பாபிலோனுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
கடல் வனாந்திரத்தைக்குறித்த செய்தி. சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்திரத்திலிருந்து அது வருகிறது. ஏசா 14:23ஏசா 13:1எரே 51:42சகரி 9:14ஏசா 13:20-22ஏசா 17:1தானி 11:40எசேக் 31:12 பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன். ஏசா 33:1எரே 49:34ஏசா 24:16சங் 60:3தானி 5:28வெளி 13:101 சாமு 24:13தானி 8:20 ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைச்சல்கொண்டு, கண்டதினால் கலங்கினேன். ஏசா 13:8ஏசா 26:17சங் 48:61 தெச 5:3ஏசா 16:11எரே 48:41மீகா 4:9-10தானி 5:5-6 என் இருதயம் திகைத்தது; பயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது; எனக்கு இன்பம் தந்த இரவு பயங்கரமானது. லூக் 21:34-361 சாமு 25:36-382 சாமு 13:28-29தானி 5:1தானி 5:5உபா 28:67எஸ்த 5:12எஸ்த 7:6-10 பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், காவலாளியை அமர்த்துங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள். எரே 51:11எரே 51:39எரே 51:57தானி 5:1-51 கொரி 15:32ஏசா 13:17-18ஏசா 13:2ஏசா 22:13-14 ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிப்பதற்காக காவலாளியை வை என்றார். எசேக் 33:2-7எசேக் 3:17ஆப 2:1-22இராஜா 9:17-20ஏசா 62:6எரே 51:12-13 அவன் ஒரு இரதத்தையும், ஜோடி ஜோடியாகக் குதிரைவீரனையும், ஜோடி ஜோடியாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாகக் கவனித்துக்கொண்டே இருந்து: ஏசா 21:9எபி 2:1ஏசா 37:24 ஆண்டவரே, நான் பகல்முழுவதும் என் காவலிலே நின்று, இரவுமுழுவதும் நான் என் காவலிடத்திலே தங்கியிருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். ஆப 2:1-21 பேது 5:8ஏசா 5:29ஏசா 56:10ஏசா 62:6எரே 25:38எரே 4:7எரே 49:19 இதோ, ஒரு ஜோடி குதிரை பூட்டப்பட்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனிதன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் தெய்வங்களுடைய சிலைகளையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று மறுமொழி சொல்கிறான். வெளி 18:2எரே 51:8வெளி 14:8எரே 51:44ஏசா 13:19ஏசா 14:4ஏசா 46:1-2எரே 50:2-3 என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன். எரே 51:33மீகா 4:132இராஜா 13:7எசேக் 3:17-19ஏசா 41:15-16மத் 3:12ஆப 3:121 இராஜா 22:14
ஏதோமுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
தூமாவுக்கு 1 செய்தி. சேயீரிலிருந்து என்னை நோக்கி: காவலாளியே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க; ஆதி 25:14ஒபதி 1:1-16ஆமோ 1:6யோவே 3:191 நாளாக 1:30உபா 2:5எசேக் 35:1-15ஆதி 32:3 அதற்கு காவலாளி: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதிருந்தால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்கிறான். அப் 17:30-32அப் 2:37-38அப் 17:19-20எசேக் 14:1-6எசேக் 18:30-32எசேக் 7:10எசேக் 7:12எசேக் 7:5-7
அரேபியாவிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்
அரேபியாவுக்குச் செய்தி. திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரேபியாவின் காடுகளில் இரவுதங்குவீர்கள். எரே 25:23-241 நாளாக 1:32எசேக் 27:15ஆதி 25:31 நாளாக 1:91 இராஜா 10:15எசேக் 27:20-21கலா 4:25 தேமா தேசத்தின் குடிமக்களே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள். ஆதி 25:15யோபு 6:19நீதி 25:21ரோம 12:201 நாளாக 1:301 பேது 4:9ஏசா 16:3-4நியாயாதி 8:4-8 அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின பட்டயத்திற்கும், நாணேற்றின வில்லுக்கும், போரின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள். யோபு 6:19-20ஏசா 13:14 ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான ஒரே வருடத்திலே கேதாருடைய 2 மகிமையெல்லாம் விட்டுப்போகும். ஏசா 16:14ஏசா 60:7சங் 120:5உன்னத 1:5எசேக் 27:21எரே 49:28ஆதி 25:13ஏசா 42:11 கேதார் மக்களாகிய பராக்கிரம வில்வீரரின் எண்ணிக்கையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதை உரைத்தார். எண் 23:19சகரி 1:6ஏசா 1:20மத் 24:35ஏசா 10:18-19ஏசா 17:4-5எரே 44:29சங் 107:39