முதல் கணக்கெடுப்பு
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது: யாத் 25:22யாத் 19:1எண் 10:11-12யாத் 40:17யாத் 40:2லேவி 1:1லேவி 27:34எண் 9:1 “நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும். யாத் 30:12யாத் 38:26எண் 1:18எண் 1:22எண் 26:2-41 நாளாக 21:1-21 நாளாக 27:23-242 சாமு 24:1-3 நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள். யாத் 30:14எண் 14:292 நாளாக 26:11-132 சாமு 24:9உபா 24:5உபா 3:18யாத் 12:17எண் 26:2 இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும். எண் 1:16யாத் 18:251 நாளாக 27:1-22உபா 1:15யாத் 18:21யோசு 22:14எண் 10:14-27எண் 13:2-15
“உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: எண் 7:30உபா 33:1-29யாத் 1:2-5ஆதி 29:32-35ஆதி 30:5-20ஆதி 35:17-26ஆதி 46:8-24ஆதி 49:1-33
“ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;
சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல், எண் 7:36எண் 2:12
யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன், லூக் 3:321 நாளாக 2:10-11மத் 1:2-5எண் 10:14எண் 2:3எண் 7:12ரூத் 4:18ரூத் 4:20
இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல், எண் 7:18எண் 10:15எண் 2:5
செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப், எண் 7:24எண் 10:16எண் 2:7
யோசேப்பின் மகன்களான எண் 7:48எண் 7:541 நாளாக 7:26-27எண் 10:22-23எண் 2:18எண் 2:20
எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா,
மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்,
பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான், எண் 7:60எண் 10:24எண் 2:22
தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர், எண் 7:66எண் 10:25எண் 2:25
ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல், எண் 7:72எண் 10:26எண் 2:27
காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப், எண் 2:14எண் 7:42எண் 10:20
நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.” எண் 7:78எண் 10:27எண் 2:29
தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் 1 இவர்களே. யாத் 18:21யாத் 18:25எண் 7:2எண் 26:91 நாளாக 27:16-22எண் 1:4எண் 16:21 சாமு 22:7
மோசேயும், ஆரோனும் பெயர் கொடுக்கப்பட்ட இம்மனிதரைச் சேர்த்துக்கொண்டார்கள். யோவா 10:3எண் 1:5-15வெளி 7:4-17 இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். எஸ்றா 2:59எபி 7:3நெகே 7:61எபி 7:6எண் 1:1 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான். 2 சாமு 24:1-10எண் 1:2எண் 26:1-2
இஸ்ரயேலின் முதற்பேறான ரூபன் சந்ததியிலிருந்து, எண் 26:5-7எண் 2:10-111 நாளாக 5:1ஆதி 29:32ஆதி 46:9ஆதி 49:3-4
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர். எண் 26:7எண் 2:10-11
சிமியோனின் சந்ததிகளிலிருந்து, எண் 26:12-14ஆதி 29:33ஆதி 34:25-30ஆதி 42:24ஆதி 46:10ஆதி 49:5-6எண் 2:12-13
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர். எண் 26:14எண் 2:13எண் 25:14எண் 25:8-9
காத்தின் சந்ததிகளிலிருந்து, எண் 26:15-18ஆதி 30:10-11ஆதி 46:16ஆதி 49:19எண் 2:14-15
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். காத் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 45,650 பேர். எண் 26:18எண் 2:15
யூதாவின் சந்ததிகளிலிருந்து, ஆதி 29:35எண் 26:19-222 சாமு 24:91 நாளாக 5:22 நாளாக 17:14-16ஆதி 46:12ஆதி 49:8-12மத் 1:2
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். யூதாவின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 74,600 பேர். 2 சாமு 24:9எண் 26:222 நாளாக 17:14-16எண் 2:3-4
இசக்கார் சந்ததிகளிலிருந்து, ஆதி 30:18ஆதி 46:13ஆதி 49:14-15எண் 2:5-6எண் 23:23-25எண் 26:23-25
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். இசக்காரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 54,400 பேர். எண் 26:25எண் 2:6
செபுலோனின் சந்ததிகளிலிருந்து, எண் 26:26-27ஆதி 30:20ஆதி 46:14ஆதி 49:13எண் 2:7-8
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். செபுலோனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 57,400 பேர். எண் 26:27எண் 2:8
