கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், மீகா 4:1சகரி 8:3ஏசா 2:2-3சங் 96:4சங் 46:4சங் 145:3வெளி 21:2சங் 87:3
தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, சங் 50:2மத் 5:35புலம் 2:15எபி 12:22தானி 11:16எசேக் 20:6ஏசா 14:13தானி 8:9
அதுவே மகாராஜாவின் நகரம்.
அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். சகரி 2:4-5சங் 125:1சங் 46:7ஏசா 37:33-36ஏசா 4:5-6சங் 76:1-52 நாளாக 12:72 நாளாக 14:9-15
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். 2 சாமு 10:6-19வெளி 17:12-14வெளி 20:8-9ஏசா 10:8ஏசா 29:5-8ஏசா 7:1ஏசா 8:8-10சங் 83:2-8
அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். யாத் 14:252இராஜா 19:35-372இராஜா 7:6-7
அங்கே நடுக்கங்கொண்டு, ஓசி 13:13ஏசா 13:6-8தானி 5:6யாத் 15:15-16ஏசா 21:3எரே 30:6-7
பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். எரே 18:171 இராஜா 22:48எசேக் 27:25-261 இராஜா 10:22ஏசா 2:16
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; சங் 87:5மீகா 4:1ஏசா 2:2மத் 16:18சங் 44:1-2சங் 46:5சங் 48:1-2சங் 78:3-6
தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, சங் 26:3சங் 40:10சங் 77:10-142 நாளாக 20:5-13சங் 63:2-3லூக் 22:19-20சங் 104:34உன்னத 1:4
உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல மல்கி 1:11சங் 113:3உபா 28:58ஏசா 41:10யோசு 7:9சங் 138:2-4வெளி 19:11யாத் 3:13-15
உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது;
உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, சங் 97:8வெளி 18:20வெளி 15:4வெளி 16:5-7வெளி 19:1-3லூக் 23:28சகரி 9:92 நாளாக 20:26-27
யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள். ஏசா 33:18-20மத் 24:1-2நெகே 12:31-40
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, சங் 71:18சங் 122:7உபா 11:19யோவே 1:3சங் 78:4-6அப் 15:14-16ஆமோ 9:11ஏசா 58:12
அதின் சுவரை கவனித்து,
அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; ஏசா 58:11சங் 23:3-4சங் 73:24சங் 25:9யோவா 16:13சங் 73:26சங் 16:2சங் 31:14
மரணம்வரை நம்மை நடத்துவார்.