மத்தேயு 14

Matthew 14

யோவான் ஸ்நானகனின் சிரச்சேதம்

அக்காலத்திலே காற்பங்கு அரசனாகிய 1 ஏரோது இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். லூக் 3:1அப் 4:27லூக் 23:15லூக் 9:7-9மாற் 6:14-29மாற் 8:15லூக் 23:7-12அப் 12:1 ஏரோது தனது வேலைக்காரர்களிடம், “அவன் யோவான் ஸ்நானகனே; அவன் உயிரோடு திரும்பவும் எழுந்துவிட்டான்! அதனாலேயே, அவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகிறது” என்று சொன்னான். யோவா 10:41மத் 16:14மாற் 8:28மத் 11:11

தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தமே, ஏரோது யோவானைக் கைதுசெய்து, அவனைக் கட்டி, சிறையில் அடைத்திருந்தான். மாற் 6:17லூக் 3:19-20மத் 4:12லூக் 13:1மத் 11:2மாற் 6:19மாற் 6:22யோவா 3:23-24 ஏனெனில் யோவான் அவனிடம்: “அவளை நீ வைத்திருப்பது சட்டத்திற்கு மாறானது” என்று சொல்லியிருந்தான். லேவி 20:21லேவி 18:16மாற் 6:181 இராஜா 21:192 நாளாக 26:18-192 சாமு 12:7உபா 25:5-6ஏசா 8:20 ஏரோது யோவானைக் கொலைசெய்ய விரும்பினான். ஆனால் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் அவனை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள். மத் 11:9மத் 21:26மத் 21:32அப் 4:21அப் 5:26லூக் 20:6மாற் 11:30-32மாற் 14:1-2

ஏரோதின் பிறந்தநாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள். மாற் 6:21-23ஆதி 40:20ஓசி 1:5-6எஸ்த 1:2-12மத் 22:24மாற் 6:17தானி 5:1-4எஸ்த 2:18 அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். எஸ்த 5:6எஸ்த 5:3எஸ்த 7:2 அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். மாற் 6:24நீதி 29:101 இராஜா 18:131 இராஜா 18:41 இராஜா 19:22 நாளாக 22:2-32இராஜா 11:1நீதி 1:16 அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தனது ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும், அவன் அவளுடைய வேண்டுதலை நிறைவேற்றும்படி உத்தரவிட்டான். யோவா 19:12-161 சாமு 14:241 சாமு 14:281 சாமு 14:39-451 சாமு 25:221 சாமு 25:32-341 சாமு 28:102இராஜா 6:31-33 அவ்வாறே, சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது. லூக் 9:9மத் 17:12வெளி 11:72 நாளாக 36:16எரே 2:30மத் 21:35-36மத் 22:3-6மத் 23:34-36 அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறுமியிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டுபோனாள். வெளி 16:6எசேக் 16:3-4எசேக் 19:2-3எசேக் 35:6ஆதி 49:7எரே 22:17நீதி 27:4நீதி 29:10 அப்பொழுது யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள். அப் 8:2மத் 27:58-61

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்

இயேசு நடந்தவற்றைக் கேள்விப்பட்டபோது, யாருக்கும் தெரியாமல் தனிமையான இடத்திற்கு படகில் ஏறிச்சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். லூக் 9:10-17மத் 14:1-2யோவா 6:1-15மத் 12:15மாற் 6:30-44மத் 10:23மத் 15:32-38 இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே மக்களின் பெரிய கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் நோயுள்ளவர்களைக் குணமாக்கினார். எபி 4:15எபி 2:17மத் 9:36யோவா 11:33-35மத் 15:32-39எபி 5:2லூக் 19:41லூக் 7:13

மாலை வேளையானபோது, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம். ஏற்கெனவே நேரமாகிவிட்டது. மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள். மத் 15:23மாற் 8:3லூக் 9:12மாற் 6:35-36

அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். 2இராஜா 4:42-442 கொரி 8:2-3பிரச 11:2யோவா 13:29நீதி 11:24யோபு 31:16-17லூக் 3:112 கொரி 9:7-8

“இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள். யோவா 6:5-9லூக் 9:13மத் 15:33-34மாற் 6:37-38மத் 16:9மாற் 8:4-5சங் 78:19-20எண் 11:21-23

“அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர் மக்களை புற்தரையில் உட்காரும்படிச் செய்தார். பின்பு அவர், அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். 1 சாமு 9:13மாற் 8:6-71 தீமோ 4:4-5லூக் 24:30அப் 27:35மாற் 6:411 கொரி 11:24மத் 15:35-36 அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். யாத் 16:12மத் 16:8-101 இராஜா 17:12-16யாத் 16:8மாற் 6:42-442இராஜா 4:1-72இராஜா 4:43-44யோவா 6:11-14 சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளுங்கூட இருந்தார்கள். பிலி 4:192 கொரி 9:8-11அப் 4:4அப் 4:34யோவா 6:10

இயேசு தண்ணீர்மேல் நடந்தது

பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார். மாற் 6:45-51யோவா 6:15-21மத் 15:39மத் 13:36 அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென மலையின்மேல் ஏறினார். இரவு வேளையானபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். லூக் 6:12மாற் 6:46யோவா 6:15-17மத் 26:36அப் 6:4மத் 6:6லூக் 9:28 ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையை விட்டு மிகத் தொலைவில் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் படகு அலைக்கழிக்கப்பட்டது. மாற் 6:48யோவா 6:18மத் 8:24ஏசா 54:11

அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். யோபு 9:8யோவா 6:19மாற் 6:48மத் 24:43சங் 93:3-4லூக் 12:38சங் 104:3வெளி 10:2 அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது, திகிலடைந்து, “அது பேய்!” என்று சொல்லி, பயத்துடன் சத்தமிட்டார்கள். வெளி 1:17லூக் 1:11-12மாற் 6:49-50தானி 10:6-121 சாமு 28:12-14அப் 12:15யோபு 4:14-16லூக் 24:37

உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! இது நான்தான், பயப்படவேண்டாம்” என்றார். யோவா 16:33அப் 23:11ஏசா 41:10வெளி 1:17-18ஏசா 41:4யோவா 14:1-3ஏசா 51:12யோவா 6:20

அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர்மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான். யோவா 6:68ரோம 12:3மத் 26:33-35யோவா 13:36-38மத் 19:27லூக் 22:31-34லூக் 22:49-50மாற் 14:31

அதற்கு இயேசு, “வா” என்றார். பிலி 4:13மாற் 9:23அப் 3:16லூக் 17:6மாற் 11:22-23மத் 21:21ரோம 4:19மத் 17:20

அப்பொழுது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின்மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். ஆனால் அவன் காற்றைக் கண்டபோது பயமடைந்து மூழ்கத்தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான். புலம் 3:54-572 தீமோ 4:16-17மாற் 14:38மத் 8:24-25யோனா 2:2-7லூக் 22:54-61சங் 69:1-2சங் 107:27-30

உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார். யாக் 1:6-8சங் 138:7ஆதி 22:14லூக் 22:31-32மத் 17:20மத் 8:26மாற் 5:41ஏசா 63:12

அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று. சங் 107:29-30மாற் 4:41யோவா 6:21மாற் 6:51 படகிற்குள் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்!” என்றார்கள். யோவா 11:27சங் 2:7ரோம 1:4யோவா 1:49மாற் 1:1யோவா 6:69மத் 16:16மத் 28:17

அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள். மாற் 6:53-56லூக் 5:1யோவா 6:24-25 அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டபோது, சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள். அவர்களோ, தங்களில் நோயாளிகளை எல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள். மத் 4:24-25மாற் 1:28-34மாற் 2:1-12மாற் 3:8-10மாற் 6:55 நோயாளிகள் இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள். லூக் 6:19அப் 19:11-12அப் 3:16யாத் 28:33-43மத் 9:20-21மாற் 3:10அப் 4:14-16அப் 4:9-10