எபேசு பட்டணத்தில் பவுல்
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு: 1 கொரி 16:12அப் 18:23-281 கொரி 1:12அப் 18:1அப் 18:19-211 கொரி 3:4-7 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 1 கொரி 6:19அப் 11:15-17கலா 3:5யோவா 7:391 சாமு 3:7அப் 19:51 கொரி 12:1-11அப் 10:44 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப் 18:251 கொரி 12:13அப் 8:16லூக் 3:1-38மத் 28:19மத் 3:1-17 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அப் 1:5அப் 11:16யோவா 1:29-34லூக் 3:16-18அப் 13:23-25யோவா 1:27யோவா 1:7யோவா 3:28-36 அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அப் 8:12அப் 8:161 கொரி 10:2அப் 2:38ரோம 6:3-41 கொரி 1:13-15அப் 10:48 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அப் 2:4அப் 6:6மாற் 16:171 தீமோ 5:221 கொரி 14:1-252 தீமோ 1:6அப் 9:171 கொரி 12:8-11 அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள். பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாகப் பிரசங்கித்து, மூன்று மாதங்கள்வரை தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்து கலந்துரையாடி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். அப் 1:3அப் 28:23அப் 9:20-22யூதா 1:3அப் 13:14அப் 13:46அப் 14:1அப் 17:1-3 சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை இகழ்ந்து பேசியபோது, அவன் அவர்களைவிட்டு விலகி, சீடர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தான். அப் 19:23அப் 18:6-8அப் 9:22 பேது 2:12அப் 14:41 தீமோ 6:52 பேது 2:2அப் 13:45-46 இரண்டு வருடகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதர்களும் கிரேக்கர்களுமாகிய எல்லோரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். அப் 20:312 தீமோ 1:151 கொரி 1:22-24அப் 16:6கொலோ 3:11கலா 3:28ரோம 1:16ரோம 10:12 பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்துகாண்பித்தார். அப் 5:12மாற் 16:17-20ரோம 15:18-19எபி 2:4அப் 16:18அப் 8:13கலா 3:5அப் 15:12 அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. அப் 5:152இராஜா 13:20-21மாற் 16:172இராஜா 4:29-31 அப்பொழுது நாடோடிகளாகத் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதர்களில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். மத் 12:27மாற் 9:38லூக் 11:19அப் 8:18-19லூக் 9:49மாற் 5:71 இராஜா 22:16மத் 26:63 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர்கள் ஏழுபேர் இப்படிச்செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, அப் 16:17-18லூக் 4:33-35மாற் 1:34மாற் 5:9-13மாற் 1:24லூக் 8:28-32மத் 8:29-31ஆதி 3:1-5 அசுத்தஆவியையுடைய மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, பலவந்தம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். லூக் 8:29மாற் 5:3-4லூக் 8:35மாற் 5:15 இது எபேசுவிலே குடியிருந்த யூதர்கள் கிரேக்கர்கள் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லோரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. 2 தெச 1:122 தெச 3:1அப் 13:12அப் 5:11அப் 5:5பிலி 1:20பிலி 2:9-111 சாமு 6:20 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்களுடைய பொல்லாத வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். ரோம 10:10மத் 3:6சங் 32:51 யோவா 1:9எசேக் 16:63எசேக் 36:31எரே 3:13யோபு 33:27-28 மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். அப் 13:8உபா 7:25-26யாத் 32:20ஆதி 35:4ஏசா 2:20-21அப் 13:6அப் 8:9-11தானி 2:2 இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது. அப் 12:24அப் 6:7ஏசா 55:112 தெச 3:1 இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றி நடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் தீர்மானம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டும் என்று சொல்லி, அப் 20:22அப் 20:16அப் 23:11அப் 18:21கலா 2:1ரோம 1:131 கொரி 16:51 தெச 1:7 தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவிற்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலநாட்கள் ஆசியாவிலே தங்கினான். 2 தீமோ 4:20ரோம 16:23அப் 13:5அப் 16:1அப் 16:3அப் 16:9-10அப் 18:5அப் 19:10
எபேசுவிலே ஏற்பட்டக் கலகம்
அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டானது. அப் 19:9அப் 24:222 கொரி 1:8-10அப் 24:14அப் 9:22 கொரி 6:9அப் 18:26அப் 22:4 எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். 1 தீமோ 6:9-10அப் 16:16அப் 16:19அப் 19:27-28அப் 19:34-35ஏசா 56:11-12 இவர்களையும் இப்படிப்பட்டத் தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மக்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். அப் 16:19ஓசி 12:7-82 பேது 2:3ஓசி 4:8வெளி 18:11-19வெளி 18:3 இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலே மாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக மக்களுக்குப் போதித்து, அவர்களைத் தன் பக்கமாகச் சேர்த்துக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். 1 கொரி 8:4அப் 17:29ஏசா 44:10-20அப் 14:15அப் 19:10உபா 4:28வெளி 9:201 கொரி 10:19-20 இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் சம்பவித்திருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் நினைவில்லாமல் போகிறதற்கும், ஆசியா முழுமையும் உலகமுழுவதும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாக இருக்கிறது என்றான். செப்ப 2:111 தீமோ 6:51 யோவா 5:19அப் 19:21மத் 23:13வெளி 13:3வெளி 13:8 அவர்கள் இதைக்கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். வெளி 13:4வெளி 17:131 இராஜா 18:26-291 சாமு 5:3-5அப் 16:19-24அப் 18:19அப் 19:34-35அப் 21:28-31 பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாக வந்த மக்கெதோனியர்களாகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு மண்டபத்திற்கு பாய்ந்தோடினார்கள். அப் 20:4அப் 27:2கொலோ 4:10பிலே 1:241 கொரி 1:141 கொரி 4:9அப் 19:22அப் 21:30 பவுல் கூட்டத்திற்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீடர்கள் அவனைப் போகவிடவில்லை. அப் 21:392 சாமு 18:2-32 சாமு 21:17அப் 14:14-18அப் 17:22-31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்கு நண்பர்களாக இருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். அப் 19:10அப் 16:6அப் 21:12நீதி 16:7 கூட்டத்தில் குழப்பமுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. அப் 21:34அப் 19:29அப் 19:40லூக் 7:24-26மத் 11:7-9 அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னே நிற்கத் தள்ளும்போது, கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையால் சைகை காட்டி, மக்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான். அப் 12:171 தீமோ 1:202 தீமோ 4:14அப் 13:16அப் 21:40அப் 24:10அப் 26:1-2லூக் 1:22 அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியர்களுடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரம்வரை எல்லோரும் ஏகமாகச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். அப் 19:28அப் 16:20மத் 6:7வெளி 13:41 இராஜா 18:26அப் 19:26ரோம 2:22 பட்டணத்து அவைத்தலைவன் மக்களை அமைதிப்படுத்தி: எபேசியர்களே, இந்த பட்டணம் மகா தேவியாகிய தியானாளின் கோவிலும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கிறதென்று அறியாதவன் உண்டோ? 2 தெச 2:10-111 தீமோ 4:2அப் 14:12-13எபே 2:12அப் 18:19அப் 19:26 இதை எவரும் மறுக்கமுடியாத காரியமாகையால், நீங்கள் பதற்றங்கொண்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கவேண்டும். நீதி 14:29அப் 5:35-39நீதி 25:8 இந்த மனிதர்களை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவில் கொள்ளைக்காரர்களும் அல்ல, உங்களுடைய தேவியை நிந்தித்துப் பேசுகிறவர்களும் அல்ல. 2 கொரி 6:3ரோம 2:221 கொரி 10:32அப் 25:8 தெமேத்திரியுவிற்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, ஆளுனர்கள் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். அப் 13:71 கொரி 6:1அப் 18:14உபா 17:8 நீங்கள் வேறு எந்தவொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டுமானால், அதை சட்டப்படிக் கூடுகின்ற சபையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு எதுவும் இல்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாக இருப்போமே என்று சொல்லி, 1 இராஜா 1:41அப் 17:5-8அப் 20:1அப் 21:31அப் 21:38மத் 26:5 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான். 2 கொரி 1:8-10பிரச 9:17நீதி 15:1-2சங் 65:7