யோவான் 6

John 6

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல்

இவை நடந்த கொஞ்சக் காலத்திற்கு பின்பு, இயேசு கலிலேயா கடலின் மறுகரைக்குச் சென்றார். இது திபேரியா கடல் என்றும் அழைக்கப்பட்டது. மாற் 6:31-44யோவா 6:23லூக் 5:1மத் 4:18யோவா 21:1எண் 34:11மத் 14:13-21யோசு 12:3 நோயாளிகளுக்கு இயேசு செய்த அடையாளங்களை கண்டிருந்ததினால், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். மத் 4:24-25மத் 12:15மத் 15:30-31யோவா 2:11மத் 14:14மாற் 6:33மத் 8:1மத் 13:2 அப்பொழுது இயேசு ஒரு மலைச்சரிவில் ஏறிப்போய், தமது சீடர்களுடன் உட்கார்ந்தார். யோவா 6:15லூக் 9:28மத் 14:23லூக் 6:12-13மத் 15:29 யூதருடைய பஸ்கா என்ற பண்டிகை சமீபமாயிருந்தது. யோவா 2:13யோவா 11:55உபா 16:1யாத் 12:6-14யோவா 5:1யோவா 12:1யோவா 13:1லேவி 23:5

இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, மக்கள் பெருங்கூட்டமாகத் தம்மிடம் வருவதைக் கண்டார். அவர் பிலிப்புவிடம், “இந்த மக்கள் சாப்பிடும்படி உணவை நாம் எங்கே வாங்கலாம்?” என்று கேட்டார். லூக் 9:12-13மத் 15:33யோவா 1:43யோவா 4:35மத் 14:14-15மாற் 6:34-35மாற் 8:2-4 அவனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இயேசு அதைக் கேட்டார். ஏனெனில் தாம் என்ன செய்யப்போகிறார் என்று அவர் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார். ஆதி 22:12 நாளாக 32:31உபா 13:3உபா 8:16உபா 33:8உபா 8:2

பிலிப்பு இயேசுவுக்கு மறுமொழியாக, “ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பிடி அளவு உணவு கொடுத்தால்கூட, இவர்களுக்காக உணவு வாங்க, ஆறுமாதச் சம்பளம் 1 போதாதே!” என்றான். மாற் 6:37எண் 11:21-22யோவா 12:52இராஜா 4:43மத் 18:28

அவருடைய சீடர்களில் இன்னொருவனான சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா அவரிடம், யோவா 1:40-44மத் 4:18 “இங்கே ஒரு சிறுவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு சிறு மீன்களும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரும் கூட்டமான மக்களுக்கு அது எப்படிப் போதும்?” என்றான். 2இராஜா 4:42-44மத் 14:17மாற் 6:38லூக் 9:13சங் 78:19மத் 16:9மாற் 8:192 கொரி 8:9

அதற்கு இயேசுவோ, “மக்களை உட்காரச் செய்யுங்கள்” என்றார். அந்த இடமோ புல் நிறைந்த தரையாய் இருந்தது. எனவே மக்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் ஆண்கள் மட்டும் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள். லூக் 9:14-16மத் 14:18-19மாற் 8:6-7மத் 15:35-36மாற் 6:39-41 அப்பொழுது இயேசு அந்த அப்பங்களை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தியபின் அங்கு உட்கார்ந்திருப்பவர்களுக்கு வேண்டியமட்டும் பகிர்ந்து கொடுத்தார். மீன்களையும் அவ்விதமாகவே கொடுத்தார். 1 தெச 5:18யோவா 6:23லூக் 24:30மத் 15:36ரோம 14:61 கொரி 10:311 தீமோ 4:4-51 சாமு 9:13

அவர்கள் எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டு முடிந்ததும், இயேசு சீடர்களிடம், “மீதியாயிருக்கும் அப்பத்துண்டுகளை சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளில் ஒன்றையும் வீணாக்கக் கூடாது” என்றார். லூக் 1:53லூக் 9:17நெகே 9:25மாற் 6:42-44நெகே 8:10மத் 14:20-21மத் 15:37-38மாற் 8:8-9 அப்படியே அவர்கள் மீந்தவற்றைச் சேர்த்தெடுத்தார்கள். அந்த ஐந்து வாற்கோதுமை அப்பத்தின் துண்டுகளிலிருந்து சாப்பிட்டு மீதியாய் விடப்பட்டவற்றை அவர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். நீதி 11:24-251 இராஜா 7:15-162 நாளாக 25:92 கொரி 9:8-92இராஜா 4:2-7பிலி 4:19

