எரேமியா 22

Jeremiah 22

தீய அரசர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து. எரே 34:21 இராஜா 21:18-201 சாமு 15:16-232 நாளாக 19:2-32 நாளாக 25:15-162 நாளாக 33:102 சாமு 12:12 சாமு 24:11-12 தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கிற யூதாவின் அரசனே, ‘நீயும், உன் அதிகாரிகளும், இந்த வாசல்களுக்குள் வருகிற உன் மக்களும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். லூக் 1:32ஏசா 1:10ஏசா 9:7எரே 22:41 இராஜா 22:19ஆமோ 7:16எசேக் 34:7ஏசா 28:14 யெகோவா கூறுவது இதுவே: நீதியையும், நியாயத்தையும் செய்யுங்கள். கொள்ளையிடப்பட்டவனை, ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள். நீங்கள் பிறநாட்டினனையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும் இருங்கள். குற்றமற்ற இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும் இருங்கள். எரே 21:12எரே 22:17மீகா 6:8யாக் 1:27எசேக் 22:7ஏசா 1:15-20மல்கி 3:5சகரி 7:9-11 இக்கட்டளைகளைச் செய்வதற்கு நீங்கள் கவனமாயிருந்தால், அப்பொழுது தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் இந்த அரண்மனையின் வாசல் வழியாக வருவார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளுடனும், மக்களுடனும் சேர்ந்து தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். எரே 17:25 ஆனால் இக்கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், இந்த அரண்மனை பாழாகிவிடும் என்று நான் என்மேல் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்” என்றார். ஆமோ 6:8ஆதி 22:16எபி 6:13எரே 17:27உபா 32:40-42ஏசா 1:20எரே 26:6-9எரே 39:8

மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே: ஏசா 6:11சங் 107:34ஏசா 27:10எரே 9:11மீகா 3:12ஆதி 37:25எரே 26:18எரே 7:34

“நீ எனக்கு கீலேயாத்தைப்போலவும்,

லெபனோனின் மலை உச்சியைப்போலவும் இருந்தாலும்,

நான் நிச்சயமாக உன்னைப் பாலைவனத்தைப்போலவும்,

குடியிருக்காத பட்டணங்களைப்போலவும் ஆக்குவேன்.

நான் உனக்கு எதிராக அழிக்கிறவர்களை ஏசா 10:33-34ஏசா 37:24எரே 4:6-7எசேக் 9:1-7ஏசா 13:3-5எரே 21:14ஏசா 10:3-7ஏசா 27:10-11

அவனவனது ஆயுதங்களுடன் அனுப்புவேன்.

அவர்கள் உனது மிகச்சிறந்த கேதுருமர உத்திரங்களை வெட்டி

அவைகளை நெருப்பிலே போடுவார்கள்.

“அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்பட்டணத்தைக் கடந்து செல்லும்போது, ‘இப்பெரிய பட்டணத்துக்கு யெகோவா ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவரையொருவர் கேட்பார்கள். 1 இராஜா 9:8-92 நாளாக 7:20-22உபா 29:23-26புலம் 2:15-17தானி 9:7எரே 16:10புலம் 4:12 அதற்கு, ‘அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களை வணங்கி, அவைகளுக்குப் பணிவிடை செய்தபடியால் இப்படியாயிற்று’ என்று பதில் சொல்லப்படும்.” 2 நாளாக 34:252இராஜா 22:17உபா 29:25-28எரே 2:17-19எரே 40:2-3எரே 50:7

இறந்துபோன அரசனுக்காக அழவேண்டாம். பிரச 4:2எரே 22:11ஏசா 57:1புலம் 4:92 நாளாக 35:23-252இராஜா 22:202இராஜா 23:30-34எரே 22:18

அவன் மறைவுக்காக துக்கிக்கவும் வேண்டாம்.

நாடுகடத்தப்பட்ட அரசனுக்காகவே மனங்கசந்து அழுங்கள்.

ஏனெனில் இனிமேல் அவன் திரும்பி வரமாட்டான். தன் சொந்த நாட்டைக் காணவும் மாட்டான்.

