எண்ணாகமம் 21

Numbers 21

ஆராத் அழிக்கப்படுதல்

தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானியனான ஆராத் பட்டணத்து அரசன், இஸ்ரயேலர் அத்தரீமுக்குப் போகிறவழியாய் வருகிறதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் இஸ்ரயேலரைத் தாக்கி சிலரைச் சிறைப்பிடித்தான். நியாயாதி 1:16எண் 33:40யோசு 12:14உபா 2:32யோசு 11:19-20யோசு 7:5எண் 13:21-22எண் 14:45 அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம்: “நீர் இந்த மக்களை விடுவித்து எங்கள் கையில் கொடுத்தால், நாங்கள் அவர்கள் பட்டணத்தை முழுவதும் அழித்துப்போடுவோம்” என்று நேர்த்திக்கடன் செய்தார்கள். ஆதி 28:20நியாயாதி 11:301 சாமு 1:11யோசு 6:262 சாமு 15:7-8உபா 13:15லேவி 27:28-29சங் 116:18 யெகோவா இஸ்ரயேலரின் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, கானானியரை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்பொழுது இஸ்ரயேலர் அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முழுவதும் அழித்தார்கள். அதனால் அவ்விடம், ஓர்மா 1 என்று அழைக்கப்பட்டது. எண் 14:45உபா 1:441 சாமு 30:30சங் 10:17சங் 102:17சங் 91:15

வெண்கலப் பாம்பு

அவர்கள் ஓர் என்னும் மலையிலிருந்து செங்கடலுக்குப் போகும் வழியாக ஏதோமைச் சுற்றிப்போகும்படி பயணம் செய்தார்கள். ஆனால் மக்களோ வழியில் பொறுமையை இழந்தார்கள். யாத் 6:9நியாயாதி 11:18அப் 14:22எண் 32:71 தெச 3:3-4எண் 32:9எண் 33:41உபா 1:40 அவர்கள் இறைவனுக்கும், மோசேக்கும் விரோதமாகப் பேசி, “பாலைவனத்தில் செத்துப்போகும்படி எங்களை எகிப்திலிருந்து வெளியே ஏன் கொண்டுவந்தீர்கள்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை. இந்த கேவலமான உணவை நாங்கள் அருவருக்கிறோம்” என்றார்கள். சங் 78:19யாத் 17:2-3எண் 16:13-14எண் 16:41யாத் 14:11யாத் 16:2-3எண் 11:1-9எண் 14:1-4

அப்பொழுது யெகோவா அவர்களுக்குள்ளே விஷப்பாம்புகளை அனுப்பினார். அவை மக்களைக் கடித்ததினால் இஸ்ரயேலரில் பலர் இறந்தார்கள். 1 கொரி 10:9உபா 8:15எரே 8:17ஆமோ 9:3-4ஏசா 30:6ஏசா 14:29ஆதி 3:14-15 எனவே மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் யெகோவாவுக்கும், உமக்கும் விரோதமாய்ப் பேசியதனால் பாவம்செய்தோம். இந்தப் பாம்புகளை எங்களைவிட்டு அகற்றும்படி யெகோவாவிடம் மன்றாடும்” என்றார்கள். அப்பொழுது மோசே மக்களுக்காக மன்றாடினான். அப் 8:24யாத் 8:8சங் 78:34எண் 11:21 இராஜா 13:6யாத் 8:281 சாமு 12:19-231 சாமு 15:24

யெகோவா மோசேயிடம், “நீ ஒரு பாம்பைச் செய்து, ஒரு கம்பத்தின்மேல் வைத்து உயர்த்திவை. கடிக்கப்பட்டவன் எவனும் அதைப்பார்த்தால் பிழைப்பான்” என்றார். யோவா 3:14சங் 106:43-45சங் 145:8 அவ்வாறே மோசே வெண்கலத்தினால் ஒரு பாம்பைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் உயர்த்திவைத்தான். பாம்பினால் கடிக்கப்பட்ட எவனும் வெண்கலப்பாம்பை நோக்கிப் பார்த்தபோது பிழைத்தான். யோவா 3:14-15எபி 12:2யோவா 6:402இராஜா 18:4யோவா 12:32ஏசா 45:22ரோம 8:32 கொரி 5:21

