எசேக்கியேல் 1

Ezekiel 1

தொடக்க உயிரினங்கள்

எனது முப்பதாம் வருடம் நான்காம் மாதத்தின் ஐந்தாம் நாளில் நான் கேபார் நதியருகே நாடுகடத்தப்பட்டோர் மத்தியில் இருந்தேன். அப்பொழுது வானம் திறக்கப்பட்டு இறைவனின் தரிசனங்களை அங்கு கண்டேன். அப் 7:56எசேக் 11:24மத் 3:16வெளி 19:11அப் 10:11எசேக் 10:15எசேக் 10:20லூக் 3:21

அது யோயாக்கீன் அரசன் நாடுகடத்தப்பட்ட ஐந்தாம் வருடம் ஐந்தாம் மாதம். 2இராஜா 24:12-15எசேக் 20:1எசேக் 40:1எசேக் 8:1எசேக் 29:17எசேக் 29:1எசேக் 31:1 அப்பொழுது பாபிலோன் நாட்டிலுள்ள கேபார் நதியருகே இருந்த பூசியின் மகனும், ஆசாரியனுமான எசேக்கியேலாகிய எனக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அங்கே அவருடைய கரம் என்னுடன் இருந்தது. எசேக் 3:14எசேக் 3:221 இராஜா 18:462இராஜா 3:15எசேக் 33:22எசேக் 37:1எசேக் 40:1எசேக் 8:1

நான் பார்த்தபோது, வடக்கேயிருந்து ஒரு புயல்காற்று வருவதைக் கண்டேன். அது மின்னலடிக்கும் பெருமேகமாக பளிச்சிடும் ஒளியினால் சூழப்பட்டிருந்தது. அந்த மேகத்தின் உள்ளிருந்த நெருப்பின் நடுப்பகுதி கதகதக்கும் உலோகம் போன்று காணப்பட்டது. எசேக் 1:27எசேக் 8:2எரே 23:19யாத் 19:16-18ஏசா 21:1எரே 1:13-14எரே 25:322 நாளாக 5:13 அந்த நெருப்பில் உயிரினங்கள் போன்ற நான்கு உருவங்கள் இருந்தன. தோற்றத்தில் அவை மனித உருவத்தைக் கொண்டிருந்தன. வெளி 4:6-8எசேக் 1:26வெளி 6:6 ஆனாலும் அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு சிறகுகளும் இருந்தன. எசேக் 10:141 இராஜா 6:24-27யாத் 25:20எசேக் 1:15எசேக் 1:8-11எசேக் 10:10எசேக் 10:21-22ஏசா 6:2 அவைகளின் கால்கள் நேராகவும், பாதங்கள் கன்றுக்குட்டிகளின் உள்ளங்கால்களைப் போலவும் இருந்தன. அவை மினுக்கப்பட்ட வெண்கலம்போல் மின்னிக்கொண்டிருந்தன. வெளி 1:15தானி 10:6எசேக் 1:13சங் 104:4லேவி 11:3லேவி 11:47 அவைகளின் சிறகுகளின்கீழ் நான்கு புறங்களிலும் மனிதக் கைகள் இருந்தன. அவை நான்குமே முகங்களையும் இறகுகளையும் கொண்டிருந்தன. எசேக் 10:21எசேக் 1:17எசேக் 10:11எசேக் 10:18எசேக் 10:2எசேக் 10:7-8எசேக் 8:3ஏசா 6:6 அவைகளின் செட்டைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருந்தன. அவை போகும்போது ஒவ்வொன்றும் திரும்பாமல் நேர்முகமாகவே சென்றன. எசேக் 10:221 கொரி 1:102 நாளாக 3:11-12எசேக் 1:11-12எசேக் 10:11லூக் 9:51லூக் 9:62நீதி 4:25-27

