லூக்கா 4

Luke 4

இயேசுவின் சோதனை

இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராக, யோர்தான் நதியிலிருந்து திரும்பிவந்து ஆவியானவரால் பாலைவனத்திற்கு வழிநடத்தப்பட்டார். மத் 4:1-11அப் 10:38மாற் 1:12-13லூக் 4:18ஏசா 61:1யோவா 3:34யோவா 1:32மத் 3:16 அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை; அந்த நாட்கள் முடிந்தவுடன் அவர் பசியாயிருந்தார். யாத் 34:28எபி 4:151 இராஜா 19:8உபா 9:9எபி 2:18உபா 9:18யோவா 4:6மத் 4:2

சாத்தான் அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான். மத் 4:3லூக் 3:22

அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர் பிழைப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறதே” 1 எனப் பதிலளித்தார். உபா 8:3மத் 4:4மத் 6:31எபே 6:17யாத் 23:25லூக் 4:10லூக் 4:8மத் 6:25-26

சாத்தான் இயேசுவை உயரமான ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, ஒரு வினாடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான். 1 யோவா 2:15-161 கொரி 15:52எபே 6:12யோபு 20:5மத் 4:8சங் 73:191 கொரி 7:312 கொரி 4:17 பிறகு சாத்தான் அவரிடம், “இந்த அரசுகள் எல்லாவற்றின் அதிகாரத்தையும் மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன்; ஏனெனில் அது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நான் விரும்பினால் அதை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும். யோவா 12:311 யோவா 5:19எபே 2:2யோவா 14:30வெளி 20:2-31 பேது 1:24வெளி 13:2வெளி 13:7 நீர் என்னை வணங்கினால், இவையெல்லாம் உம்முடையவையாகும்” என்றான். லூக் 8:28சங் 72:11வெளி 22:8வெளி 5:8ஏசா 45:14ஏசா 46:6லூக் 17:16மத் 2:11

அதற்கு இயேசு, “ ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ என்று எழுதியிருக்கிறதே” 2 என்று பதிலளித்தார். உபா 6:13உபா 10:20மத் 4:10சங் 83:18வெளி 19:101 சாமு 7:3யாக் 4:7வெளி 22:9

பின்பு சாத்தான், அவரை எருசலேமுக்குக் கொண்டுசென்று, ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி சொன்னதாவது, “நீர் இறைவனுடைய மகனானால் இங்கிருந்து கீழே குதியும். மத் 4:5-6லூக் 4:3மத் 8:29ரோம 1:42 நாளாக 3:4யோபு 2:6 ஏனெனில், சங் 91:11-12எபி 1:142 கொரி 11:14லூக் 4:3லூக் 4:8

“ ‘உம்மைக் காக்கும்படிக்கு,

இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும்;

உமது கால்கள் கல்லில் மோதாதபடி, சங் 91:12

அவர்கள் உம்மைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்

என்றும் எழுதியிருக்கிறதே.’ ” 3

அதற்கு இயேசு, “ ‘உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” 4 என்றார். உபா 6:161 கொரி 10:9எபி 3:8-9மல்கி 3:15மத் 4:7சங் 106:14சங் 95:9

இவ்விதமாக சாத்தான் சோதனைகள் எல்லாவற்றையும் முடித்தபின்பு, ஏற்ற காலம் வரும்வரை இயேசுவைவிட்டுப் போய்விட்டான். யாக் 4:7எபி 4:15யோவா 14:30மத் 4:11

இயேசு நாசரேத்தில் புறக்கணிக்கப்படுதல்

இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்; அவரைப் பற்றியச் செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது. அப் 10:37மத் 4:23-25மத் 4:12மாற் 1:28யோவா 4:43லூக் 4:37மாற் 1:14மத் 9:26 இயேசு யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் போதித்தார், எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள். மத் 4:23ஏசா 55:5மத் 9:8மாற் 1:39மாற் 1:45லூக் 13:10மத் 13:54மத் 9:35

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, ஓய்வுநாளிலே தமது வழக்கத்தின்படி அவர் ஜெப ஆலயத்திற்குப்போய், அங்கே வேதவசனத்தை வாசிக்கும்படி எழுந்து நின்றார். மத் 2:23மத் 13:54-55மாற் 6:1-3அப் 13:14-16அப் 17:2லூக் 2:51யோவா 18:20லூக் 2:39 அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச்சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் விரித்து, இவ்வாறு எழுதியிருந்த இடத்தைக் கண்டு வாசித்தார்: ஏசா 61:1-3அப் 13:15அப் 7:42அப் 13:27லூக் 20:42

“கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், ஏசா 61:1மத் 11:5சங் 146:7-8அப் 10:38லூக் 7:22அப் 26:18ஏசா 42:7யோவா 12:46

ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி,

அவர் என்னை அபிஷேகம் பண்ணினார்.