மோவாபிற்குச் செல்லுதல்

இஸ்ரயேலர் தொடர்ந்து பயணம்பண்ணி ஒபோத்தில் முகாமிட்டார்கள். எண் 33:43-45 பின் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, சூரிய உதயதிசையில் மோவாபிற்கு எதிர்ப்புறமாயுள்ள பாலைவனத்தில் அபாரீம் மேடுகளில் முகாமிட்டார்கள். அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டு சாரேத் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள். உபா 2:13-14 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பாலைவனத்தில் உள்ளதும், எமோரியரின் பிரதேசத்துக்குள் நீண்டு செல்கிறதுமான அர்னோன் ஆற்றின் அருகே முகாமிட்டார்கள். மோவாபுக்கும், எமோரியருக்கும் இடையில் மோவாபின் எல்லையாக அர்னோன் ஆறு ஓடுகிறது. நியாயாதி 11:18எண் 22:36உபா 2:24ஏசா 16:2எரே 48:20எண் 21:14 அதனால்தான் யெகோவாவினுடைய யுத்தங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதாவது: 2 சாமு 1:18யோசு 10:13

“சூப்பாவிலுள்ள வாகேபும்

அர்னோனின் பள்ளத்தாக்கும் ஆர் என்னும் பட்டணம்வரை சென்று உபா 2:18உபா 2:9எண் 21:28உபா 2:29ஏசா 15:1

மோவாபின் எல்லை ஓரமாக

சாய்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் மலைச்சரிவும்.”

அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பேயேருக்குப் போனார்கள். “மக்களைக் கூடிவரச்செய்; அவர்களுக்கு நான் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன கிணறு அங்குதான் இருந்தது. எண் 20:8ஏசா 12:3ஏசா 41:17-18நியாயாதி 9:21யாத் 17:6ஏசா 43:20வெளி 21:6வெளி 22:1

அப்பொழுது இஸ்ரயேலர் பாடிய பாடலாவது: யாத் 15:1-2ஏசா 12:1-2ஏசா 12:5யாக் 5:13நியாயாதி 5:1சங் 105:2சங் 106:12

“கிணற்றுத் தண்ணீரே, பொங்கி வா!

அதைக் குறித்துப் பாடுங்கள்.

பிரபுக்கள் வெட்டிய கிணற்றைக் குறித்தும், ஏசா 33:221 தீமோ 6:17-182 நாளாக 17:7-9உபா 33:4உபா 5:31யாக் 4:12யோவா 1:17நெகே 3:1

மக்களில் உயர்குடிப்பிறந்தோர் செங்கோல்களினாலும்,

கோல்களினாலும் தோண்டிய கிணற்றைக்குறித்துப் பாடுங்கள்.”

அதன்பின் அவர்கள் பாலைவனத்திலிருந்து மத்தானாவுக்குப் போனார்கள். மத்தானாவிலிருந்து, நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும், பாமோத்திலிருந்து மோவாபின் பள்ளத்தாக்கிற்கும் போனார்கள். அங்கே பாழ் நிலத்திற்கு எதிர்த்தாற்போல், பிஸ்காவின் உச்சி இருந்தது. எண் 23:28உபா 1:5உபா 3:27உபா 34:1உபா 4:49எண் 22:1எண் 23:14எண் 26:63

சீகோன் மற்றும் ஆர் ஆகியோரின் தோல்வி

பின்பு இஸ்ரயேலர் எமோரியரின் அரசன் சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி, உபா 2:26-28நியாயாதி 11:19-21எண் 20:14-19

“உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். நாங்கள் எந்த வயல் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம்; எந்தவொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர்கூட குடிக்கமாட்டோம். நாங்கள் நாட்டைக் கடக்கும்வரைக்கும் அரசபாதையின் வழியாகவே செல்வோம்” என்று சொல்லச் சொன்னார்கள். எண் 20:17

ஆனால் சீகோன் தன் பிரதேசத்தின் வழியாக இஸ்ரயேலரைப் போகவிடாதிருந்தான். அவன் தன் முழு படையையும் திரட்டிக்கொண்டு இஸ்ரயேலருக்கு விரோதமாகப் பாலைவனத்திற்கு அணிவகுத்துச் சென்றான். அவன் யாகாசை அடைந்தபோது இஸ்ரயேலருடன் சண்டையிட்டான். நியாயாதி 11:20உபா 29:7-8உபா 2:30-32ஏசா 15:4எரே 48:34எண் 20:21 ஆனால் இஸ்ரயேலரோ அவனை வாளுக்கு இரையாக்கி அர்னோன் முதல் யாப்போக்கு வரையுள்ள அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார்கள். ஆனால் அம்மோனியரின் எல்லைவரை மட்டுமே கைப்பற்றினார்கள். ஏனெனில் அவர்களுடைய எல்லை அரண் செய்யப்பட்டு இருந்தது. ஆமோ 2:9ஆதி 32:22யோசு 24:8நெகே 9:22சங் 136:19உபா 2:31-37உபா 29:7உபா 3:16 இஸ்ரயேலர் எமோரியரின் எல்லா பட்டணங்களையும் கைப்பற்றி அவற்றில் குடியேறினார்கள். எஸ்போனும், அதைச் சுற்றியுள்ள எல்லா குடியிருப்புகளும் இவற்றுள் அடங்கும். ஆமோ 2:10உபா 2:12எசேக் 16:46எசேக் 16:49எசேக் 16:53ஏசா 15:4ஏசா 16:8-9எரே 48:2 எஸ்போன் எமோரிய அரசன் சீகோனின் பட்டணமாயிருந்தது. அவன் முன்னிருந்த மோவாபின் அரசனுடன் சண்டையிட்டு அர்னோன் வரையிலிருந்த அவனுடைய நாட்டை அவனிடமிருந்து எடுத்திருந்தான்.