அவைகளின் முகங்கள் அமைந்திருந்த விதமாவது: அவை நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மனித முகமும், வலதுபுறத்தில் சிங்கமுகமும், இடது புறத்தில் எருது முகமும், அதோடு ஒவ்வொன்றுக்கும் கழுகு முகமும் இருந்தன. எசேக் 10:14வெளி 4:71 கொரி 9:9-101 நாளாக 12:81 கொரி 14:20தானி 7:4உபா 28:49ஏசா 40:31 இவ்வாறாக அவைகளின் முகங்கள் இருந்தன. அவைகளின் சிறகுகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் இரண்டு ஜோடி சிறகுகள் இருந்தன. இச்சிறகுகள் இரு பக்கங்களிலுமிருந்த உயிரினங்களின் இறகுகளைத் தொட்டுக்கொண்டிருந்தன. மற்ற இரு சிறகுகள் அவைகளின் உடல்களை மூடிக்கொண்டிருந்தன. ஏசா 6:2எசேக் 1:23எசேக் 10:16எசேக் 10:19 அவை ஒவ்வொன்றும் நேர்முகமாகவே சென்றன. ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவை திரும்பிப்பாராமலே சென்றன. எசேக் 1:9எசேக் 1:17எசேக் 1:20-21எசேக் 10:22எபி 1:14 அவ்வுயிரினங்களின் தோற்றம் எரிகிற நெருப்புத்தழலைப்போல் அல்லது தீப்பந்தம்போல் இருந்தன. உயிரினங்களுக்குள்ளே முன்னும் பின்னுமாக நெருப்பு அசைவாடிக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு பிரகாசமாயிருந்தது. அந்த நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது. சங் 104:4வெளி 4:5தானி 10:5-6எசேக் 1:7ஆதி 15:17மத் 28:3வெளி 10:1வெளி 18:1 அந்த உயிரினங்கள் முன்னும் பின்னுமாக மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன. மத் 24:27சகரி 4:10தானி 9:21லூக் 17:24மத் 24:31மாற் 13:27சங் 147:15சகரி 2:3-4

நான்கு முகங்களையுடைய அவ்வுயிரினங்களை நான் பார்த்தபோது, அவை ஒவ்வொன்றுக்கும் அருகே தரையில் ஒவ்வொரு சக்கரங்களைக் கண்டேன். தானி 7:9எசேக் 10:9எசேக் 1:19-21எசேக் 1:6வெளி 4:7எசேக் 10:13-17 அச்சக்கரங்களின் தோற்றமும், அமைப்பும் எப்படியிருந்ததென்றால், மரகதக் கற்களைப்போல் மினுங்கிக் கொண்டிருந்தன. அவை நான்கும் ஒரேவிதமாகக் காணப்பட்டன. அச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன. தானி 10:6எசேக் 10:9-11எபே 3:10யாத் 39:13யோபு 9:10சங் 36:6சங் 40:5ரோம 11:33 சக்கரங்கள் நகர்ந்தபோது, அவ்வுயிரினங்கள் நோக்கும் நான்கு திசைகளில் ஏதாவது ஒரு திசையில் போயின. அவ்வுயிரினங்கள் ஓடும்போது சக்கரங்கள் திரும்புவதேயில்லை. எசேக் 1:9எசேக் 1:12எசேக் 10:1-11ஏசா 55:11 அவைகளின் வளையங்கள் உயரமாயும், பிரமிக்கத்தக்கதாயும் இருந்தன. அந்த நான்கு வளையங்களும் சுற்றிலும் கண்கள் நிறைந்தனவாய் இருந்தன. எசேக் 10:12வெளி 4:6வெளி 4:8ஏசா 55:9யோபு 37:22-24நீதி 15:3சங் 77:16-19சங் 97:2-5