இயேசு செய்த அந்த அற்புத அடையாளத்தை மக்கள் கண்டபோது, “நிச்சயமாக இவரே உலகத்திற்கு வரவேண்டியிருந்த இறைவாக்கினர்” என்று சொல்லத் தொடங்கினார்கள். உபா 18:15-18அப் 7:37மத் 21:11மத் 11:3அப் 3:22-24ஆதி 49:10யோவா 1:21யோவா 7:40 அவர்கள் தம்மைப் பலவந்தமாய் தங்களுடைய அரசனாக்க எண்ணியிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்தார். எனவே அவர் அவர்களைவிட்டு விலகி, மீண்டும் தனியாகவே ஒரு மலைக்குச் சென்றார். யோவா 18:36யோவா 7:3-4யோவா 6:15-21லூக் 19:38மாற் 11:9மாற் 6:45-52மத் 14:22-33யோவா 2:24-25

இயேசு தண்ணீரின்மேல் நடத்தல்

மாலையானபோது, அவருடைய சீடர்கள் மலையிலிருந்து இறங்கி கடலுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து கப்பர்நகூமுக்குப் போகப் புறப்பட்டார்கள். அப்பொழுது இருட்டிவிட்டது, இயேசுவோ இன்னும் அவர்களுடன் வந்து சேரவில்லை. மாற் 6:45யோவா 6:24-25யோவா 2:12யோவா 4:46 கடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால் கடல் கொந்தளித்தது. சங் 135:7சங் 107:25மத் 14:24 அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரம்வரை கட்டுப்படுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, இயேசு கடலின்மேல் நடந்து படகின் அருகில் வந்தார்; அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள். மாற் 6:47-49மத் 14:25-26யோவா 14:18சங் 93:4யோபு 9:8யோனா 1:13எசேக் 27:26லூக் 24:36-39 இயேசு அவர்களிடம், “நான்தான்; பயப்படவேண்டாம்” என்றார். மத் 14:27-31ஏசா 43:1-2ஏசா 44:8ஏசா 41:10ஏசா 41:14வெளி 1:17-18மாற் 6:50மாற் 16:6 அப்பொழுது அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஏற்றிக்கொண்டவுடன் படகு அவர்கள் போய்ச் சேரவேண்டிய கரையை அடைந்தது. மாற் 6:51மத் 14:32-33சங் 24:7-10வெளி 3:20உன்னத 3:4

மறுநாள் கடலின் மறுகரையில் தங்கியிருந்த மக்கள், அங்கே ஒரு படகு மட்டுமே இருந்தது என்றும், அதிலே இயேசு தமது சீடர்களுடன் ஏறவில்லை என்றும், சீடர்கள் மட்டுமே அதில் சென்றார்கள் என்றும் தெரிந்துகொண்டார்கள். மாற் 6:45யோவா 6:15-21யோவா 6:2மத் 14:22 பின்பு திபேரியாவிலிருந்து சில படகுகள், கர்த்தர் நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த அப்பத்தை மக்கள் சாப்பிட்ட இடத்தின் அருகே வந்துசேர்ந்தன. யோவா 6:1யோவா 6:11-12 எனவே அங்கு கூடிவந்த மக்கள், இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கு இல்லையென்று கண்டார்கள். உடனே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு அங்கிருந்த கப்பல்களில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யோவா 6:17லூக் 8:40மாற் 1:37மாற் 6:53யோவா 18:4-5யோவா 20:15யோவா 6:23யோவா 6:59

இயேசுவே ஜீவ அப்பம்

கடலின் மறுகரையிலே அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவர்கள் அவரிடம், “போதகரே, எப்பொழுது நீர் இங்கே வந்தீர்?” என்று கேட்டார்கள். யோவா 1:38-39மத் 23:7

அப்பொழுது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் அடையாளங்களைக் கண்டதினால் அல்ல, இங்கே திருப்தியாகச் சாப்பிட்டதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள். யாக் 4:3-4பிலி 3:19பிலி 2:211 தீமோ 6:5அப் 8:18-21எசேக் 33:31ரோம 16:18யோவா 6:2 அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். கொலோ 3:2ஏசா 55:2யோவா 6:542 தீமோ 2:19யோவா 6:40மத் 6:19ரோம 6:23யோவா 6:51

அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். அப் 16:30அப் 9:6லூக் 10:25மத் 19:16அப் 2:37உபா 5:27மீகா 6:7-8எரே 42:20