யோசேப்பின் மகனான எண் 26:35-37உபா 33:17ஆதி 30:24ஆதி 37:1-36ஆதி 39:1-23ஆதி 46:20ஆதி 48:1-22ஆதி 49:22-26
எப்பிராயீமின் சந்ததிகளிலிருந்து,
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 40,500 பேர். எண் 26:37உபா 33:17ஆதி 48:5எண் 2:19
யோசேப்பின் மகனான எண் 26:28-34
மனாசேயின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். மனாசேயின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 32,200 பேர். எண் 26:34ஆதி 48:19-20எண் 2:21
பென்யமீனின் சந்ததிகளிலிருந்து, ஆதி 49:272 நாளாக 17:17ஆதி 35:16-18ஆதி 44:20ஆதி 46:21எண் 26:38-41வெளி 7:8
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர். எண் 26:412 நாளாக 17:17நியாயாதி 20:44-46எண் 2:23
தாணின் சந்ததிகளிலிருந்து, ஆதி 46:23ஆதி 30:5-6ஆதி 49:16-17எண் 26:42-43
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர். எண் 26:43எண் 2:26
ஆசேரின் சந்ததிகளிலிருந்து, ஆதி 30:12-13ஆதி 46:27ஆதி 49:20எண் 26:44-47
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும், உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். ஆசேரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 41,500 பேர். எண் 26:47எண் 2:28
நப்தலியின் சந்ததிகளிலிருந்து, ஆதி 30:7-8ஆதி 46:24ஆதி 49:21எண் 26:48-50
இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். நப்தலியின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 53,400 பேர். எண் 26:50எண் 2:30
மோசேயினாலும், ஆரோனாலும், தன்தன் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இஸ்ரயேலரின் பன்னிரண்டு தலைவர்களினாலும் எண்ணப்பட்ட மனிதர்கள் இவர்களே. எண் 26:64எண் 1:2-16 இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிசெய்யக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய இஸ்ரயேலர் எல்லோரும் அவர்களுடைய குடும்பங்களின்படியே எண்ணப்பட்டார்கள். மொத்த எண்ணிக்கை 6,03,550 பேர். யாத் 12:37யாத் 38:26எண் 26:51எண் 2:321 நாளாக 21:51 இராஜா 4:202 நாளாக 13:32 நாளாக 17:14-19
ஆனால், மற்றவர்களோடு லேவி கோத்திரத்தின் குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை. எண் 2:33எண் 3:11 நாளாக 21:61 நாளாக 6:1-81எண் 26:57-62எண் 1:3எண் 1:50எண் 8:1-26 யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்ததாவது: “நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம். எண் 26:62எண் 2:33 ஆனால் நீ லேவியரை சாட்சிபகரும் இறைசமுகக் கூடாரத்திற்கும், அதன் எல்லா பணிப்பொருட்களுக்கும், அதற்குரிய எல்லாவற்றிற்கும்மேல் பொறுப்பாக நியமிக்கவேண்டும். இறைசமுகக் கூடாரத்தையும், அதன் பணிமுட்டுகளையும் அவர்களே சுமக்கவேண்டும். அவர்களே அதைப் பராமரித்து, அதைச் சுற்றிலும் முகாமிடவேண்டும். யாத் 38:21யாத் 31:18எண் 4:151 நாளாக 23:1-32யாத் 32:26-29நெகே 13:10-13நெகே 13:22எண் 20:11 எப்பொழுதாவது இறைசமுகக் கூடாரத்தை நகர்த்தவேண்டுமானால், லேவியரே அதைக் கழற்றவேண்டும். இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டுமென்றாலும் அதை லேவியரே செய்யவேண்டும். அதற்கு அருகில் செல்லும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும். எண் 3:38எண் 3:101 சாமு 6:192 சாமு 6:7எண் 18:22லேவி 22:10-13எண் 10:11எண் 10:17-21 இஸ்ரயேலர் தங்கள் பிரிவுகளின்படியே கூடாரங்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன் சொந்தக் கூடாரத்தில் தன் சொந்தக் கொடியின்கீழ் இருக்கவேண்டும். எண் 2:2எண் 2:34எண் 10:1-36எண் 24:2 ஆனாலும், இஸ்ரயேல் சமுதாயத்தின்மேல் கோபம் வராதபடிக்கு லேவியர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றி தங்கள் முகாமிடவேண்டும். உடன்படிக்கைக் கூடாரத்தின் பராமரிப்புக்கு லேவியரே பொறுப்பாயிருக்க வேண்டும்.” எண் 16:461 நாளாக 23:32லேவி 10:6எண் 3:7-8எண் 31:30எண் 31:47எண் 8:19எண் 8:24-26
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் இவற்றையெல்லாம் செய்தார்கள். உபா 12:321 சாமு 15:22யாத் 23:21-22யாத் 39:32யாத் 39:43யாத் 40:16யாத் 40:32மத் 28:20