உயிரினங்கள் புறப்படும்போது, அவைகளின் அருகே இருந்த சக்கரங்களும் புறப்பட்டன. உயிரினங்கள் தரையைவிட்டு மேலெழும்பும்போது, சக்கரங்களும் மேலெழும்பின. எசேக் 10:16எசேக் 10:19சங் 103:20 உயிரினங்களின் ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவ்வுயிரினங்களும் செல்லும். சக்கரங்களும் அவைகளோடு எழும்பிச் செல்லும். ஏனெனில், உயிரினங்களின் ஆவி அச்சக்கரங்களிலேயே இருந்தது. எசேக் 1:12எசேக் 10:171 கொரி 14:32சகரி 6:1-8 உயிரினங்கள் நகர்ந்தபோது, சக்கரங்களும் நகர்ந்தன. உயிரினங்கள் அசைவற்று நின்றபோது, அவைகளும் அசைவற்று நின்றன. உயிரினங்கள் தரையிலிருந்து எழும்பியபோது, அந்த சக்கரங்களும் அவைகளுடன் சேர்ந்து மேலெழுந்தன. ஏனெனில் உயிரினங்களின் ஆவி அந்த சக்கரங்களிலே தான் இருந்தது. எசேக் 10:17எசேக் 1:19-20ரோம 8:2

அவ்வுயிரினங்களின் தலைகளுக்கு மேலாக ஆகாயவிரிவு போன்ற அமைப்பு பரந்திருக்கக் காணப்பட்டது. அது பனிக்கட்டிபோல் பளபளப்பாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்தது. எசேக் 10:1எசேக் 1:26வெளி 4:6யாத் 24:10யோபு 37:22வெளி 21:11வெளி 4:3 அந்த ஆகாயவிரிவின்கீழ் உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று நோக்கியபடி விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் தங்கள் உடலை மூடிக்கொள்ள சிறகுகள் இருந்தன. எசேக் 1:11-12எசேக் 1:24யோபு 4:18லூக் 17:10சங் 89:7 அந்த உயிரினங்கள் நகர்ந்தபோது, அவைகளுடைய செட்டைகளின் சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், எல்லாம் வல்ல இறைவனுடைய குரலைப் போலவும், இராணுவத்தின் இரைச்சலைப்போலவும் இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறகுகளைக் கீழே இறக்கிவிட்டன. எசேக் 43:2தானி 10:6சங் 29:3-9வெளி 1:15வெளி 19:6சங் 68:33சங் 18:13யோபு 37:4-5

அவை இறகுகளைத் இறக்கிவிட்டு நின்றபோது, அவைகளின் தலைகளுக்கு மேலாய் காணப்பட்ட ஆகாயவிரிவின் மேலிருந்து ஒரு குரல் ஒலித்தது. எசேக் 1:22 அவைகளின் தலைகளுக்கு மேலிருந்த ஆகாயவிரிவின் மேலே காணப்பட்ட, இரத்தினக்கற்களினாலான அரியணைபோன்ற ஒன்று காணப்பட்டது. மேலே, மிக உயரத்தில் அரியணையில் ஒரு மனிதனைப் போன்ற உருவம் இருந்தது. எசேக் 10:1யாத் 24:10வெளி 1:13தானி 10:18எசேக் 1:22தானி 7:9-10எபே 1:21-22எபி 12:2 அந்த உருவத்தின் இடுப்பைப்போல் தோன்றிய மேல்பாகத்தில், அவர் நெருப்புக்கனல் ஒளிவீசும் உலோகத்தைப்போல் காணப்பட்டார். கீழேயுள்ள பாகமோ நெருப்பைப்போல் காணப்பட்டது. பிரகாசமான வெளிச்சம் அவரைச் சுற்றி இருந்தது. எசேக் 1:4எசேக் 8:2எபி 12:29சங் 97:2உபா 4:24சங் 50:32 தெச 1:8வெளி 1:14-16 மழைபெய்யும் நாளில் மேகங்களில் உள்ள வானவில்லின் தோற்றத்தைப்போல, அவரைச் சுற்றியுள்ள பிரகாசமும் இருந்தது. வெளி 10:1வெளி 4:3ஆதி 17:3எசேக் 3:23அப் 9:4தானி 8:17யாத் 24:16எசேக் 8:4

இது யெகோவாவின் மகிமையின் சாயலின் தோற்றம், நான் அதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; பேசுகிற ஒருவரின் குரலையும் கேட்டேன்.