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இறைவன் அனுப்பிய என்னை விசுவாசிப்பதே இறைவனுடைய வேலை” என்றார். 1 யோவா 3:23அப் 16:31யோவா 3:36எபி 5:91 யோவா 5:1மாற் 16:16ரோம 4:4-5யோவா 5:39

அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கும்படி, நீர் எங்களுக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பீர்? என்னத்தைச் செய்வீர்? யோவா 12:371 கொரி 1:22யோவா 10:38யோவா 6:361 இராஜா 13:31 இராஜா 13:5அப் 4:30யாத் 4:8 எங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்களே; ‘அவர்கள் சாப்பிடுவதற்கு அவர் பரலோகத்திலிருந்து உணவு கொடுத்தார்’ 2 என்று எழுதியிருக்கிறதே” என்றார்கள். நெகே 9:15சங் 105:40சங் 78:24-25யாத் 16:4-15யாத் 16:35உபா 8:3யோவா 6:49நெகே 9:20

அப்பொழுது இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலிருந்து உங்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல, என் பிதாவே பரலோகத்திலிருந்து வந்த உண்மையான உணவை உங்களுக்குக் கொடுக்கிறார். யாத் 16:4யோவா 15:1யோவா 6:58யாத் 16:8கலா 4:4யோவா 1:9யோவா 6:33யோவா 6:35 பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, உலகத்துக்கு ஜீவன் கொடுக்கிற நானே இறைவனின் உணவு” என்றார். யோவா 8:42யோவா 17:8யோவா 3:131 யோவா 1:1-2யோவா 6:501 தீமோ 1:15யோவா 13:3யோவா 16:28

அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எப்பொழுதும் இந்த உணவை நீர் எங்களுக்குத் தாரும்” என்றார்கள். யோவா 4:15யோவா 6:26சங் 4:6

அப்பொழுது இயேசு அவர்களிடம், “நானே ஜீவ அப்பம். என்னிடம் வருகிறவன் ஒருபோதும் பசியுடன் போகமாட்டான். என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் தாகமடையமாட்டான். யோவா 6:48-58ஏசா 55:1-3வெளி 22:17யோவா 6:41ஏசா 49:10யோவா 7:37-38வெளி 7:16மத் 11:28 நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என்னைக் கண்டு இன்னும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள். 1 பேது 1:8-9யோவா 12:37யோவா 6:26லூக் 16:31யோவா 15:24யோவா 6:30யோவா 6:40யோவா 6:64 பிதா எனக்குக் கொடுக்கின்ற அனைவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒருவரையும் நான் துரத்திவிடமாட்டேன். மத் 11:28யோவா 6:39யோவா 17:24யோவா 10:28-29யோவா 17:2யோவா 17:62 தீமோ 2:19ஏசா 55:7 ஏனெனில் நான் என்னுடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்வதற்காகவே பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன். யோவா 5:30யோவா 4:34யோவா 3:31பிலி 2:7-8சங் 40:7-8ஏசா 53:10யோவா 6:33யோவா 3:13 அவர் எனக்குத் தந்திருப்பவர்கள் எல்லோரிலும் நான் ஒருவரையும் இழந்துவிடக் கூடாது. கடைசி நாளிலே நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது. யோவா 17:12யோவா 6:40யோவா 18:9யோவா 10:27-30யோவா 6:54யோவா 6:44யூதா 1:1ரோம 8:11 என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். யோவா 5:24ரோம 6:23யோவா 6:54யோவா 11:25யோவா 3:15-18யோவா 4:14யோவா 1:14யோவா 12:45

“நானே பரலோகத்திலிருந்து கீழே வந்த உணவு” என்று இயேசு சொன்னதால், யூதர்களில் சிலர் அவரைக்குறித்து முறுமுறுக்கத் தொடங்கினார்கள். யோவா 6:51-52யோவா 6:33யோவா 6:48யோவா 6:60யோவா 6:66யோவா 7:12யோவா 6:43யோவா 6:58 அவர்கள் இயேசுவைப்பற்றி, “இவர் யோசேப்பின் மகன் இயேசு அல்லவா? இவருடைய தகப்பனையும் தாயையும் நமக்குத் தெரியுமே. அப்படியிருக்க, ‘நான் பரலோகத்திலிருந்து வந்தேன்’ என்று இப்பொழுது இவர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள். லூக் 4:22மத் 13:55-56மாற் 6:31 கொரி 15:47யோவா 7:27-28கலா 4:4யோவா 6:38யோவா 6:62