யோசியாவின் மகனான சல்லூமைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: அவன் தன் தகப்பனுக்குப் பின் யூதாவுக்கு அரசனாக வந்தான். ஆனால் இந்த இடத்திலிருந்து போய்விட்டான். “அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான். 1 நாளாக 3:152 நாளாக 36:1-42இராஜா 23:342 நாளாக 28:122 நாளாக 34:222இராஜா 23:31 அவன் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டையோ மீண்டும் காணமாட்டான்” என்றார். 2இராஜா 23:34எரே 22:18

“அநியாயத்தினால் தன் அரண்மனையையும், யாக் 5:4லேவி 19:13மீகா 3:10உபா 24:14-15மல்கி 3:5ஆப 2:9-112 நாளாக 36:4எரே 22:18

அநீதியினால் தன் மேலறையையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு!

அவன் தன் நாட்டு மனிதரின் உழைப்புக்குக்

கூலிகொடாமல் வேலை வாங்குகிறான்.

அவன், ‘நான் விசாலமான மேலறைகளுடன் 2 சாமு 7:2ஆகா 1:4ஏசா 5:8-92 நாளாக 3:5தானி 4:30ஏசா 9:9லூக் 14:28-29மல்கி 1:4

எனக்குப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்’ என்கிறான்.

அவ்வாறே அவன் அதற்குப் பெரிய ஜன்னல்களை அமைத்து,

கேதுரு மரப்பலகைகளால் தளவரிசைப்படுத்தி,

அவைகளை சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கிறான்.

“அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால், 2இராஜா 23:25ஏசா 3:10பிரச 10:17நீதி 25:5நீதி 29:42இராஜா 22:2சங் 128:1-21 இராஜா 10:9

அது உன்னை அரசனாக்குமோ?

உன்னுடைய தகப்பனிடம் உணவும், பானமும் இருக்கவில்லையோ?

நியாயத்தையும், நீதியையும் அவன் செய்தபோது

அவன் செய்த எல்லாம் அவனுக்கு நலமாயிருக்கவில்லையோ?

அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான். எரே 9:241 யோவா 2:3-4ஏசா 1:17தீத் 1:16யோவா 17:3சங் 72:1-4சங் 72:12-13எரே 9:16

அதனால் அவனுக்கு எல்லாம் நன்றாய் நடைபெற்றன.

என்னை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் இதுவல்லவோ?”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“ஆனால் உன்னுடைய கண்களும், இருதயமும் நேர்மையற்ற இலாபத்திலும், 2இராஜா 24:42 பேது 2:14எசேக் 19:6எரே 22:3எசேக் 33:31சங் 10:31 கொரி 6:101 இராஜா 21:19

குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும்,

கப்பம் கேட்பதிலும் ஒடுக்குவதிலுமே

நோக்கமாயிருக்கின்றன” என்று யெகோவா கூறுகிறார்.

ஆதலால் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமை பற்றி யெகோவா கூறுவது இதுவே: 1 இராஜா 13:30எரே 16:6எரே 16:4எரே 22:102 நாளாக 21:19-202 நாளாக 35:252 சாமு 1:262 சாமு 3:33-38

“அவனுக்காக அவர்கள்:

‘ஐயோ என் சகோதரனே! ஐயோ என் சகோதரியே!’ என்று

துக்கங்கொண்டாட மாட்டார்கள்.

‘ஐயோ என் தலைவனே! ஐயோ அவனுடைய மேன்மையே!’

என்றும் அவனுக்காக துக்கங்கொண்டாட மாட்டார்கள்.

ஒரு செத்த கழுதைக்குச் செய்வதுபோலவே அவனை அடக்கம் செய்வார்கள். எரே 36:301 இராஜா 21:23-241 இராஜா 14:102 நாளாக 36:62இராஜா 9:35எரே 15:3எரே 36:6

அவனை இழுத்துக்கொண்டுபோய்

எருசலேமின் வாசல்களுக்கு வெளியே எறிந்துவிடுவார்கள்” என்கிறார்.

லெபனோன்வரை சென்று சத்தமிட்டு அழு. எண் 27:12எசேக் 23:22புலம் 1:22இராஜா 24:7உபா 32:49எசேக் 23:9ஏசா 20:5-6ஏசா 30:1-7

பாசானில் உனது குரல் கேட்கட்டும்.

அபாரீமிலிருந்தும் அழு.

ஏனென்றால் உன்னுடைய கூட்டாளிகள் நசுக்கப்பட்டார்கள்.

