யாத்திராகமம் 33

Exodus 33
அத்தியாயம் 33

சீனாய் மலையை விட்டு புறப்பட கட்டளை.

யெகோவா மோசேயை நோக்கி: “நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த செழிப்பான தேசத்திற்குப் போங்கள். ஆதி 12:7யாத் 32:13யாத் 32:7ஆதி 22:16-18ஆதி 26:3யாத் 17:3யாத் 32:1யாத் 32:34 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன். யோசு 24:11யாத் 32:34யாத் 23:20யாத் 23:27-31யாத் 3:8உபா 7:22யாத் 3:17யாத் 34:11 ஆனாலும், வழியிலே நான் உங்களை அழிக்காதபடி, நான் உங்களிடம் வரமாட்டேன், நீங்கள் பிடிவாதமுள்ள 1 மக்கள்” என்றார். யாத் 32:9-10அப் 7:51உபா 9:6-13யாத் 3:8யாத் 33:15-17எரே 11:5ஆமோ 3:13-14எசேக் 33:13-16 துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். எண் 14:39எசேக் 24:17எசேக் 24:23எசேக் 26:16லேவி 10:6எண் 14:11 இராஜா 21:272இராஜா 19:1 ஏனென்றால், “நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்” என்று யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தார். உபா 8:2யாத் 33:3-4எண் 16:21எண் 16:45-46சங் 139:23ஆதி 22:12ஏசா 22:12யோபு 34:20 ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள். யாத் 33:4யாத் 32:3எரே 2:19

ஆசரிப்புக்கூடாரம்

மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள். ஏசா 55:6-7நீதி 15:29யாத் 29:42-43ஏசா 59:22 சாமு 21:1உபா 4:29மத் 7:7-8சங் 27:8 மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எண் 16:27 மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார். சங் 99:7யாத் 31:18எசேக் 3:22ஆதி 18:33யாத் 13:21-22யாத் 25:22யாத் 33:11யாத் 34:3 மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். யாத் 4:311 இராஜா 8:141 இராஜா 8:22லூக் 18:13 ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான். எண் 12:8உபா 34:10யாத் 24:13யாத் 33:9உபா 5:4ஆதி 32:30யோவா 15:14-15யாக் 2:23

மோசேயின் ஜெபமும் யெகோவாவுடைய மகிமையும்

மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; யாத் 33:17யோவா 10:14-152 தீமோ 2:19யாத் 32:34எரே 1:5ஆதி 18:19ஏசா 43:1யாத் 3:10 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். சங் 119:33சங் 25:4சங் 27:11சங் 86:11கொலோ 1:10உபா 9:26எபே 1:17ஏசா 30:21 அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். மத் 11:28யோசு 1:5யோசு 21:44ஏசா 63:9எபி 4:8-9யோசு 22:4சங் 95:11மத் 28:20 அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். யாத் 34:9சங் 4:6யாத் 33:3 எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான். உபா 4:7எண் 14:141 இராஜா 8:53மத் 1:23யாத் 34:102 கொரி 6:172 சாமு 7:23யாத் 19:5-6

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். ஏசா 65:241 யோவா 5:14-15யாத் 33:12ஆதி 19:21ஆதி 6:8யாக் 5:16யோவா 16:23ஆதி 18:32 அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். வெளி 21:23தீத் 2:13யாத் 33:201 தீமோ 6:162 கொரி 4:6யோவா 1:182 கொரி 3:18சங் 4:6 அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் 2 நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, ரோம 9:15-18எபே 1:6-8எரே 31:14எரே 31:12ஏசா 7:14யாத் 34:5-7யாத் 3:13-15ஏசா 12:4 நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். ஆதி 32:30யோவா 1:181 தீமோ 6:16ஏசா 6:5நியாயாதி 13:22நியாயாதி 6:22உபா 5:24யாத் 24:10 பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. உபா 5:31சகரி 3:7ஏசா 56:5யோசு 20:4லூக் 15:1 என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; சங் 91:1ஏசா 2:21சங் 91:41 கொரி 10:4சங் 18:2ஏசா 32:22 கொரி 5:19உன்னத 2:3 பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார். யாத் 33:20யோவா 1:181 கொரி 13:121 தீமோ 6:16யோபு 11:7யோபு 26:14