எசேக்கியேல் 27

Ezekiel 27
அத்தியாயம் 27

தீருவுக்கான புலம்பல்

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின் பெயரிலே புலம்பி, எசேக் 19:1எசேக் 28:12எரே 9:10எரே 9:17-20ஆமோ 5:1ஆமோ 5:16எசேக் 26:17எசேக் 27:32 கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய். எசேக் 27:4எசேக் 26:17எசேக் 27:10-36எசேக் 28:2-3ஏசா 23:11ஏசா 23:2-3ஏசா 23:8-9சங் 50:2 கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள். எசேக் 26:5 சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். உபா 3:9ஏசா 14:8உன்னத 4:81 இராஜா 5:11 இராஜா 5:6சங் 104:16சங் 29:5சங் 92:12 பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள். ஆதி 10:4ஏசா 2:13சகரி 11:2எரே 2:10ஏசா 23:12எரே 22:20எண் 21:33எண் 24:24 எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது. யாத் 25:4எரே 10:9ஆதி 10:4ஏசா 19:91 நாளாக 1:71 இராஜா 10:28நீதி 7:16 சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் துடுப்பு போடுகிறவர்களாக இருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன்னுடைய அறிஞர்கள் உன்னுடைய மாலுமிகளாக இருந்தார்கள். ஆதி 10:181 இராஜா 9:27எசேக் 27:111 இராஜா 5:62 நாளாக 2:13-14எசேக் 27:28ஆதி 10:15ஆதி 49:13 கேபாரின் முதியோரும் அதனுடைய அறிஞர்களும் உன்னில் பழுதுபார்க்கும் வேலை செய்கிறவர்களாக இருந்தார்கள்; கடலின் எல்லா கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரர்களும் உன்னுடன் தொழில்துறை வியாபாரம் செய்கிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள். 1 இராஜா 5:18யோசு 13:5சங் 83:7 பெர்சியர்களும், லூதியர்களும், பூத்தியர்களும் உன்னுடைய படையில் போர்வீரர்களாக இருந்து உனக்குள் கேடகமும் தலைகவசமும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள். எசேக் 30:5எசேக் 38:5ஏசா 66:19எரே 46:9உன்னத 4:41 நாளாக 1:111 நாளாக 1:171 நாளாக 1:8 அர்வாத்திரர்கள் உன்னுடைய படைவீரர்களும் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர்கள் உன்னுடைய மதில்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும் தங்களுடைய கேடயங்களைத் தூக்கிவைத்து, உன்னுடைய வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள். எசேக் 27:3-4 எல்லாவித அதிகமான பொருள்களினாலும் தர்ஷீஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன்னுடைய சந்தைகளில் விற்க வந்தார்கள். 1 இராஜா 10:22எசேக் 38:13ஆதி 10:4ஏசா 23:101 இராஜா 22:482 நாளாக 20:36-37எசேக் 27:16எசேக் 27:18 யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். ஆதி 10:2ஏசா 66:191 நாளாக 1:5எசேக் 39:1வெளி 18:13எசேக் 32:26யோவே 3:31 நாளாக 1:7 தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள். எசேக் 38:6ஆதி 10:31 நாளாக 1:6 தேதானியர்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்தார்கள்; அநேகம் தீவுகளின் மொத்தவியாபாரம் உன்னுடைய கையில் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள். 1 இராஜா 10:22ஆதி 10:7வெளி 18:12எசேக் 27:20எரே 25:231 நாளாக 1:321 நாளாக 1:9எசேக் 25:13 சீரியர்கள் உன்னுடைய வேலைப்பாடான பற்பல பொருள்களுக்காக உன்னுடன் வியாபாரம்செய்து, மரகதங்களையும், சிவப்புகளையும், சித்திரத்தையலாடைகளையும், விலைஉயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும் உன்னுடைய சந்தைகளில் விற்கவந்தார்கள். நியாயாதி 10:6எசேக் 28:132 சாமு 10:62 சாமு 15:82 சாமு 8:5ஆதி 10:22ஆதி 28:5ஏசா 7:1-8 யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். நியாயாதி 11:331 இராஜா 5:92 நாளாக 2:10அப் 12:20உபா 32:14உபா 