அவர் என்னை சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை அறிவிக்கவும்,

குருடருக்கு பார்வையை அளிக்கவும்,

ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

கர்த்தருடைய தயவின் வருடத்தைப் பிரசித்தப்படுத்தம் என்னை அனுப்பியிருக்கிறார்.” 5 ஏசா 61:2ஏசா 63:4லூக் 19:422 கொரி 6:1லேவி 25:50-54லேவி 25:8-13எண் 36:4

பின்பு இயேசு அந்தப் புத்தகச்சுருளைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. லூக் 4:17யோவா 8:2அப் 16:13லூக் 19:48லூக் 5:3மத் 5:1-2அப் 13:14-16மத் 13:1-2 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிற்று” என்றார். யோவா 4:25-26அப் 3:18மத் 13:14லூக் 10:23-24அப் 2:16-18அப் 2:29-33யோவா 5:39

எல்லோரும் அவரைக்குறித்து நன்றாகப் பேசினார்கள்; அவருடைய உதடுகளிலிருந்து வந்த கிருபையுள்ள வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள், “இவன் யோசேப்பின் மகன் அல்லவா?” என்றார்கள். மத் 13:54-56சங் 45:2அப் 6:10யோவா 6:42மாற் 6:2-3பிரச 12:10-11யோவா 7:46ஏசா 50:4

இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘வைத்தியனே, உன்னையே சுகப்படுத்திக்கொள்!’ என்ற பழமொழியை நிச்சயமாகவே நீங்கள் எனக்குச் சொல்வீர்கள். ‘கப்பர்நகூமில் நீ செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதை உனது சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்’ ” என்றும் சொல்வீர்கள். மத் 11:23-24யோவா 4:46-53யோவா 2:3-4மாற் 2:1-12ரோம 2:21-22மத் 4:13மாற் 6:12 கொரி 5:16

ஆனால், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்; எந்த இறைவாக்கினனும் தனது சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மத் 13:57யோவா 4:44மாற் 6:4-5அப் 22:3அப் 22:18-22யோவா 4:41 நான் நிச்சயமாகச் சொல்கிறேன், எலியாவின் காலத்தில் மூன்றரை வருடங்களாக வானம் அடைபட்டு, இஸ்ரயேல் எங்கும் கடுமையான பஞ்சம் நிலவியபோது, அங்கே அநேக விதவைகள் இருந்தார்கள். 1 இராஜா 17:1யாக் 5:171 இராஜா 18:1-2மத் 20:15மாற் 7:26-29ஏசா 55:8லூக் 10:21ரோம 9:15 ஆனால், இஸ்ரயேலில் உள்ள விதவைகளில் எவரிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. ஆனால் சீதோன் நாட்டிலுள்ள சாறிபாத் ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கே அனுப்பப்பட்டான். 1 இராஜா 17:9-24மத் 11:21ஒபதி 1:20 இறைவாக்கினன் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலில் பல குஷ்டவியாதி உடையவர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒருவனும் அதிலிருந்து சுகப்படுத்தப்படவில்லை. சீரியாவைச் சேர்ந்த நாகமான் மட்டுமே சுகப்படுத்தப்பட்டான்” என்றார். 2இராஜா 5:1-27யோவா 17:121 இராஜா 19:19-21மத் 12:4தானி 4:35யோபு 36:23யோபு 21:22யோபு 33:13

இதைக் கேட்டபோது ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும் கடுங்கோபமடைந்தார்கள். அப் 22:21-23அப் 7:54எரே 37:15-161 தெச 2:15-162 நாளாக 24:20-21அப் 5:33எரே 38:6லூக் 11:53-54 அவர்கள் எழுந்து, பட்டணத்தைவிட்டு அவரைத் துரத்தினார்கள். அந்தப் பட்டணம் கட்டப்பட்டிருந்த மலையிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிடும்படி, மலையுச்சியின் ஓரத்திற்கு அவரைக் கொண்டுபோனார்கள். யோவா 8:59அப் 21:28-32எபி 13:12யோவா 15:24-25யோவா 8:37அப் 16:23-24அப் 7:57-58யோவா 8:40 அவரோ மக்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். யோவா 10:39யோவா 8:59யோவா 18:6-7அப் 12:18

