லூக்கா 13

Luke 13

மனம் மாறாவிட்டால் அழிவு

அப்பொழுது அங்கிருந்தவர்களில் சிலர் இயேசுவிடம், கலிலேயர் சிலரைப் பிலாத்து கொலைசெய்து, அவர்களுடைய இரத்தத்தை அவர்கள் செலுத்திய பலிகளுடனே கலந்துவிட்ட செயலைப் பற்றிச் சொன்னார்கள். 1 பேது 4:17-18புலம் 2:20அப் 5:37எசேக் 9:5-7மத் 27:2 அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “அந்த கலிலேயருக்கு இவை நேர்ந்ததால், அவர்கள் மற்றெல்லா கலிலேயரைப் பார்க்கிலும் மோசமான பாவிகளாய் இருந்தார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? யோவா 9:2அப் 28:4யோபு 22:5-16லூக் 13:4 இல்லை! நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனமாறாவிட்டால் நீங்கள் எல்லோரும்கூட அழிந்தே போவீர்கள். அப் 3:19மத் 3:2அப் 2:38-40லூக் 13:5வெளி 2:21-22லூக் 21:22-24லூக் 23:28-30மத் 12:45 சீலோவாமில் இருந்த கோபுரம் விழுந்தபோது, அதில் பதினெட்டுப்பேர் அகப்பட்டு இறந்தார்களே. எருசலேமில் வாழ்கிற மற்றெல்லோரையும்விட, அவர்கள் அதிக குற்றவாளிகள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? நெகே 3:15யோபு 1:19மத் 6:12மத் 18:241 இராஜா 20:30யோவா 9:11யோவா 9:7லூக் 7:41-42 இல்லை! நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனமாறாவிட்டால் நீங்கள் எல்லோரும்கூட அழிந்துபோவீர்கள்” என்றார். எசேக் 18:30லூக் 13:3ஏசா 28:10-13

அதற்குப் பின்பு இயேசு அவர்களுக்கு இந்த உவமையையும் சொன்னார்: “ஒரு மனிதன் தனது திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டு வைத்திருந்தான். அவன் அதிலே பழத்தைத் தேடிப் போனபோது, அதில் பழம் எதுவும் காணப்படவில்லை. யோவா 15:16கலா 5:22ஏசா 5:1-4மத் 21:19-20எரே 2:21மாற் 11:12-14சங் 80:8-13பிலி 4:17 எனவே அவன், அந்தத் திராட்சைத் தோட்டக்காரனிடம், ‘நான் இந்த அத்திமரத்தில் பழங்களைத் தேடி மூன்று வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், பழம் எதையுமே நான் காணவில்லை. இந்த மரத்தை வெட்டிப்போடு. ஏன் இந்த மரம் நிலத்தை வீணாக்க வேண்டும்?’ என்றான். மத் 7:19யோவா 15:6லூக் 3:9யோவா 15:2ரோம 2:4-5யாத் 32:10லேவி 19:23மத் 3:9-10

“அதற்கு தோட்டக்காரன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதைவிட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். ரோம 10:12 பேது 3:9யோவே 2:17யாத் 34:9எரே 15:1யோசு 7:7-9சங் 106:23ரோம 11:14 அடுத்த வருடம் பழம் கொடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் நீர் அதை வெட்டிப்போடும்’ என்றான்.” யோவா 15:2எபி 6:81 தெச 2:15எஸ்றா 9:14-15சங் 69:22-28தானி 9:5-8வெளி 16:5-7வெளி 15:3-4

கூனியான பெண் சுகமடைதல்

ஒரு ஓய்வுநாளிலே, இயேசு ஜெப ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். மத் 4:23லூக் 4:44லூக் 4:15-16 அங்கே பதினெட்டு வருடமாய் பலவீனப்படுத்தும் ஒரு தீய ஆவியினால் பிடிக்கப்பட்டு, கூனியான ஒரு பெண் இருந்தாள். அவள் முற்றுமாய் நிமிரமுடியாத அளவுக்குக் கூனிப்போய் இருந்தாள். லூக் 8:2லூக் 13:16லூக் 8:27லூக் 8:43அப் 4:22மாற் 9:21சங் 6:2யோவா 5:5-6 இயேசு அவளைக் கண்டபோது, அவளை முன்னே வரும்படி கூப்பிட்டு, “மகளே, உன் பலவீனத்திலிருந்து நீ விடுதலையாக்கப்பட்டாய்” என்றார். சங் 107:20மத் 8:16ஏசா 65:1யோவே 3:10லூக் 13:16லூக் 6:8-10 பின்பு அவர், அவள்மேல் தன் கையை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து நின்று இறைவனைத் துதித்தாள். சங் 107:20-22மாற் 16:18மாற் 5:23லூக் 18:43லூக் 4:40மாற் 6:5மாற் 8:25சங் 103:1-5

