மத்தேயு 13

Matthew 13

விதைப்பவனைப் பற்றிய உவமை

அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் 1 அருகே உட்கார்ந்திருந்தார். லூக் 8:4-10மத் 13:1-15மாற் 4:1-12மத் 13:36மத் 9:28மாற் 2:13 அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள். லூக் 5:3ஆதி 49:10லூக் 8:4-8மத் 15:30மத் 4:25மாற் 4:1 இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். மாற் 4:2-9மாற் 4:13சங் 78:22 சாமு 12:1-7எசேக் 24:3-14மத் 13:10-13மத் 13:34-35மத் 13:53 அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. மத் 13:18-19 சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும் எசேக் 36:26எசேக் 11:19சகரி 7:12ஆமோ 6:12மத் 13:20 வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. யாக் 1:11-12மத் 13:21லூக் 8:13கொலோ 1:23எபே 3:17ஏசா 49:10கொலோ 2:7மத் 7:26-27 வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன. மாற் 4:18-19எரே 4:3-4ஆதி 3:18மத் 13:22 ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன. யோவா 15:8லூக் 8:15ஆதி 26:12மத் 13:23கலா 5:22-23பிலி 1:11ரோம 7:18 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். மத் 11:15வெளி 2:11வெளி 2:7வெளி 2:17மத் 13:16மாற் 4:23மாற் 4:9மாற் 7:14-15

அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள். மாற் 4:33-34மாற் 4:10

இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை. 1 கொரி 2:9-101 கொரி 2:14மத் 19:11யாக் 1:51 யோவா 2:271 யோவா 2:20கொலோ 1:26-27எபே 1:9 இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். மத் 25:29மாற் 4:24-25லூக் 8:18லூக் 19:24-26யோவா 15:2-5மத் 21:43வெளி 2:5ஏசா 5:4-7 இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: எசேக் 12:2எரே 5:21ஏசா 42:18-202 கொரி 4:3-4உபா 29:3-4யோவா 3:19-20மத் 13:16ஏசா 44:18

“ ‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,

அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’

ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: ஏசா 6:9-10எசேக் 12:22 கொரி 3:14லூக் 8:10அப் 28:25-27மாற் 4:12யோவா 12:39-40ரோம 11:8-10

“ ‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்;

நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள்.

ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; ஏசா 6:10மாற் 4:12சகரி 7:11யோவா 8:43-442 தீமோ 2:25-26ஏசா 29:10-12எரே 17:14மல்கி 4:2

அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள்,

தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும்,

தங்கள் காதுகளால் கேட்காமலும்,

தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்;

நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ 2

உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன. லூக் 10:23-24எபே 1:17-18மத் 16:17யோவா 20:29அப் 26:182 கொரி 4:6லூக் 2:29-30மத் 5:3-11 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை. யோவா 8:56எபி 11:131 பேது 1:10-12லூக் 10:24எபே 3:5-6எபி 11:39-40

“ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்: லூக் 8:11-15மத் 13:11-12மாற் 4:13-20 யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும். லூக் 8:11-15எபி 2:1மத் 13:381 யோவா 5:18மத் 4:231 யோவா 3:12நீதி 2:1-61 யோவா 2:13-14 கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். எசேக் 33:31-32சங் 106:12-13யோவா 5:352 நாளாக 24:2ஏசா 58:2சங் 78:34-371 சாமு 11:13-152 நாளாக 24:14 ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள். மத் 11:62 பேது 1:8-9எபே 3:17ஓசி 6:4யோவா 15:5-7யோபு 19:28நீதி 12:3யோவா 12:25-26 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். 1 தீமோ 6:17லூக் 8:141 தீமோ 6:9-10மாற் 4:18-19லூக் 12:152 தீமோ 4:10பிரச 5:10-111 யோவா 2:15-16 நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.” பிலி 1:11மத் 12:33யோவா 15:16கலா 5:22-23யோவா 15:1-8மத் 13:8சங் 92:13-15கொலோ 1:6

களைகளைப் பற்றிய உவமை

இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது. மத் 25:1மத் 13:47மத் 20:1மத் 22:2மத் 13:37லூக் 13:20லூக் 13:18மத் 13:33 எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். 1 பேது 5:82 பேது 2:1அப் 20:30-31மத் 13:39எபி 12:15வெளி 12:9மத் 25:52 கொரி 11:13-15 கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன. மாற் 4:26-29

“வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். ரோம 16:172 கொரி 6:12 கொரி 5:18-201 கொரி 12:28-291 கொரி 16:102 கொரி 6:41 கொரி 1:11-131 கொரி 15:12-34

“அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். 1 கொரி 5:3-71 தெச 5:14லூக் 9:49-542 கொரி 2:6-11யூதா 1:22-23

“வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.

“அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும். அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’ ” மத் 3:121 தீமோ 5:241 கொரி 4:5யோவா 15:6மல்கி 3:18மத் 13:39-43மத் 25:32லூக் 3:17

கடுகு விதையின் உவமை

இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது. லூக் 13:18-19மத் 17:20மாற் 4:30-32லூக் 17:6மத் 13:24லூக் 20:9லூக் 19:11 அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார். எசேக் 31:6தானி 4:12எசேக் 17:23-24அப் 21:20தானி 2:44-45ரோம 15:18-19சகரி 8:20-23தானி 2:34-35

இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ 3 மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். கலா 5:91 கொரி 5:6-7லூக் 13:21பிலி 2:13-15ஆதி 18:6நீதி 4:18யோபு 17:9மத் 13:24

இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை. யோவா 16:25மாற் 4:33-34மத் 13:13 இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: சங் 78:2எபே 3:91 பேது 1:20-21ரோம 16:25-261 கொரி 2:7யோவா 17:24ஆமோ 3:7கொலோ 1:25-26

“நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன்.

உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.” 4

களைகளைப் பற்றிய உவமையின் விளக்கம்

அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள். யோவா 16:17-20மத் 13:11மத் 13:1மத் 15:15-16மத் 9:28மாற் 6:45மாற் 7:17மாற் 8:9

இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே. 1 கொரி 3:5-7அப் 1:8லூக் 10:16மத் 13:24மத் 13:27மத் 13:41யோவா 13:20யோவா 20:21 வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள். யோவா 8:44அப் 13:10பிலி 3:18-191 யோவா 3:8-101 பேது 1:23ஆதி 3:15யாக் 1:18மத் 13:19 அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். மத் 13:49வெளி 14:15-19மத் 25:31யோவே 3:13வெளி 19:202 தெச 1:7-10மத் 13:25மத் 24:3

“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். மத் 13:39 மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள். மத் 24:312 பேது 2:1-2மத் 18:7வெளி 21:27எபி 1:14எபி 1:6-7மத் 13:49வெளி 5:11-12 இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். மத் 13:50லூக் 16:23-24மத் 8:12வெளி 20:10வெளி 20:14-15வெளி 19:20தானி 3:6மாற் 9:43-49 அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். தானி 12:3லூக் 12:321 கொரி 15:41-54மத் 11:15மத் 25:34வெளி 21:22-23வெளி 21:3-5யாக் 2:5

மறைந்திருக்கும் புதையல்

“பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான். நீதி 2:2-5கொலோ 2:3பிலி 3:7-9மத் 6:21லூக் 14:33எபி 11:24-26மத் 19:29நீதி 16:16

“மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது. நீதி 8:10-11மத் 16:26நீதி 3:13-18யோபு 28:18மத் 13:24நீதி 8:18-20பிரச 12:13மத் 22:5 பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். லூக் 18:28-30எபே 3:8அப் 20:24கொலோ 2:3மத் 13:44நீதி 2:41 கொரி 3:21-231 யோவா 5:11-12

வலையின் உவமை

“மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. யோவா 15:62 தீமோ 3:2-5மத் 22:9-101 யோவா 4:1-62 தீமோ 4:3-4மாற் 1:171 கொரி 10:1-122 கொரி 12:20-21 வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள். மத் 13:30மத் 3:12மத் 13:40-43 இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து வெளி 20:12-15மத் 13:39மத் 24:312 தெச 1:7-10மத் 22:12-14மத் 25:19-33மத் 25:5-12 அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். லூக் 13:27-28வெளி 14:10-11மத் 13:42மத் 8:12மத் 24:50-51வெளி 16:10-11

“இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். மாற் 4:34மத் 13:11மத் 13:191 யோவா 5:20அப் 8:30-31லூக் 9:44-45மத் 15:17மத் 16:11

“ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

“ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார். 1 யோவா 2:7-8தீத் 1:92 தீமோ 3:16-172 கொரி 3:4-6மத் 12:35தீத் 2:6-71 தீமோ 3:15-16எஸ்றா 7:10

கனம்பெறாத இறைவாக்கினர்

இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார். மத் 7:28மாற் 4:33-35 அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள். யோவா 7:15-16மத் 7:28மாற் 6:1-6லூக் 4:16-30மத் 2:23மத் 4:23சங் 22:22அப் 13:46 அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு 5, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா? யோவா 6:42மாற் 6:3லூக் 3:23லூக் 4:22மாற் 15:47கலா 1:19யோவா 19:25லூக் 24:10 இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி, அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். யோவா 4:44லூக் 4:24மத் 11:6ஏசா 53:3ஏசா 49:7யோவா 6:611 கொரி 1:23-28அப் 7:51-52

அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.

அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. மாற் 6:5-6ரோம 11:20எபி 3:12-19லூக் 4:25-29எபி 4:6-11