ஆபகூக்கின் மன்றாட்டு
இறைவாக்கினன் ஆபகூக், பாடிய மன்றாட்டு. சங் 7:1-17சங் 86:1-17சங் 90:1-17
யெகோவாவே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், சங் 85:6சங் 90:13-17ஓசி 6:2-3ஏசா 51:9-11புலம் 3:32ஆப 3:16ஏசா 54:8ஏசா 63:15
யெகோவாவே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் நிமித்தம்
நான் வியப்படைந்து நிற்கிறேன்.
எங்கள் நாட்களிலும் அவற்றைப் புதுப்பியும்,
எங்கள் காலத்திலும் அவற்றை அனைவரும் அறியும்படி செய்யும்;
உமது கோபத்திலும், எங்களுக்கு இரக்கத்தை நினைத்தருளும்.
இறைவன் தேமானிலிருந்தும் 1, உபா 33:2ஆமோ 1:12ஒபதி 1:9சங் 4:4ஏசா 6:3எரே 49:7சங் 68:17வெளி 5:13-14
பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் 2 வந்தார்.
அவரது மகிமை, வானங்களை மூடியது;
அவரது துதி, பூமியை நிரப்பியது.
அவரின் மாட்சிமை சூரிய உதயத்தைப்போல் இருந்தது; மத் 17:2ஏசா 60:19-20யாத் 14:20யோபு 26:14வெளி 22:51 தீமோ 6:16சங் 104:2யாத் 13:21
அவரது கையிலிருந்து ஒளிக்கதிர்கள் சுடர் வீசின,
அங்கே அவரது மகத்துவ வல்லமை மறைந்திருந்தது.
கொள்ளைநோய் அவருக்கு முன்பாகச் சென்றது; யாத் 12:29-30நாகூ 1:2-3எண் 16:46-49உபா 32:24எண் 14:12சங் 18:7-13சங் 78:50-51
வாதைநோய் அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்தது.
அவர் நின்று பூமியை அளந்தார்; ஆதி 49:26நாகூ 1:5உபா 33:15ஏசா 51:6ஏசா 64:1-3யோசு 11:18-23மீகா 5:8சகரி 14:4-5
அவருடைய பார்வையைக் கண்டு நாடுகள் நடுங்கின.
பூர்வீக மலைகள் நொறுங்கின,
என்றுமுள்ள குன்றுகள் வீழ்ந்தன;
அவருடைய வழிகளோ நித்தியமானவை.
கூசானின் கூடாரங்கள் துன்பத்திற்குள்ளானதையும், யாத் 15:14-16ஆதி 10:6-7ஆதி 25:1-4நியாயாதி 7:24-25யோசு 2:10யோசு 9:24எண் 22:3-4எண் 31:2-12
மீதியானியரின் குடியிருப்புகள் துயரத்திற்குள்ளானதையும் நான் கண்டேன்.
யெகோவாவே ஆறுகளின்மேல், கோபங்கொண்டீரோ? சங் 68:17உபா 33:26-27யாத் 14:21-22ஏசா 50:2சங் 114:3சங் 114:5சங் 18:10ஆப 3:15
நீரோடைகளுக்கெதிராகவும் உமது கடுங்கோபமாக இருந்ததோ?
உமது குதிரைகள்மேலும்,
உமது வெற்றிகொண்ட தேரின்மேலும் நீர் சென்றபோது,
கடலுக்கு எதிராய் நீர் விரோதமாயிருந்தீரோ?
நீர் உமது வில்லை உறையிலிருந்து எடுத்து, சங் 7:12-13சங் 105:41சங் 78:15-16லூக் 1:72-751 கொரி 10:4உபா 32:23யாத் 17:6எபி 6:13-18
அநேக அம்புகளை எய்வதற்காகத் தொடுத்தீர்.
நீர் ஆறுகளைக் கொண்டு பூமியைப் பிளந்தீர்;
மலைகள் உம்மைக் கண்டு துடித்தன. ஏசா 43:20எரே 4:24யோசு 4:23-24சங் 93:3சங் 98:7-8எபி 11:29யோசு 4:18யாத் 19:16-18
பெருவெள்ளம் அடித்துக் கொண்டோடியது;
ஆழம் குமுறியது,
அது தன் கைகளை அலைகளுக்கு மேலே உயர்த்தியது.
உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும், சங் 144:5-6யோசு 10:11-13சங் 18:12-14ஏசா 28:21ஏசா 38:8சங் 19:4சங் 77:17-18
உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும்,
சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன.
கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர். எரே 51:33மீகா 4:12-13அப் 13:19ஆமோ 1:3ஏசா 41:15யோசு 6:1-12நெகே 9:22-24எண் 21:23-35
கோபத்தில் பிற நாட்டு மக்களை மிதித்தீர்.
உமது மக்களை விடுதலை செய்யவும், சங் 110:6சங் 105:15யாத் 14:13-14யாத் 15:1-2யோசு 10:11யோசு 10:24யோசு 10:42யோசு 11:12
அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர்.
நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர்.
நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர்.
மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல, சகரி 9:14தானி 11:40சங் 118:10-12யாத் 1:10-16யாத் 1:22யாத் 11:4-7யாத் 12:12-13யாத் 12:29-30
அவனுடைய இராணுவவீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப்போல் வந்தார்கள்.
அப்பொழுது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே
அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர்.
கடலை உமது குதிரைகளினால் மிதித்து, சங் 77:19ஆப 3:8யாத் 15:8
ஆற்றின் பெருவெள்ளத்தை பொங்கியெழப் பண்ணினீர்.
நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது. எரே 23:9தானி 10:8ஆப 1:5-11ஆப 3:22 தெச 1:6-9எரே 25:9-11எரே 45:3-5சங் 119:120
அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது;
என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது;
என் கால்கள் நடுங்கின. எனினும் எங்கள்மேல் படையெடுத்த,
நாட்டின்மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக,
நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், எரே 5:17யோவே 1:16-18ஆமோ 4:6-10உபா 28:15-18உபா 28:30-41ஆகா 2:16-17எரே 14:2-8யோவே 1:10-13
திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும்,
ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும்,
வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும்,
ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும்,
மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்,
நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன், யோபு 13:15மீகா 7:7பிலி 4:4ஏசா 61:10ஏசா 12:2ரோம 5:2-3சங் 25:5சங் 46:1-5
என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.
ஆண்டவராகிய யெகோவாவே என் பெலன்; 2 சாமு 22:34சங் 18:33பிலி 4:13சங் 46:1உபா 32:13சங் 27:12 கொரி 12:9-10ஏசா 58:14
என் கால்களை அவர் மானின் கால்களைப் போலாக்குகிறார்,
என்னை உயர்ந்த இடங்களில் நடக்கப் பண்ணுகிறார்.
எனது கம்பியிசைக் கருவிகளில், இசை இயக்குனருக்காக இசைக்கப்பட்டது.