ஓய்வுநாளில் இயேசு குணமாக்கியபடியால், அங்கிருந்த ஜெப ஆலயத் தலைவன் கடும் கோபமடைந்து அங்கிருந்த மக்களிடம், “வேலைசெய்வதற்கு ஆறுநாட்கள் இருக்கிறதே. அந்த நாட்களிலே வந்து குணமடையுங்கள். ஓய்வுநாளில் அப்படிச் செய்யவேண்டாம்” என்றான். யாத் 20:9யோவா 9:14-16மத் 12:2யோவா 5:15-16லூக் 14:3-6லூக் 6:11லூக் 6:7லூக் 8:41

அதற்குக் கர்த்தர் அவனிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளிலே, அவனவன் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்து, தண்ணீர் குடிப்பதற்குக் கொண்டு போவதில்லையா? லூக் 14:5யோவா 7:21-24அப் 13:9-10லூக் 6:42அப் 8:20-23ஏசா 29:20யோபு 34:30லூக் 12:1 ஆபிரகாமின் மகளான இந்தப் பெண்ணை சாத்தான் பதினெட்டு வருடங்களாய் நீண்ட காலத்திற்குக் கட்டி வைத்திருக்கிறானே. எனவே அவள் ஓய்வுநாளிலே அவளுடைய கட்டிலிருந்து விடுதலை பெறக் கூடாதோ?” என்றார். மாற் 2:27லூக் 19:9லூக் 3:82 தீமோ 2:26அப் 13:26யோவா 8:44லூக் 13:11-12மத் 4:10

இயேசு இதைச் சொன்னபோது, அவருடைய எதிரிகள் எல்லோரும் வெட்கமடைந்தார்கள். ஆனால் மக்களோ, அவர் செய்த அதிசயமான காரியங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். 1 பேது 3:16சங் 132:182 தீமோ 3:9அப் 3:9-11அப் 4:21யாத் 15:11ஏசா 4:2ஏசா 45:24

கடுகு விதை

பின்பு இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசு எதைப்போல் இருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? மாற் 4:30-34லூக் 17:21மத் 13:31-32லூக் 13:20மாற் 4:26மத் 13:24புலம் 2:13லூக் 7:31 இறைவனுடைய அரசு ஒருவன் தனது தோட்டத்தில் நட்ட ஒரு கடுகுவிதையைப் போன்றது. அது வளர்ந்து ஒரு மரமாகியது. ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கின” என்றார். தானி 4:12தானி 2:44-45தானி 4:21எசேக் 17:22-24மத் 13:31-32மாற் 4:31-32சகரி 2:11அப் 2:41

மேலும் அவர், “இறைவனுடைய அரசை நான் எதற்கு ஒப்பிடுவேன்? ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ 1 மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். மத் 13:331 கொரி 5:61 தெச 5:23-24யாக் 1:21யோவா 15:2யோவா 4:14பிலி 1:6பிலி 1:9-11

இடுக்கமான வாசல்

பின்பு இயேசு தாம் எருசலேமுக்குப் போகும் வழியிலே உள்ள பட்டணங்களிலும், கிராமங்களிலும் உபதேசித்துக்கொண்டே சென்றார். லூக் 9:51மத் 9:35மாற் 10:32-34லூக் 4:43-44அப் 10:38மாற் 6:6 அப்பொழுது ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, ஒரு சிலர் மட்டும்தான் இரட்சிக்கப்படுவார்களோ?” என்று கேட்டான். மத் 7:14மத் 22:14யோவா 21:21-22லூக் 12:13-15மத் 20:16மத் 24:3-5அப் 1:7-8லூக் 21:7-8

அதற்கு இயேசு இப்படியாக பதிலளித்தார்: “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்வதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அநேகர் அதற்குள் செல்ல முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் முடியாதிருக்கும். மத் 7:13-142 பேது 1:101 கொரி 9:24-27எபி 4:11லூக் 21:36எசேக் 33:31பிலி 2:12-13நீதி 21:25 வீட்டுச் சொந்தக்காரன் எழுந்து கதவை மூடியபின், நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டி, ‘ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்’ என்று கெஞ்சுவீர்கள். லூக் 13:27மத் 25:10-12மத் 7:21-23லூக் 6:46ஏசா 55:62 கொரி 6:2எபி 12:17எபி 3:7-8

“ஆனால் அவரோ, ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது’ என்று சொல்வார்.

