2 தீமோத்தேயு 4

2 Timothy 4
அத்தியாயம் 4

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: அப் 10:422 தீமோ 4:81 தீமோ 5:21மத் 16:272 தீமோ 2:141 பேது 5:42 தெச 1:7-10தீத் 2:13 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. 1 தெச 5:141 தீமோ 4:15-16வெளி 3:191 தீமோ 4:13தீத் 2:152 தீமோ 2:21தீத் 1:13கலா 6:6 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு. 2 பேது 2:1-32 தீமோ 3:1-61 தீமோ 4:1-31 தீமோ 1:10கலா 4:16யோவா 3:19-21எரே 23:16-17எரே 6:16-17 சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும். சகரி 7:11அப் 7:571 தீமோ 1:42 பேது 1:161 தீமோ 4:7தீத் 1:141 தீமோ 6:202 தீமோ 1:15 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு, தீங்கு அனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. 2 தீமோ 1:82 தீமோ 2:31 பேது 1:13கொலோ 4:172 தீமோ 3:10-121 தீமோ 4:151 தீமோ 4:12அப் 21:8 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது. பிலி 1:23பிலி 2:172 பேது 1:14-15யோசு 23:14ஆதி 48:21எண் 27:12-17உபா 31:14ஆதி 50:24 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 1 தீமோ 6:121 கொரி 9:24-27எபி 12:1-2அப் 20:24பிலி 3:13-14யோவா 4:34வெளி 3:8லூக் 8:15 இப்பொழுது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே அதை எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை விரும்பும் அனைவருக்கும் அதைக் கொடுப்பார். யாக் 1:12வெளி 2:101 பேது 5:4மத் 6:19-201 பேது 1:41 கொரி 9:252 தீமோ 1:12கொலோ 1:5

தனிப்பட்ட அறிவுரைகள்

நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு. 2 தீமோ 1:42 தீமோ 4:21 ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். 1 யோவா 2:15-162 தீமோ 1:15கொலோ 4:14-151 யோவா 5:4-52 கொரி 2:13அப் 16:6பிலே 1:242 தீமோ 4:16 லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். அப் 12:12அப் 12:25பிலே 1:242 தீமோ 1:15அப் 15:39கொலோ 4:10கொலோ 4:141 பேது 5:13 தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பினேன். அப் 20:4எபே 6:21கொலோ 4:7தீத் 3:121 தீமோ 1:3அப் 20:16-17அப் 20:25 துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. 1 கொரி 4:112 கொரி 11:27அப் 16:11அப் 16:8அப் 20:5-12 கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக. 1 தீமோ 1:202 தெச 1:6சங் 28:41 சாமு 24:122 சாமு 3:39அப் 19:33-34எரே 15:15எரே 18:19-23 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். 2 தீமோ 3:8பிலி 3:2மத் 10:16-17 நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக. அப் 7:60யோவா 16:32மாற் 14:50சங் 31:11-131 கொரி 9:31 பேது 3:152 கொரி 7:112 தீமோ 1:15 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன். 1 பேது 5:8பிலி 1:12-14சங் 22:211 சாமு 17:37தானி 6:22அப் 18:9-10அப் 9:15அப் 23:11 கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். சங் 121:72 தெச 3:3யூதா 1:24-25மத் 6:131 தெச 5:23யோவா 10:28-301 பேது 1:5சங் 73:24

இறுதி வாழ்த்துக்கள்

பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. அப் 18:21 கொரி 16:192 தீமோ 1:16-18ரோம 16:3-4அப் 18:26அப் 18:18 எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். அப் 20:4அப் 19:22அப் 21:29பிலி 2:26-27அப் 20:15ரோம 16:23அப் 20:17 மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 2 தீமோ 4:9பிலி 4:221 கொரி 16:202 கொரி 13:132 யோவா 1:132 தீமோ 1:42 தீமோ 4:133 யோவா 1:14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென். பிலே 1:25கலா 6:18கொலோ 4:18ரோம 1:71 பேது 5:14எபே 6:24வெளி 22:211 கொரி 16:23