மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும், கலா 1:11-121 கொரி 1:1அப் 9:15-16வெளி 1:5ரோம 1:12 கொரி 1:1எபே 3:8அப் 22:14-21 என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: பிலி 4:211 கொரி 16:1அப் 16:5-6அப் 18:23பிலி 2:22அப் 9:31அப் 15:41 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக; 2 யோவா 1:32 கொரி 13:14ரோம 1:7-151 கொரி 1:32 தெச 1:2பிலி 1:21 தெச 1:12 கொரி 1:2 அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; மத் 20:28ரோம 4:25கலா 2:201 யோவா 2:15-171 யோவா 5:19-201 பேது 2:242 கொரி 4:4தீத் 2:14 அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். ரோம 11:36யூதா 1:25எபி 13:21சங் 72:191 நாளாக 29:131 பேது 5:111 தீமோ 1:172 பேது 3:18
வேறொரு நற்செய்தி இல்லை
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; 2 கொரி 11:4கலா 5:7-8ஏசா 29:13சங் 106:13கலா 3:1-51 தீமோ 1:3கலா 4:9-15எரே 2:12-13 வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள். அப் 15:24ரோம 16:17-18கலா 5:102 கொரி 11:13அப் 15:1-51 யோவா 4:12 கொரி 2:172 யோவா 1:10 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். 2 கொரி 11:13-14கலா 1:9வெளி 22:18-191 கொரி 16:22ரோம 9:3மத் 25:411 கொரி 12:31 தீமோ 1:19-20 முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். ரோம 16:17உபா 4:2நீதி 30:6வெளி 22:18-19உபா 12:322 கொரி 1:172 கொரி 13:1-2பிலி 3:1 இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே. 1 தெச 2:4அப் 5:29எபே 6:6யாக் 4:4மத் 22:16கொலோ 3:222 கொரி 5:9-11ரோம 2:29
பவுலின் நற்செய்தி தேவனுடையது
மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். கலா 1:11 கொரி 2:9-10எபே 3:3-81 கொரி 11:231 கொரி 15:1-3ரோம 2:16 நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 1 கொரி 2:10கலா 1:16கலா 1:12 கொரி 12:11 கொரி 11:23 நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; 1 கொரி 15:9அப் 22:3-5அப் 8:3அப் 26:4-51 தீமோ 1:13அப் 26:9-11அப் 9:21அப் 9:26 என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். கொலோ 2:8அப் 26:5அப் 22:3பிலி 3:4-6மத் 15:61 பேது 1:8அப் 26:9எரே 9:14 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், எரே 1:5ஏசா 49:5ஏசா 49:12 தீமோ 1:9எபே 1:51 கொரி 1:92 தெச 2:13-14ரோம 1:1 தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்; மத் 16:17எபே 3:5-10எபே 1:17-181 கொரி 2:9-132 கொரி 4:6அப் 22:21அப் 26:17-20அப் 9:15 எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். அப் 9:20-252 கொரி 11:32-33கலா 1:18 மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அப் 9:22-23அப் 22:17-18அப் 9:26-29 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை. மத் 13:55மத் 12:46மாற் 6:31 கொரி 9:5மத் 10:3அப் 12:17யாக் 1:1யூதா 1:1 நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன். ரோம 9:12 கொரி 11:312 கொரி 11:10-11 பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன். அப் 15:41அப் 6:9அப் 9:30அப் 11:25-26அப் 13:1அப் 15:23அப் 18:18அப் 21:3 மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன். 1 தெச 2:14ரோம 16:71 கொரி 1:301 தெச 1:12 தெச 1:1அப் 9:31பிலி 1:1 முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு, 1 கொரி 15:8-101 தீமோ 1:13-16அப் 9:13அப் 9:20அப் 9:26அப் 6:7 எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள். அப் 11:18லூக் 15:10லூக் 15:32லூக் 2:14மத் 9:82 தெச 1:102 தெச 1:12கொலோ 1:3-4