அப்போஸ்தலருடைய நடபடிகள் 11

Acts 11
அத்தியாயம் 11

பேதுரு தன்னுடைய காரியத்தை விளக்குதல்

யூதரல்லாதவர்களும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள். சங் 22:27மல்கி 1:11ரோம 15:7-12ஏசா 32:15அப் 14:27அப் 15:3கலா 1:17-22ஏசா 49:6 பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: அப் 10:45அப் 10:9அப் 15:1அப் 21:20-23கலா 2:12-14அப் 15:5 விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள். அப் 10:28கலா 2:12லூக் 15:21 கொரி 5:112 யோவா 1:10அப் 10:23அப் 10:48 அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாக அவர்களுக்கு விளக்கிச் சொல்லத்தொடங்கி: லூக் 1:3அப் 14:27யோசு 22:21-31நீதி 15:1 நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அது என்னவென்றால், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. அப் 10:9-32ஆமோ 8:2அப் 11:5-14அப் 22:17அப் 9:10ஆமோ 7:4-7எசேக் 2:9எரே 1:11-14 அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன். லூக் 4:20அப் 3:4 அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதுவும் எப்போதும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். ரோம 14:141 கொரி 7:14ஓசி 9:3எஸ்றா 9:11-12லேவி 10:10லேவி 11:47மாற் 7:2 இரண்டாவதுமுறையும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்கவேண்டாம் என்று சொல்லியது. அப் 15:9எபி 9:13-141 தீமோ 4:5அப் 10:15அப் 10:28அப் 10:34-35 இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. 2 கொரி 12:8யோவா 13:38யோவா 21:17எண் 24:10 உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்குமுன்னே வந்துநின்றார்கள். அப் 10:17-18அப் 9:10-12யாத் 4:14யாத் 4:27 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரர்களாகிய இந்த ஆறுபேரும் என்னோடு வந்தார்கள்; அந்த மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தோம். அப் 8:29ரோம 3:222 தெச 2:2அப் 10:23அப் 10:45அப் 15:9அப் 16:6-7யோவா 16:13 அவனோ தன் வீட்டில் ஒரு தேவதூதன் நிற்கிறதைப் பார்த்ததாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை அழைத்துவரும்படி மனிதர்களை அந்த இடத்திற்கு அனுப்பு; அப் 10:30-32அப் 10:22அப் 10:3-6அப் 12:11அப் 9:43எபி 1:14 நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான். அப் 10:22அப் 16:15அப் 16:31-341 யோவா 5:9-13அப் 10:2அப் 10:32-33அப் 10:6அப் 2:39 நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆரம்பத்திலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். அப் 19:6அப் 10:34-46அப் 2:2-12அப் 4:31 யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைத்துப்பார்த்தேன். அப் 1:5மாற் 1:8நீதி 1:23லூக் 3:16மத் 3:111 கொரி 12:13யோவா 14:26அப் 19:2-4 எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை கொடுத்ததுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே கொடுத்திருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார்? என்றான். அப் 10:47ரோம 9:20-26அப் 15:8-9தானி 4:35யோபு 33:13ரோம 11:34-36ரோம 9:15-16அப் 10:45 இவைகளை அவர்கள் கேட்டபொழுது உட்கார்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் யூதரல்லாதவர்களுக்கும் கொடுத்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். ரோம 10:12-132 கொரி 7:10எசேக் 36:262 தீமோ 2:25-26அப் 20:21அப் 5:31யாக் 1:16-17எபே 3:5-8

அந்தியோகியா சபை

ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்குமட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். அப் 15:22அப் 15:3அப் 15:35அப் 21:2அப் 4:36அப் 11:26-27அப் 13:1அப் 13:4 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கர்களுடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள். அப் 13:1மத் 27:321 கொரி 1:23-24அப் 2:10அப் 6:9எபே 3:81 கொரி 2:2அப் 17:18 கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள். அப் 2:47லூக் 1:66அப் 5:141 கொரி 3:6-71 தெச 1:5அப் 6:7அப் 9:35ஏசா 59:1 எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள். அப் 9:271 தெச 3:6அப் 11:1அப் 13:1-3அப் 15:2அப் 15:22அப் 15:35-39அப் 4:36-37 அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாக நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான். 1 கொரி 15:58அப் 14:221 யோவா 2:28அப் 13:432 தீமோ 3:10அப் 20:24உபா 30:20யோசு 23:8 அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள். அப் 11:21அப் 5:14சங் 112:5அப் 6:5அப் 9:312 சாமு 18:27அப் 6:3அப் 6:8 பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவிற்குப் புறப்பட்டுப்போய், அவனைப் பார்த்து, அந்தியோகியாவிற்கு அழைத்துக்கொண்டுவந்தான். அப் 9:11அப் 9:27அப் 9:30அப் 21:39 அவர்கள் ஒரு வருடம் சபைமக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டானது. 1 பேது 4:16அப் 26:281 பேது 4:141 கொரி 12:121 கொரி 14:231 கொரி 4:171 யோவா 2:27அப் 14:27 அந்த நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவிற்கு வந்தார்கள். அப் 13:11 கொரி 12:28எபே 4:11அப் 15:32அப் 2:17மத் 23:341 கொரி 14:32அப் 21:4 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு பேரரசனுடைய நாட்களிலே நடந்தது. அப் 21:10அப் 18:21 இராஜா 17:1-16லூக் 2:1லூக் 3:12இராஜா 8:1-2ஆதி 41:30-31ஆதி 41:38 அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். 2 கொரி 8:12-141 கொரி 16:1-22 கொரி 8:2-4கலா 2:101 கொரி 13:52 கொரி 9:1-2எபி 13:5-6ரோம 15:25-27 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள். அப் 12:25அப் 14:231 தீமோ 5:17அப் 15:4அப் 15:6அப் 16:4அப் 20:17யாக் 5:14