“அப்பொழுது நீங்கள் அவரைப் பார்த்து, ‘நாங்கள் உம்முடன் சாப்பிட்டுக் குடித்தோமே. நீர் எங்களுடைய வீதிகளில் போதித்தீரே’ என்பீர்கள். ஏசா 58:2தீத் 1:162 தீமோ 3:5

“ஆனால் உங்களிடம் அவர், ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. தீமை செய்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போங்கள்,’ என்று சொல்லுவார். சங் 6:8மத் 25:41மத் 7:22-23சங் 119:115சங் 1:62 தீமோ 2:19ஓசி 9:12லூக் 13:25

“ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, எல்லா இறைவாக்கினரும் இறைவனுடைய அரசில் இருப்பதையும், நீங்கள் புறக்கணிக்கப்படுவதையும் காணும்போது, அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத் 8:11-12மத் 22:13மத் 25:30லூக் 14:15லூக் 16:23லூக் 23:42-43மத் 13:42மத் 13:50 கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் மக்கள் வந்து, இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள். ஏசா 43:6ஏசா 49:6ஏசா 66:18-20மல்கி 1:11ஏசா 54:2-3அப் 28:28எபே 3:6-8மாற் 13:27 உண்மையாகவே, இப்பொழுது கடைசியாய் இருப்பவர்கள் முதலாவதாகவும். முதலாவதாய் இருப்பவர்கள் கடைசியாய் இருப்பார்கள்” என்றார். மத் 19:30மத் 20:16மத் 21:28-31மாற் 10:31மத் 3:9-10மத் 8:11-12

எருசலேமுக்கான இயேசுவின் அனுதாபம்

அவ்வேளையில், சில பரிசேயர் இயேசுவிடம் வந்து அவரிடம், “நீர் இந்த இடத்தைவிட்டு வேறு எங்காவது போய்விடும். ஏரோது உம்மைக் கொலைசெய்ய இருக்கிறான்” என்றார்கள். நெகே 6:9-11ஆமோ 7:12-13மத் 14:1சங் 11:1-2லூக் 3:1

அதற்கு இயேசு அவர்களிடம், “அந்த நரிக்குப் போய் சொல்லுங்கள், இன்றும் நாளையும் பிசாசுகளைத் துரத்தி, நான் மக்களைச் சுகப்படுத்துவேன். மூன்றாவது நாளிலே, நான் எனது பணியின் நோக்கத்தை செய்து முடிப்பேன். எபி 2:10எபி 5:9யோவா 17:4-5யோவா 11:8-10எசேக் 13:4லூக் 9:7-9எபி 7:28யோவா 10:32 ஆனால் இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும், என் பணியைத் தொடர்வேன். ஏனெனில், நிச்சயமாகவே இறைவாக்கினன் எவனும் எருசலேமுக்கு வெளியே சாகமுடியாது. லூக் 9:53மத் 21:11யோவா 4:34மத் 20:18அப் 13:27யோவா 12:35யோவா 9:4அப் 10:38

“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து உன்னிடம் அனுப்பப்பட்டவர்களை கல்லெறிகிற பட்டணமே, ஒரு கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழ் கூட்டிச் சேர்ப்பதுபோல் எத்தனையோமுறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், உனக்கோ விருப்பமில்லாமல் போயிற்றே. மத் 23:37-39உபா 32:11-12அப் 7:52ஏசா 30:15லூக் 19:41-42ஓசி 11:2எரே 6:16எரே 7:23-24 இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. நான் உனக்குச் சொல்கிறேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ 2 என்று நீ சொல்லும்வரைக்கும், இனிமேல் என்னைக் காணமாட்டாய்” என்றார். சங் 118:26மாற் 11:9-10யோவா 12:13மத் 21:9ஓசி 3:4-5ஏசா 52:7யோவா 12:35-36யோவா 14:19-23