பிடிவாதமுள்ள இஸ்ரயேல்
“யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள். எரே 4:2சங் 68:26உபா 6:13ஆதி 32:28ஏசா 1:10-14ஏசா 65:16எரே 5:2எரே 7:9-10
இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே,
யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே,
யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்;
நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்;
ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை.
நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி, மீகா 3:11ஏசா 10:20ஏசா 52:1ரோம 2:17எரே 21:2மத் 27:531 சாமு 4:3-5தானி 9:24
இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்;
சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர்.
முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்; ஏசா 42:9ஏசா 41:22யோசு 21:45ஏசா 44:7-8ஏசா 45:21ஏசா 43:9ஏசா 46:9-10யோசு 23:14-15
எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன்.
பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.
நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும், அப் 7:51யாத் 32:9சகரி 7:11-12நீதி 29:1எசேக் 3:4-9ரோம 2:5எரே 19:15எரே 5:3
உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும்,
உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன்.
ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்; ஏசா 48:3லூக் 1:70அப் 15:18எரே 44:15-18ஏசா 42:8-9ஏசா 44:7ஏசா 46:10
அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன்.
ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன;
எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’
என்று நீ சொல்லமுடியாது.
இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி. வெளி 4:1ஏசா 42:9ரோம 16:25-26ஏசா 43:19ஏசா 43:8-10யோவா 15:15மத் 10:271 கொரி 2:9
இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ?
“இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன்,
இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள்.
அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன;
நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.
ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’
என்று உன்னால் சொல்லமுடியாது.
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; சங் 58:3ஓசி 5:7எசேக் 16:3-5ஏசா 42:19-20எரே 6:10யோவா 12:39-40மல்கி 2:11மத் 13:13-15
முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை.
நீ எவ்வளவு துரோகி,
பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன்.
நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்; சங் 79:9ஏசா 37:35சங் 106:8சங் 143:11சங் 78:381 சாமு 12:22தானி 9:17-19எசேக் 20:14
எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்;
நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன்.
இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல; 1 பேது 4:12நீதி 17:3யோபு 23:10எபி 12:10-11சங் 66:101 பேது 1:7எரே 9:7மல்கி 3:2-3
உபத்திரவத்தின் சூளையிலே உன்னைச் சோதித்துப்பார்த்தேன்.
என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன். ஏசா 42:8எசேக் 20:9எசேக் 20:14ஏசா 37:351 சாமு 12:22எசேக் 20:22ஏசா 43:25எரே 14:7
என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்?
என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
இஸ்ரயேலுக்கு சுதந்திரம்
“யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே, ஏசா 41:4வெளி 1:8வெளி 22:13ஏசா 44:6வெளி 17:14ரோம 8:28ஏசா 43:11ஏசா 55:3
எனக்குச் செவிகொடு,
நானே அவர்;
ஆரம்பமும் முடிவும் நானே.
என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது; எபி 1:10-12சங் 102:25யாத் 20:11ஏசா 45:18ஏசா 40:26ஏசா 42:5ஏசா 40:12சங் 119:89-91
என் வலதுகரம் வானங்களை விரித்தது;
நான் அவைகளை அழைப்பிக்கின்றபோது,
அவை ஒன்றாய் எழுந்து நிற்கும்.
“நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்: ஏசா 43:9ஏசா 13:17-18எரே 50:21-29ஏசா 13:4-5ஏசா 41:22ஏசா 45:20-21ஏசா 46:10-11எரே 51:20-24
உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது?
யெகோவாவுக்குப் பிரியமானவன்
அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்;
அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும்.
நான், நானே பேசினேன்; யோசு 1:8ஏசா 45:1-2சங் 45:4எசேக் 1:2
மெய்யாகவே நான் அவனை அழைத்தேன்.
நான் அவனைக் கொண்டுவருவேன்,
அவன் தன்னுடைய பணியில் வெற்றிபெறுவான்.
“நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்: யோவா 18:20யோவா 20:21-22ஏசா 45:19ஏசா 61:1-3யோவா 3:34ஏசா 11:1-5லூக் 4:18ஏசா 48:3-6
“முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை;
அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.”
இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமது
ஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார்.
யெகோவா சொல்வது இதுவே, சங் 32:8சங் 25:12யோபு 22:21-22உபா 8:17-18ஏசா 30:20சங் 73:24ஏசா 54:13யோபு 36:22
இஸ்ரயேலரின் பரிசுத்தராகிய உங்கள் மீட்பர் சொல்கிறதாவது:
“உங்கள் இறைவனாகிய யெகோவா நானே,
மிக நன்மையானவற்றை உங்களுக்குக் போதிக்கிறவர் நானல்லவா?
நீங்கள் போகவேண்டிய பாதையில் உங்களை வழிநடத்துகிறவர் நானல்லவா?
என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், உபா 5:29ஏசா 66:12சங் 119:165சங் 81:13-16உபா 32:29ஏசா 45:8லூக் 19:41-42சங் 36:8
உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்;
உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும்.
உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்; ஏசா 10:22ஆதி 22:17ஓசி 1:10எரே 33:22ரோம 9:271 இராஜா 9:7ஆதி 13:16ஏசா 14:22
உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்;
அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும்,
அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.”
பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள், ஏசா 52:9எரே 50:8எரே 51:45எரே 51:6வெளி 18:4சகரி 2:6-7யாத் 15:1-21யாத் 19:4-6
பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்!
ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப்
பிரசித்தப்படுத்துங்கள்!
யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி,
அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்;
அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை; ஏசா 43:19-20சங் 105:41ஏசா 41:17-18யாத் 17:6ஏசா 35:6-7எண் 20:11சங் 78:20ஏசா 30:25
அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார்.
அவர் பாறையைப் பிளந்தார்,
தண்ணீர் பொங்கி வழிந்தது.
“கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார். ஏசா 57:21யோபு 15:20-24லூக் 19:42ரோம 3:17