8:8எஸ்றா 3:7ஆதி 43:11 தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள். ஏசா 7:81 இராஜா 11:24-25அப் 9:2எசேக் 47:16-18ஆதி 14:15ஆதி 15:2 தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள். யாத் 30:23-24நியாயாதி 18:29சங் 45:8உன்னத 4:13-14 இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். ஆதி 25:3எசேக் 27:15 அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். ஏசா 60:7ஆதி 25:131 நாளாக 1:291 இராஜா 10:152 நாளாக 17:11அப் 2:11கலா 4:25ஏசா 21:16 சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள். ஆதி 10:7ஏசா 60:61 நாளாக 1:91 இராஜா 10:1-132 நாளாக 9:1-12எசேக் 38:13ஆதி 43:11சங் 72:10 ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள். 2இராஜா 19:12ஏசா 37:12ஆமோ 1:5ஆதி 10:22அப் 7:4ஆமோ 6:2ஆதி 10:10ஆதி 11:31-32 இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம்செய்தார்கள். 2இராஜா 2:8 உன்னுடைய தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ கடலின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய் 1. ஏசா 2:16ஏசா 23:14சங் 48:71 இராஜா 10:22ஏசா 60:9 துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது. சங் 48:7அப் 27:14எசேக் 26:19எரே 18:17எசேக் 27:34ஏசா 33:23சங் 93:3-4வெளி 17:15 நீ நாசமடையும் நாளிலே உன்னுடைய செல்வத்தோடும், விற்பனைப் பொருட்களோடும், தொழில் துறையுடனும் உன்னுடைய கப்பலாட்களும், உன்னுடைய மாலுமிகளும், உன்னில் பழுதுபார்க்கிறவர்களும், உன்னுடைய வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா போர்வீரர்களும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுக்கடலிலே விழுவார்கள். நீதி 11:4எசேக் 26:12எசேக் 26:14எசேக் 26:21எசேக் 27:12எசேக் 27:18-19எசேக் 27:22எசேக் 27:24 உன்னுடைய மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும். எசேக் 26:10யாத் 15:14எசேக் 26:15-18எசேக் 27:35எசேக் 31:16நாகூ 2:3 தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்களுடைய கப்பல்களை விட்டு இறங்கி, கரையிலே நின்று, எசேக் 26:16எசேக் 32:10வெளி 18:17-24 உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு, எரே 6:262 சாமு 1:2புலம் 2:101 சாமு 4:12எசேக் 26:17ஏசா 23:1-6யோனா 3:6எஸ்த 4:1-4 உனக்காக மொட்டையடித்து சணலாடையை உடுத்திக்கொண்டு, உனக்காக மனம்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள். எசேக் 7:18ஏசா 22:12ஏசா 15:2ஏசா 16:9ஏசா 22:4ஆமோ 8:10உபா 14:1எரே 16:6 அவர்கள் உனக்காகத் தங்களுடைய துக்கத்திலே ஓலமிட்டு, உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் இணையான நகரம் உண்டோ? எசேக் 26:17எசேக் 27:2வெளி 18:18எசேக் 26:4-5எசேக் 27:26புலம் 1:12புலம் 2:13 உன்னுடைய வியாபாரபொருட்கள் கடலின் வழியாகக் கொண்டுவரப்படும்போது, அநேக மக்களைத் திருப்திபடுத்தினாய்; உன்னுடைய செல்வம் அதிகமானதினாலும், உன்னுடைய வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக மாற்றினாய். வெளி 18:19எசேக் 27:12-36எசேக் 27:3எசேக் 28:16எசேக் 28:4-5ஏசா 23:3-8வெளி 18:12-15வெளி 18:3 நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள். எசேக் 27:26-27சகரி 9:3-4எசேக் 26:12-15எசேக் 26:19-21 தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள். எசேக் 32:10ஏசா 23:6எசேக் 26:15-18எசேக் 28:17-19வெளி 18:9-10 எல்லா மக்களிலுமுள்ள வியாபாரிகள் உன்பேரில் பழி கூறுகிறார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார். எரே 18:16எசேக் 26:21எரே 19:8சங் 37:10சங் 37:36செப்ப 2:151 இராஜா 9:8எசேக் 26:14