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முறுமுறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றார். எபி 4:13யோவா 6:64யோவா 16:19மத் 16:8மாற் 9:33 “என்னை அனுப்பிய பிதா, ஒருவனை ஈர்த்துக்கொள்ளாவிட்டால், ஒருவரும் என்னிடத்தில் வரமாட்டார்கள். என்னிடம் வருகிறவரையோ நான் கடைசி நாளில் எழுப்புவேன். யோவா 6:65மத் 11:25-27யோவா 6:39-40எபே 2:4-10யோவா 12:32மத் 16:17யோவா 6:45தீத் 3:3-5 ‘அவர்கள் எல்லோரும் இறைவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ 3 என்று இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே பிதாவுக்குச் செவிகொடுத்து, அவரிடம் கற்றுக்கொள்கிற ஒவ்வொருவனும் என்னிடம் வருகிறான். ஏசா 54:13எரே 31:33-34எபி 10:16எபி 8:10-111 தெச 4:9மீகா 4:2ஏசா 2:3யோவா 6:65 இறைவனிடமிருந்து வந்த என்னைத்தவிர, ஒருவரும் பிதாவைக் கண்டதில்லை; நான் மட்டுமே பிதாவைக் கண்டிருக்கிறேன். யோவா 1:18யோவா 7:29லூக் 10:22மத் 11:271 யோவா 4:121 தீமோ 6:16கொலோ 1:15யோவா 14:9-10 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. யோவா 3:36கொலோ 3:3-4யோவா 3:16யோவா 5:24ரோம 5:9-10யோவா 3:18யோவா 6:40யோவா 6:54 நானே ஜீவ அப்பம். யோவா 6:511 கொரி 11:24-251 கொரி 10:16-17யோவா 6:41யோவா 6:33-35 உங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்கள்; ஆனால் அவர்கள் இறந்துபோனார்களே. எபி 3:17-19யூதா 1:51 கொரி 10:3-5யோவா 6:31யோவா 6:58எண் 26:65சகரி 1:5 ஆனால் புசிக்கிறவர்கள் சாகாமல் இருக்கக்கூடிய அப்பம் இங்கு இருக்கிறது. அது பரலோகத்திலிருந்து வந்திருக்கிறது. யோவா 6:33ரோம 8:10யோவா 6:51யோவா 6:58யோவா 8:51யோவா 3:13யோவா 6:42யோவா 11:25-26 நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். யோவா 6:33லூக் 22:19தீத் 2:14எபி 10:5-12யோவா 3:132 கொரி 5:21மத் 20:28எபி 10:20

அப்பொழுது யூதர்கள், “இவன் எப்படி தன் மாம்சத்தை நமக்குச் சாப்பிடக் கொடுப்பான்?” என்று தங்களுக்குள்ளே கடுமையாய் வாக்குவாதம் பண்ணத் தொடங்கினார்கள். யோவா 10:19யோவா 9:16யோவா 6:411 கொரி 2:14அப் 17:32யோவா 3:4யோவா 3:9யோவா 4:11

இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் மானிடமகனாகிய எனது மாம்சத்தைச் சாப்பிட்டு, என்னுடைய இரத்தத்தை பானம் பண்ணாவிட்டால் உங்களுக்குள்ளே ஜீவன் இருக்கமாட்டாது. 1 யோவா 5:12மத் 26:26-28யோவா 6:55யோவா 6:47யோவா 15:4யோவா 6:26-27யோவா 3:3வெளி 2:17 எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். யோவா 6:39-40பிலி 3:7-10கலா 2:20யோவா 6:27நீதி 9:4-6ஏசா 55:1-3யோவா 4:14யோவா 6:47 ஏனெனில் எனது மாம்சமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். யோவா 6:32யோவா 8:31யோவா 8:36யோவா 1:9யோவா 15:11 யோவா 5:20எபி 8:2யோவா 1:47 எனது மாம்சத்தைப் புசித்து, எனது இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவர், என்னில் தங்கி வாழ்கிறார். நானும் அவரில் வாழ்கிறேன். 1 யோவா 3:24யோவா 15:4-5வெளி 3:20யோவா 14:20யோவா 17:21-23சங் 91:91 யோவா 4:15-16யோவா 14:23 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினார். பிதாவின் நிமித்தமே நான் உயிர் வாழ்கிறேன். அதைப் போலவே என் மாம்சத்தைப் புசிக்கிறவர் என் நிமித்தம் வாழ்வடைவார். கலா 2:20யோவா 17:21யோவா 5:26கொலோ 3:3-4எரே 10:10யோவா 3:17சங் 18:461 கொரி 15:22 இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். யோவா 3:36யோவா 6:47-51யோவா 6:31-34யோவா 6:41 இயேசு கப்பர்நகூமிலே ஜெப ஆலயத்தில் போதித்தபோது இதைச் சொன்னார். யோவா 6:24யோவா 18:20லூக் 4:31நீதி 1:20-23நீதி 8:1-3சங் 40:9-10