பாதுகாப்புடன் இருக்கிறாய் என எண்ணிய உன்னை நான் எச்சரித்தேன். எரே 32:30எரே 3:25எரே 7:22-28எசேக் 23:3-39ஏசா 48:8நீதி 30:9எசேக் 20:8எரே 35:15

ஆனால், “நான் கேட்கமாட்டேன்” என்று நீ சொன்னாய்.

உன் வாலிப காலத்திலிருந்தே, இதுவே உனது வழக்கமாயிருந்தது.

நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை.

காற்று உன்னுடைய மேய்ப்பர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போய்விடும். எசேக் 34:2-10ஓசி 13:15எரே 10:21எரே 12:10எரே 23:1-2எரே 5:30-31சகரி 11:17ஏசா 64:6

உன் கூட்டாளிகள் யாவரும் நாடுகடத்தப்படுவார்கள்.

அப்பொழுது உனது எல்லாக் கொடுமையின் நிமித்தமும்

நீ வெட்கமடைந்து அவமானப்படுவாய்.

லெபனோனில் வாழ்பவளே! எரே 6:24எரே 22:6எரே 4:30-31ஆமோ 9:2ஆப 2:9ஓசி 5:15ஓசி 7:14எரே 21:13

கேதுரு மரங்களாலான கட்டிடங்களில் பாதுகாப்பாய் இருப்பவளே!

பிரசவ வேதனைப்படும் பெண்ணின் வலியைப் போன்ற வலி உன்மேல் வரும்போது,

நீ எவ்வளவாய் வேதனையில் அழுவாய்.

யெகோவா அறிவிப்பது இதுவே: “நான் வாழ்வது நிச்சயம்போல, யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் கோனியாவே! நீ என்னுடைய வலதுகையில் ஒரு முத்திரை மோதிரமாய் இருந்தாலுங்கூட, நான் உன்னை கழற்றி எறிந்துவிடுவேன் என்பதும் நிச்சயம். எரே 37:11 நாளாக 3:16உன்னத 8:62இராஜா 24:6-8ஆகா 2:23எரே 22:28எரே 22:6மத் 1:11-12 நீ பயப்படுகிறவர்களான, உன்னை கொலைசெய்ய தேடுகிறவர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடத்திலும் பாபிலோனியர்களிடத்திலும் எரே 21:7எரே 34:20-212இராஜா 24:15-16எரே 22:28எரே 38:16நீதி 10:24 நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். நான் உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், நீங்கள் பிறவாத வேறொரு நாட்டில் எறிந்துவிடுவேன். அங்கே நீங்கள் இருவரும் சாவீர்கள். 2இராஜா 24:152இராஜா 24:8ஏசா 22:17எரே 15:2-42 நாளாக 36:9-10எசேக் 19:9-14 நீ திரும்பிவர விரும்புகிற இந்த நாட்டிற்கு ஒருபோதும் நீ திரும்பிவரமாட்டாய் என்பதும் நிச்சயம்” என்கிறார். எரே 44:142இராஜா 25:27-30எரே 22:11எரே 52:31-34சங் 86:4

கோனியா என்ற இந்த மனிதன் யாராலும் விரும்பப்படாத பொருளான ஓசி 8:8சங் 31:12எரே 48:38எரே 22:301 நாளாக 3:17-241 சாமு 5:3-52 சாமு 5:212 தீமோ 2:20-21

உடைந்த பானையைப்போல் இகழப்பட்டானோ?

அவனும், அவனுடைய பிள்ளைகளும்

அவர்கள் அறியாத ஒரு நாட்டில்

ஏன் வீசி எறியப்பட வேண்டும்.

ஓ நாடே! நாடே! நாடே! உபா 32:1மீகா 1:2எரே 6:19ஏசா 1:1-2மீகா 6:1-2ஏசா 34:1உபா 31:19உபா 4:26

யெகோவாவின் வார்த்தையைக் கேள்;

யெகோவா கூறுவது இதுவே: எரே 36:30சங் 94:20மத் 1:11-161 நாளாக 3:16-17எரே 10:21லூக் 1:32-33

“தன் வாழ்நாளில் செழித்தோங்காத பிள்ளைகளற்ற

ஒரு மனிதனைப்போல் இவனைக் குறித்து எழுதிவை.

அவனுடைய வழித்தோன்றல்களில் ஒருவனும் செழித்தோங்கமாட்டான்.

தாவீதின் அரியணையில் உட்காரவுமாட்டான்.

இனிமேல் யூதாவில் அரசாளவுமாட்டான் என்கிறார்” என்றான்.