தமஸ்குவிற்கு விரோதமான தேவவாக்கு
தமஸ்குவைக் குறித்த அறிவிப்பு. இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும். ஆமோ 1:3-5ஏசா 25:2சகரி 9:1அப் 9:2ஆதி 14:15ஏசா 7:8எரே 49:2எரே 49:23-27 ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தை வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும். எசேக் 25:5உபா 2:36எரே 7:33செப்ப 2:6மீகா 4:4எண் 32:34உபா 3:12எரே 48:19 பாதுகாப்பு எப்பிராயீமையும், அரசாட்சி தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் மக்களுடைய மகிமைக்கு சம்பவித்ததுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் சம்பவிக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஓசி 9:11ஏசா 7:16ஏசா 8:4ஏசா 7:8மீகா 1:4-92இராஜா 16:92இராஜா 17:6ஆமோ 2:6-9 அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோகும், அவனுடைய கொழுத்த உடல் மெலிந்துபோகும். ஏசா 10:16உபா 32:15-27எசேக் 34:20ஏசா 10:4ஏசா 24:13ஏசா 24:16ஏசா 9:21ஏசா 9:8 ஒருவன் ஓங்கின பயிரை அறுவடைசெய்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும். மத் 13:30எரே 51:33யோவே 3:132 சாமு 5:18வெளி 14:15-202 சாமு 5:22மத் 13:39-42ஓசி 6:11 ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டு மூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நான்கோ அல்லது ஐந்தோ காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார். ஏசா 24:13உபா 4:27நியாயாதி 8:2ஒபதி 1:5ரோம 11:4-6ரோம 9:271 இராஜா 19:18எசேக் 36:8-15 அக்காலத்திலே மனிதன் தன் கைகளின் செயல்களாகிய பீடங்களை பார்க்காமலும், தன் விரல்கள் உண்டாக்கின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் பார்க்காமலும், மீகா 7:7ஓசி 6:1ஓசி 3:52 நாளாக 30:10-112 நாளாக 30:18-202 நாளாக 31:12 நாளாக 35:17-18ஓசி 14:1-3 தன்னை உண்டாக்கினவரையே பாரப்பான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே பார்த்துக் கொண்டிருக்கும். ஏசா 30:22ஏசா 27:9ஏசா 2:8மீகா 5:13-142 நாளாக 14:52 நாளாக 34:42 நாளாக 34:6-7யாத் 34:13 அக்காலத்திலே அவர்களுடைய பாதுகாப்பான பட்டணங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு மீதியாக வைக்கப்பட்ட தழையைப்போலவும், நுனிக்கொம்பைப்போலவுமாகி, பாழாய்க்கிடக்கும். ஆமோ 3:11-15ஏசா 27:10ஆமோ 7:9ஓசி 10:14ஓசி 13:15-16ஏசா 17:4-5ஏசா 24:1-12ஏசா 28:1-4 உன் பெலமாகிய கன்மலையை நீ நினைக்காமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆகவே நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், உபா 32:18ஏசா 26:4எரே 2:32சங் 106:21உபா 32:4ஓசி 13:6-7உபா 32:31ஓசி 8:14 பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் செய்தாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும். ஓசி 8:7யோபு 4:8கலா 6:7-8ஓசி 10:12-15ஓசி 9:1-4ஓசி 9:16ஏசா 18:5-6ஏசா 65:13-14 ஐயோ, கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக மக்களின் கூட்டம், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற மக்கள் கூட்டங்களின் சத்தமும் உண்டாயிருக்கிறது. எரே 6:23லூக் 21:25சங் 18:4எசேக் 43:2வெளி 17:1வெளி 17:15ஏசா 28:17ஏசா 5:26-30 மக்கள் கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாக ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறந்துபோகிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள். சங் 9:5ஏசா 41:15-16யோபு 21:18சங் 1:4ஏசா 29:5தானி 2:35ஓசி 13:3ஏசா 10:15-16 இதோ, மாலை நேரத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்திற்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையிடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும். 2இராஜா 19:35நீதி 22:232இராஜா 19:3எசேக் 39:10ஆப 2:16-17ஏசா 10:28-32ஏசா 33:1நியாயாதி 5:31