இயேசு தீய ஆவியைத் துரத்துதல்

பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு போய், ஓய்வுநாளிலே அங்குள்ள மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மத் 4:13மாற் 1:21-28அப் 17:1-3அப் 13:50அப் 14:19-21அப் 14:6-7அப் 17:10-11மத் 10:23 அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில் அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையதாயிருந்தது. லூக் 4:36மத் 7:28-292 கொரி 10:4-5எபி 4:12-131 தெச 1:5யோவா 6:63தீத் 2:151 கொரி 14:24-25

ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, மாற் 1:23 “நசரேயனாகிய இயேசுவே போய்விடும்! எங்களிடம் உமக்கு என்ன வேண்டும்? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும்; நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். மாற் 1:24யாக் 2:19மத் 8:29அப் 3:14லூக் 1:35வெளி 3:7ஆதி 3:15லூக் 4:41

“அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். அப்பொழுது அந்த தீய ஆவி அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனை விழத்தள்ளி விட்டு, அவனுக்கு காயம் ஏதும் உண்டாக்காமல் வெளியேறியது. லூக் 4:39லூக் 4:41மத் 8:26அப் 16:17-18மாற் 3:11-12மாற் 9:26வெளி 12:12லூக் 11:22

எல்லா மக்களும் வியப்படைந்து, “இவை என்ன வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார், அவைகளும் வெளியேறுகின்றன!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். லூக் 4:32மாற் 16:17-20மாற் 7:371 பேது 3:22அப் 19:12-16லூக் 10:17-20மத் 12:22-23மாற் 1:27 இயேசுவைப்பற்றிய இச்செய்தி, சுற்றுப்புறம் எங்கும் பரவியது. மாற் 1:45ஏசா 52:13லூக் 4:14மத் 4:23-25மத் 9:26மாற் 6:14மாற் 1:28

இயேசு அநேகரை சுகப்படுத்துதல்

இயேசு ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமியார் கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள்; எனவே சிலர் அவளுக்காக இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். மத் 8:14-15மாற் 1:29-31யாக் 5:14-15யோவா 11:22யோவா 11:3லூக் 7:3-41 கொரி 9:5மத் 15:23 இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் சுகமடைந்து எழுந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். லூக் 4:41லூக் 4:35லூக் 8:24லூக் 8:2-32 கொரி 5:14-15சங் 116:12

சூரியன் மறையும்போது மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதியுடையவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் தமது கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். மத் 8:16-17மாற் 1:32-34மாற் 5:23அப் 19:12மாற் 3:10அப் 5:15லூக் 7:21-23மத் 11:5 அத்துடன் பலரில் இருந்த பிசாசுகளும், “நீர் இறைவனின் மகன்!” என்று சத்தமிட்டுக்கொண்டு, அவர்களிலிருந்து வெளியேறின. அந்தப் பிசாசுகள் அவரே கிறிஸ்து என்று அறிந்திருந்தபடியால், அவர் அவைகளைப் பேசுவதற்கு இடங்கொடாமல் அதட்டினார். மாற் 1:34யாக் 2:19அப் 16:17-18யோவா 20:31லூக் 4:34-35மத் 26:63மத் 4:3மாற் 3:11

அதிகாலை வேளையிலே இயேசு புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போனார். மக்களோ அவரைத் தேடிக்கொண்டு அவர் இருந்த இடத்திற்கு வந்தபோது, அவர் தங்களைவிட்டு வேறெங்கும் போகாமல் தங்களுடன் இருக்கும்படி முயற்சிசெய்தார்கள். லூக் 6:12மாற் 1:35-38யோவா 4:34யோவா 6:24லூக் 24:29லூக் 8:37-38மத் 14:13-14மாற் 1:45 ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, “நான் மற்ற பட்டணங்களில் உள்ளவர்களுக்கும் இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். மாற் 1:38-392 தீமோ 4:2யோவா 6:38-40யோவா 20:21அப் 10:38ஏசா 61:1-3யோவா 9:4மாற் 1:14-15 பிறகு அவர் யூதேயாவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார். மத் 4:23மாற் 1:39லூக் 4:15