுந்து, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மக்களே, இறைவனுக்குப் பயப்படுகிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். அப் 12:17அப் 10:2அப் 13:261 இராஜா 8:40அப் 10:35அப் 13:42-43அப் 13:46அப் 19:33 இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது தந்தையரைத் தெரிந்துகொண்டார்; அவர் அந்த மக்களை, அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால், அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார். உபா 7:6-8அப் 7:2-53ஏசா 63:9-14சங் 105:23-241 பேது 2:91 சாமு 4:8ஆமோ 2:10உபா 10:22 ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைவனத்திலே அவர்களின் நடத்தையைச் சகித்துக்கொண்டார். அப் 7:36அப் 7:39-43ஆமோ 5:25-26உபா 1:31உபா 9:21-24உபா 9:7யாத் 16:2யாத் 16:35 கானானில் இருந்த ஏழு நாட்டு மக்களை மேற்கொண்டு, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். உபா 7:1சங் 78:55அப் 7:45யோசு 14:1யோசு 19:51ஆதி 17:8ஆதி 12:5யோசு 18:10 இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் ஆயிற்று. நியாயாதி 2:161 சாமு 3:201 நாளாக 17:61 சாமு 12:112இராஜா 23:222 சாமு 7:11அப் 3:24நியாயாதி 3:10

“இதற்குப்பின், இறைவாக்கினன் சாமுயேலின் காலம்வரைக்கும், இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார். பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது இறைவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுவின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தான். 1 சாமு 10:11 சாமு 15:11 சாமு 10:21-261 சாமு 11:151 சாமு 12:12-191 சாமு 8:5 இறைவன் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார்.” இறைவன் தாவீதைக்குறித்து சாட்சியாக: “ஈசாயின் மகனான தாவீது என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன்; அவன் செய்யவேண்டும் என்று நான் விரும்பின எல்லாவற்றையும் அவன் செய்வான்” என்று சொன்னார். 1 சாமு 13:13-141 இராஜா 15:51 சாமு 16:13சங் 78:70-721 சாமு 16:11 சாமு 15:261 சாமு 15:28எசேக் 37:24-25

“தாவீதினுடைய சந்ததியிலே, அவர் வாக்குப்பண்ணியபடி, இயேசு என்னும் இரட்சகரை, இஸ்ரயேலுக்கு இறைவன் கொண்டுவந்தார். மத் 1:1சங் 132:11வெளி 22:16அப் 13:32யூதா 1:25தீத் 3:3-62 பேது 3:22 சாமு 7:12 இயேசுவின் வருகைக்கு முன்னதாக, எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் மனந்திரும்புதலைக்குறித்தும் திருமுழுக்கைக்குறித்தும் யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தான். அப் 1:22அப் 10:37அப் 19:3-4லூக் 3:2-20மத் 3:1-11மாற் 1:2-8யோவா 1:15-18யோவா 1:6-8 யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப்பின் வருகிறார். அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’ மத் 3:11யோவா 1:26-27மாற் 1:7அப் 20:24யோவா 1:20-23லூக் 3:15-162 கொரி 4:52 தீமோ 4:7

“சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கிற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது. கொலோ 1:5எபே 1:13ஏசா 46:13லூக் 1:69லூக் 1:77ரோம 1:16அப் 10:35அப் 13:43 எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும், இயேசுவை யாரெனப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததின் மூலம், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள். அப் 3:17அப் 15:21அப் 26:22-23லூக் 24:20லூக் 24:24-27ரோம 11:251 கொரி 2:82 கொரி 3:14 இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதுங்கூட, அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள். யோவா 19:4லூக் 23:14-16லூக் 23:21-25மத் 27:22-25அப் 3:13-14யோவா 18:38லூக் 23:4-5மத் 27:19 இயேசுவைக்குறித்து வேதத்தில் எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்துமுடித்த பின்பு, அவருடைய உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள். லூக் 23:53யோவா 19:28யோவா 19:301 கொரி 15:4அப் 5:30யோவா 19:36-42லூக் 24:44மத் 27:57-60 ஆனால் இறைவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார். அப் 2:24அப் 17:31மத் 28:6அப் 10:40அப் 2:32அப் 3:13அப் 3:15அப் 3:26 இயேசுவோடுகூட கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களுக்கு பல நாட்கள் அவர் காணப்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கிறார்கள். அப் 1:3லூக் 24:481 கொரி 15:5-7அப் 1:11அப் 1:8மத் 28:16அப் 1:22அப் 10:39

“நாங்கள் உங்களுக்கு நற்செய்தியையே சொல்கிறோம்: இறைவன் நமது தந்தையருக்கு வாக்குப்பண்ணியதை ரோம 4:13அப் 26:6எசேக் 34:23அப் 13:38கலா 3:16-18எரே 23:5மீகா 5:2ரோம 9:4 இயேசுவை உயிருடன் எழுப்பியதாலேயே அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இது இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறது: சங் 2:7எபி 5:5எபி 1:5-6

“ ‘நீர் என்னுடைய மகன்;

இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’ 1

அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து எழுப்பினார் என்ற உண்மை, இந்த வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது: ஏசா 55:3சங் 89:2-4ரோம 6:9சங் 89:19-372 சாமு 7:14-16எசேக் 34:23-24எரே 33:15-17எரே 33:26

“ ‘தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்தமானதும் நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன்.’ 2

அப்படியே இது இன்னுமொரு இடத்தில், சங் 16:10அப் 2:27-31அப் 13:36-37எபி 11:5யோவா 3:36யோவா 8:51லூக் 2:26சங் 49:9

“ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’ 3

என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

“தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவன் நித்திரையடைந்தானே; அவன் தனது முற்பிதாக்களுடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவனது உடலும் அழிந்துபோனது. அப் 2:291 இராஜா 2:102 சாமு 7:12அப் 13:221 நாளாக 18:141 நாளாக 13:2-41 நாளாக 15:25-291 நாளாக 17:11 ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை. அப் 13:30அப் 2:24

“ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது’ என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன். லூக் 24:471 யோவா 2:122 கொரி 5:18-21அப் 5:31கொலோ 1:14அப் 2:38அப் 28:28எபே 1:7 மோசேயினுடைய சட்டத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட முடியாதிருந்த எல்லாப் பாவங்களிலுமிருந்தும் விடுதலையாகி, இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், அவர் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். கலா 2:16ரோம 10:4எபி 7:19ரோம 8:3ரோம 10:10ரோம 8:1ரோம 3:19ரோம 4:15 ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது: மல்கி 4:1ஆப 1:5எபி 12:25எபி 3:12மல்கி 3:2எபி 2:3மத் 3:9-12ஏசா 29:14

“ ‘பாருங்கள், ஏளனம் செய்வோரே! ஆப 1:51 பேது 4:17ரோம 11:7-14கொலோ 1:26-27ஏசா 28:14-22மத் 22:7-10நீதி 5:121 தெச 2:16

அதிசயப்பட்டு சிதறிப்போங்கள்.

ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன்.

அதை யாராவது உங்களுக்குச் சொன்னாலும்,

நீங்கள் ஒருபோதும் நம்பமாட்டீர்கள்.’ ” 4

பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக்குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள். அப் 28:28அப் 10:33அப் 13:14எசேக் 3:6மத் 11:21மத் 19:30 கூடியிருந்த மக்கள் கலைந்துபோனபின், அநேக யூதரும், யூத விசுவாசத்தை பின்பற்றிய பக்தியுள்ளோரும், பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். பவுலும் பர்னபாவும் தங்களோடு வந்தவர்களுடன் பேசி, அவர்களை இறைவனுடைய கிருபையில் தொடர்ந்து இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள். அப் 11:23அப் 14:22எபி 12:15எபி 13:92 கொரி 5:112 கொரி 6:12 யோவா 1:92 பேது 3:17-18

அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கும்படி கூடியிருந்தார்கள். ஆதி 49:10ஏசா 11:10ஏசா 60:8சங் 110:3 மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருப்பதை யூதர்கள் கண்டபோது, அவர்கள் பொறாமையினால் நிறைந்து, அவர்கள் பவுல் சொல்வதற்கு எதிரிடையாய் பேசி, விரோதித்து தூஷித்தார்கள். யூதா 1:10அப் 18:61 தெச 2:16அப் 19:9அப் 5:171 கொரி 3:31 பேது 4:4அப் 17:5

அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். அப் 28:28மத் 21:43அப் 18:5-6அப் 26:20அப் 3:26ரோம 2:10அப் 13:26அப் 22:21 ஏனெனில், கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது இதுவே: ஏசா 49:6ஏசா 42:6லூக் 2:32ஏசா 45:22சகரி 8:20-23ஓசி 1:10ஏசா 2:1-3ஏசா 24:13-16

“ ‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும்

நீ என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி,

நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்.’ 5

யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். ரோம 8:29-30எபே 1:4ரோம 11:7யோவா 10:26-27யோவா 10:16யோவா 11:52எபே 2:5-102 தெச 2:13-14

அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது. அப் 12:24அப் 19:10பிலி 1:13-14அப் 19:26அப் 6:7அப் 9:42 ஆனால் யூதர்கள் பக்தியும், உயர்ந்த மதிப்புக்குரிய பெண்களையும் அந்தப் பட்டணத்திலுள்ள முதன்மைவாய்ந்தவரையும் தூண்டிவிட்டார்கள். அவர்கள் துன்புறுத்தலை ஏற்படுத்தி, பவுலையும் பர்னபாவையும் அந்தப் பகுதியிலிருந்து துரத்திவிட்டார்கள். அப் 13:45அப் 14:19அப் 14:22 தீமோ 3:11அப் 17:13அப் 21:27அப் 16:37-391 தெச 2:15-16 எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள். மத் 10:14அப் 18:6லூக் 9:5அப் 14:21மாற் 6:11அப் 14:1அப் 14:19அப் 16:2 சீடர்களோ மகிழ்ச்சியினாலும் பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள். ரோம 15:131 தெச 1:6அப் 4:31கலா 5:22ரோம 5:32 கொரி 8:2அப் 2:4மத் 5:12