சீடர்களில் பலர் இயேசுவை விட்டுவிடுதல்

இதைக் கேட்ட இயேசுவினுடைய சீடர்களில் பலர், “இது ஒரு கடுமையான போதனை. யாரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்கள். யோவா 6:66யோவா 8:43யோவா 8:31மத் 11:6யோவா 6:41-422 பேது 3:16எபி 5:11

தமது சீடர்கள் இதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு அறிந்து அவர்களிடம், “இது உங்கள் மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறதா? யோவா 2:24-25யோவா 6:64எபி 4:13வெளி 2:23யோவா 21:17மத் 11:6 மானிடமகனாகிய நான் முன்பிருந்த இடத்திற்கு மேலெழுந்து போவதை நீங்கள் கண்டீர்களானால், அது உங்களுக்கு எப்படியிருக்கும்! யோவா 3:13மாற் 16:19எபே 4:8-10லூக் 24:511 பேது 3:22அப் 1:9யோவா 16:28யோவா 17:4-5 பரிசுத்த ஆவியானவரே ஜீவனைக் கொடுக்கிறார்; மாம்சமானதோ ஒன்றுக்கும் உதவாது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகள் ஆவியானவரையும் ஜீவனையும் கொண்டுள்ளன. கலா 5:25எபி 4:12சங் 119:93யோவா 6:68சங் 119:1301 பேது 1:23சங் 119:50உபா 32:47 ஆனால் உங்களில் சிலர் விசுவாசியாமல் இருக்கிறீர்கள்” என்றார். ஏனெனில் இயேசு தொடக்கத்திலிருந்தே அவர்களில் யார் தம்மை விசுவாசிக்கவில்லை என்றும், யார் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்றும் அறிந்திருந்தார். 2 தீமோ 2:19யோவா 10:26எபி 4:13யோவா 13:10-11யோவா 2:24-25யோவா 5:42யோவா 6:61யோவா 6:70-71 மேலும் இயேசு சொன்னதாவது, “யாரையாவது என் பிதா எனக்கு கொடுத்தால் மட்டுமே, அவர் என்னிடம் வரமுடியும் என்று இதனாலேயே நான் உங்களுக்குச் சொன்னேன்” என்றார். யோவா 6:44-45யோவா 6:37யோவா 3:27யோவா 10:26-27எபே 2:8-92 தீமோ 2:25யாக் 1:16-18தீத் 3:3-7

அப்பொழுதிலிருந்து இயேசுவின் சீடர்களில் பலர் அவரைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். தொடர்ந்து அவர்கள் அவரைப் பின்பற்றவில்லை. லூக் 9:621 யோவா 2:19எபி 10:38யோவா 6:60யோவா 8:312 தீமோ 4:10மத் 19:22யோவா 6:64

அப்பொழுது இயேசு பன்னிரண்டு பேரிடமும், “நீங்களும் போய்விட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். யோவா 6:70லூக் 14:25-33ரூத் 1:11-18யோசு 24:15-222 சாமு 15:19-20மத் 10:2

சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. சங் 73:25யோவா 5:241 யோவா 5:11-13அப் 4:12அப் 5:20யோவா 6:63மத் 16:16அப் 7:38 நீர் இறைவனின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்” என்றான். யோவா 11:27லூக் 9:20மாற் 8:291 யோவா 5:11 யோவா 5:20யோவா 1:45-49யோவா 20:28யோவா 1:29

அப்பொழுது இயேசு, “பன்னிரண்டு பேராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? ஆனால் உங்களில் ஒருவன் பிசாசாக இருக்கிறான்!” என்றார். யோவா 13:27யோவா 13:2யோவா 17:12யோவா 6:64யோவா 13:18வெளி 3:9-101 யோவா 3:81 தீமோ 3:11 இயேசு சீமோன் ஸ்காரியோத்தின் மகனான யூதாஸைக் குறித்தே இவ்விதம் சொன்னார். அவன் பன்னிரண்டு பேரில் ஒருவனாயிருந்தும் அவரைக் காட்டிக்கொடுக்கிறவனாய் இருந்தான். மத் 26:14-16அப் 1:16-20யூதா 1:4சங் 41:9அப் 2:23யோவா 13:26யோவா 18:2-6மத் 27:3-5