ஆபிரகாமின் மற்ற சந்ததி
1 நாளா 1:32-33
ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயர்கொண்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தான். 1 நாளாக 1:32-33ஆதி 23:1-2ஆதி 28:1 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றெடுத்தாள். 1 நாளாக 1:32-33யாத் 18:1-4யாத் 2:15-16ஆதி 36:35ஆதி 37:28ஆதி 37:36எரே 25:25யோபு 2:11 யக்க்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றெடுத்தான்; தேதானுடைய மகன்கள் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். எசேக் 25:131 இராஜா 10:1எசேக் 27:20எசேக் 27:6எரே 25:23எரே 49:8யோபு 6:192 சாமு 2:9 மீதியானுடைய மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் பிள்ளைகள். ஏசா 60:6 ஆபிரகாம் தனக்கு உண்டான அனைத்தையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். ஆதி 24:36கலா 3:29எபி 1:21 கொரி 3:21-23ஆதி 21:10-12யோவா 3:35மத் 11:27மத் 28:18 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் மகனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்த்தேசத்திற்கு அனுப்பிவிட்டான். ஆதி 21:14நியாயாதி 6:3அப் 14:17ஆதி 16:3ஆதி 25:1ஆதி 32:22ஆதி 35:22நியாயாதி 19:1-2 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் 175 வருடங்கள். ஆதி 12:4 அதற்குப்பின்பு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் இறந்து, தன் இனத்தாருடன் சேர்க்கப்பட்டான். ஆதி 35:28-29ஆதி 15:151 நாளாக 29:28ஆதி 49:33யோபு 5:26ஆதி 25:17ஆதி 47:8-9நியாயாதி 8:32 அவனுடைய மகன்களாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் மகனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா எனப்பட்ட குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள். ஆதி 50:13ஆதி 35:29ஆதி 21:9-10ஆதி 49:29-30ஆதி 23:9-20 அந்த நிலத்தை ஏத்தின் மகன்களின் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவனுடைய மனைவியாகிய சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஆதி 23:16ஆதி 49:31 ஆபிரகாம் இறந்தபின்பு தேவன் அவனுடைய மகனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் கிணற்றுக்குச் சமீபமாக ஈசாக்கு குடியிருந்தான். ஆதி 16:14ஆதி 22:17ஆதி 12:2ஆதி 17:19ஆதி 24:62ஆதி 50:24
இஸ்மவேலின் மகன்கள்
சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு: சங் 83:6ஆதி 17:20ஆதி 21:13ஆதி 16:10-15 பற்பல சந்ததிகளாகப் பிரிந்த இஸ்மவேலின் மகன்களுடைய பெயர்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், 1 நாளாக 1:29-31ஏசா 60:7ஏசா 42:11சங் 120:5உன்னத 1:5ஆதி 36:3ஏசா 21:16-17 மிஷ்மா, தூமா, மாசா, ஏசா 21:11ஏசா 21:16 ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே. 1 நாளாக 5:19யோபு 2:11 தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் மக்களுக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் மகன்கள் இவர்களே, இவர்களுடைய பெயர்களும் இவைகளே. ஆதி 17:20ஆதி 17:23 இஸ்மவேலின் வயது 137. பின்பு அவன் இறந்து, தன் இனத்தாரோடு சேர்க்கப்பட்டான். ஆதி 15:15ஆதி 25:7-8 அவர்கள் ஆவிலா துவங்கி எகிப்திற்கு நேராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். இது அவனுடைய சகோதரர்கள் எல்லோருக்கும் முன்பாக அவன் 1குடியேறின பூமி. ஆதி 16:12ஆதி 20:11 சாமு 15:72இராஜா 23:29ஆதி 10:29ஆதி 10:7ஆதி 13:10ஆதி 14:10
யாக்கோபும் ஏசாவும்
ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான். மத் 1:2லூக் 3:34அப் 7:81 நாளாக 1:32 ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்கிறபோது 40 வயதாயிருந்தான்; இவள் பதான் அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்கு மகளும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். ஆதி 24:29ஆதி 24:67ஆதி 22:23உபா 26:5ஆதி 31:24ஆதி 28:5-6ஆதி 31:18ஆதி 31:20 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு யெகோவாவை நோக்கி வேண்டுதல் செய்தான்; யெகோவா அவனுடைய வேண்டுதலைக் கேட்டருளினார்; அவனுடைய மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். 2 நாளாக 33:13எஸ்றா 8:23ஏசா 58:9லூக் 1:131 நாளாக 5:20ரோம 9:10-121 சாமு 1:27ஆதி 15:2-3 அவளது கர்ப்பத்தில் பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: “இப்படியிருந்தால் எனக்கு எப்படியாகுமோ” என்று சொல்லி, யெகோவாவிடத்தில் விசாரிக்கப் போனாள். 1 சாமு 9:91 சாமு 10:221 சாமு 28:61 சாமு 30:8எசேக் 20:31எசேக் 36:371 சாமு 22:15 அதற்குக் யெகோவா: ரோம 9:10-13ஆதி 27:40ஆதி 27:292 சாமு 8:14மல்கி 1:2-51 நாளாக 18:13எசேக் 25:12-14ஆதி 17:16
“இரண்டு இனத்தார்கள்
உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது;
இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்,
அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள்,
மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார்.
பிரசவநேரம் பூரணமானபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாகவும் உடல்முழுவதும் ரோமத்தாலான அங்கியைப் போர்த்தவன் போலவும் பிறந்தான்; அவனுக்கு ஏசா 2 என்று பெயரிட்டார்கள். ஆதி 27:11ஆதி 27:16ஆதி 27:23 பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான். ஆதி 27:36ஓசி 12:3ஆதி 38:28-30
ஏசா தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டான்
இந்தக் குழந்தைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும், காட்டில் வாழ்கிறவனாகவும் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான். ஆதி 21:20எபி 11:9ஆதி 10:9ஆதி 28:10-11ஆதி 6:9ஆதி 27:3-5ஆதி 27:40ஆதி 31:39-41 ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பற்றுதலாக இருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் அன்பாயிருந்தாள். ஆதி 27:19ஆதி 27:31ஆதி 27:4ஆதி 27:25ஆதி 27:9ஆதி 27:6-7 ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். ஏசா 40:30-31நீதி 13:251 சாமு 14:281 சாமு 14:31நியாயாதி 8:4-5 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, களைத்திருக்கிறேன்” என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டானது. 2இராஜா 8:20உபா 23:7யாத் 15:15ஆதி 36:1ஆதி 36:43ஆதி 36:9எண் 20:14-21 அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு” என்றான். அதற்கு ஏசா: “இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தப் பிறப்புரிமை எனக்கு எதற்கு” என்றான். யோபு 21:15யோபு 22:17யோபு 34:9மல்கி 3:14யாத் 22:9 அப்பொழுது யாக்கோபு: “இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் பிறப்புரிமையை அவனுக்கு விற்றுப்போட்டான். எபி 12:16ஆதி 27:36எபி 6:16ஆதி 24:3ஆதி 36:6-7மாற் 6:23ஆதி 14:22 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயிற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் பிறப்புரிமையை அலட்சியம் செய்தான். எபி 12:16-17பிலி 3:18-191 கொரி 15:32ஏசா 22:13மத் 26:15அப் 13:41லூக் 14:18-20மத் 22:5