அதினாலே அவர்களுடைய கவிஞர்கள்: ஆப 2:6ஏசா 14:4எண் 21:14

“எஸ்போனுக்கு வாருங்கள், அது திரும்பவும் கட்டப்படட்டும்;

சீகோன் பட்டணம் புதுப்பிக்கப்படட்டும்.

“எஸ்போனில் இருந்து நெருப்பு வெளியேறிற்று, எண் 21:15எரே 48:45-46ஆமோ 1:10ஆமோ 1:12ஆமோ 1:14ஆமோ 1:4ஆமோ 1:7ஆமோ 2:2

சீகோன் பட்டணத்திலிருந்து சுவாலை வெளியேறிற்று.

அது மோவாபின் ஆர் பட்டணத்தை எரித்தது

அர்னோன் மேடுகளின் குடிகளையும் எரித்துப்போட்டது.

மோவாபியரே உங்களுக்கு ஐயோ கேடு! 2இராஜா 23:13நியாயாதி 11:24எரே 48:461 இராஜா 11:331 இராஜா 11:7எரே 48:71 கொரி 8:4-5ஏசா 15:5

கேமோஷின் மக்களே நீங்கள் அழிந்தீர்கள்!

அவன் தன் மகன்களை அகதிகளாகவும்,

தன் மகள்களை சிறைக்கைதிகளாகவும்

எமோரிய அரசன் சீகோனிடம் ஒப்புக்கொடுத்தான்.

“ஆனால், நாங்களோ அவர்களைத் தள்ளி வீழ்த்தினோம்; ஏசா 15:2எரே 48:18எரே 48:22யோசு 13:17எண் 32:3எண் 32:342 சாமு 11:24ஆதி 49:23

தீபோன்வரை எஸ்போன் அழிந்தது.

மேதேபாவரை பரந்திருக்கும் நோப்பா பகுதிவரையும்

அவர்களை அழித்தோம் என்று பாடுகிறார்கள்.”

இப்படியாக இஸ்ரயேலர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள். உபா 3:16-17யோசு 12:1-6யோசு 13:8-12எண் 32:33-42

மோசே யாசேருக்கு உளவாளிகளை அனுப்பியபின், இஸ்ரயேலர் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள். எரே 48:32எண் 32:1எண் 32:35ஏசா 16:8-9எண் 32:3 பின்பு இஸ்ரயேலர் திரும்பி பாசானுக்குப்போகும் வழியாய்ப் போனார்கள். அப்பொழுது பாசானின் அரசன் ஓக் என்பவன் இஸ்ரயேலரை எதிர்த்து யுத்தம் செய்ய தனது முழு படையுடன் எத்ரேயுக்குப் போனான். யோசு 13:12உபா 1:4உபா 29:7உபா 3:1-6ஆமோ 4:1உபா 32:14உபா 4:47எசேக் 27:6

ஆனால் யெகோவா மோசேயிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் நான் உன் கையில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார். சங் 135:10-11உபா 3:2-3யோசு 8:7எண் 21:24-251 இராஜா 20:131 இராஜா 20:281 சாமு 23:42இராஜா 3:18

அப்படியே இஸ்ரயேலர் அவனையும், அவன் மகன்களையும், அவனுடைய முழு படையையும் வெட்டி வீழ்த்தினார்கள். ஒருவரையும் தப்பிப்போக விடவில்லை. அவர்கள் அவனுடைய நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக்கொண்டார்கள். உபா 29:7-8உபா 3:3-17யோசு 12:4-6யோசு 13:12சங் 135:10-12சங் 136:17-21ரோம 8:37