நான் இஸ்ரயேலைக் குணமாக்கும்போது, ஓசி 7:13ஓசி 6:4மீகா 7:3-7ஓசி 4:2எரே 9:2-6லூக் 13:34லூக் 19:42மத் 23:37
எப்பிராயீமின் பாவங்களும்,
சமாரியாவின் குற்றங்களும் வெளிப்படும்.
அவர்கள் வஞ்சனையைக் கைக்கொள்கிறார்கள்;
திருடர்கள் வீடுகளை உடைத்து உள்ளே போகிறார்கள்,
கொள்ளையர்கள் வீதிகளில் சூறையாடுகிறார்கள்.
அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை லூக் 12:2ஆமோ 8:7எரே 14:10எரே 2:19சங் 90:81 கொரி 4:5எபி 4:13ஓசி 9:9
அவர்கள் உணராதிருக்கிறார்கள்.
அவர்களின் பாவங்கள் அவர்களை மூடிப்போடுகின்றன;
அவை எப்பொழுதும் என்முன் இருக்கின்றன.
“தங்கள் கொடுமையினால் அரசனையும், ரோம 1:32மீகா 7:3எரே 28:1-41 யோவா 4:51 இராஜா 22:131 இராஜா 22:6ஆமோ 7:10-13ஓசி 4:2
பொய்யினால் இளவரசர்களையும் மகிழ்விக்கின்றார்கள்.
அவர்கள் எல்லோரும் விபசாரக்காரர். எரே 9:2யாக் 4:4எரே 5:7-8ஓசி 4:12ஓசி 4:2ஓசி 7:6-7
அவர்கள் அப்பம் சுடும் அடுப்பைப்போல் எரிந்துகொண்டே இருக்கிறார்கள்.
மாவைப் பிசையும் நேரத்திலிருந்து, அது புளித்துப் பொங்கும் நேரம்வரைக்கும்,
அதன் நெருப்பை ஊதவேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் அரசனின் கொண்டாட்ட நாளில், 1 பேது 4:3-4ஏசா 28:1தானி 5:23எபே 5:18ஆதி 40:20சங் 1:11 இராஜா 13:4தானி 5:1-4
இளவரசர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டார்கள்;
அரசன் ஏளனக்காரர்களுடன் கைகோத்திருக்கிறான்.
அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால் மீகா 2:1சங் 10:8-91 சாமு 19:11-152 சாமு 13:28-29ஓசி 7:4ஓசி 7:7நீதி 4:16சங் 21:9
அடுப்பைப்போல் எரிகின்றன;
இரவு முழுவதும் அவர்களின் கோபம், நெருப்புத் தணலைப்போல் எரிகிறது;
காலையில் அது கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருக்கிறது.
அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி, 2இராஜா 15:102இராஜா 15:142இராஜா 15:252இராஜா 15:30ஓசி 7:10ஓசி 8:4ஏசா 43:22ஏசா 64:7
அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள்.
அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்;
ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை.
“எப்பிராயீம் பிற நாடுகளுடன் கலந்துகொள்கிறான்; சங் 106:35எஸ்றா 9:12நெகே 13:23-25எஸ்றா 9:1மல்கி 2:111 இராஜா 18:21ஓசி 5:13ஓசி 5:7
எப்பிராயீம் புரட்டிப் போடாததினால் ஒரு பக்கம் வேகாத அப்பம் போலிருக்கிறான்.
அந்நியர் அவன் பெலத்தை உறிஞ்சுகிறார்கள்; ஓசி 8:7ஏசா 42:22-252இராஜா 13:222இராஜா 13:3-7ஏசா 1:7நீதி 23:352இராஜா 15:19ஏசா 57:1
ஆனால் அவன் அதை உணர்கிறதில்லை.
அவன் தலையில் நரைமயிர் தோன்றிவிட்டது,
ஆயினும் அதையும் அவன் கவனிக்கவில்லை.
இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது. ஓசி 5:5ஏசா 9:13ஆமோ 4:6-13சங் 53:2ஓசி 6:1ஓசி 7:7எரே 25:5-7எரே 3:3
இவையெல்லாம் நடந்துங்கூட,
அவர்கள் தனது இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவுமில்லை,
அவரைத் தேடவுமில்லை.
“எப்பிராயீம் பேதையான புறாவைப் போன்றவன், ஓசி 12:1ஓசி 5:13ஓசி 11:11ஓசி 4:11எரே 2:18ஓசி 9:3நீதி 6:322இராஜா 15:19
அவன் புத்தியில்லாதவனாயும் இருக்கிறான்.
முதலில் அவன் எகிப்தை உதவிக்குக் கூப்பிடுகிறான்;
பின் அசீரியாவினிடத்திற்கும் திரும்புகிறான்.
எப்பிராயீமியர் உதவிகேட்டுப் போகும்போது, எசேக் 12:13உபா 28:15-68உபா 29:22-282இராஜா 17:13-18உபா 31:16-29உபா 32:15-43பிரச 9:12எசேக் 17:20
நான் எனது வலையை அவர்கள்மேல் வீசுவேன்;
ஆகாயத்துப் பறவைகள்போல், அவர்களை நான் இழுத்து வீழ்த்துவேன்;
அவர்கள் ஒன்றாய்கூடும் சத்தத்தை நான் கேட்கும்போது,
நான் அவர்களை எச்சரித்ததுபோல் தண்டிப்பேன்.
அவர்களுக்கு ஐயோ கேடு வருகிறது, ஓசி 9:12ஓசி 11:12புலம் 5:16மத் 23:13-291 யோவா 1:101 பேது 1:18-19உபா 15:15எசேக் 16:23
ஏனெனில், அவர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்.
அவர்களுக்கு அழிவு வருகிறது.
ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் பண்ணியிருக்கிறார்கள்.
நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகிறேன்,
ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.
அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர, யாக் 4:3யோபு 35:9-10எரே 3:10சங் 78:34-37ஆமோ 2:8ஏசா 29:13மீகா 2:11பிலி 3:19
தங்கள் இருதயத்திலிருந்து என்னை நோக்கி அழுவதில்லை.
தானியத்திற்காகவும், புதுத் திராட்சை இரசத்திற்காகவும் மட்டுமே
அவர்கள் பாகால் தெய்வத்திற்குமுன் ஒன்றுகூடுகிறார்கள்.
எனவே அவர்கள் என்னைவிட்டு வழிவிலகிப் போகிறார்கள்.
நான் அவர்களைப் பயிற்றுவித்து பெலப்படுத்தினேன்; நாகூ 1:9சங் 94:122 கொரி 10:52இராஜா 13:232இராஜா 14:25-27அப் 4:25எபி 12:5எரே 17:9
ஆயினும், அவர்கள் எனக்கெதிராகத் தீமையான சூழ்ச்சி செய்கிறார்கள்.
நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்; சங் 78:57ஓசி 9:3எசேக் 23:32சங் 73:9ஓசி 9:6மத் 12:36சங் 12:42 பேது 2:8
ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை.
அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்;
அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம்,
வாளினால் விழுவார்கள்.
இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.