இம்மானுவேலின் அடையாளம்
உசியாவின் மகனாகிய யோதாமின் மகன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் போரிடவந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கமுடியாமல் போனது. 2இராஜா 15:372இராஜா 16:1ஏசா 1:1ஏசா 7:4-9ஏசா 8:6ஏசா 8:9-10சங் 83:3-52 நாளாக 28:1-6 சீரியர்கள் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் மக்களின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல் அசைந்தது. ஏசா 7:13ஏசா 8:12ஏசா 9:9நீதி 28:11 இராஜா 11:321 இராஜா 12:161 இராஜா 13:22 நாளாக 25:10 அப்பொழுது யெகோவா ஏசாயாவை நோக்கி: நீயும் உனது மகன் சேயார் யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேல்குளத்து மதகின் கடைசிவரை ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய், 2இராஜா 18:17ஏசா 36:2ரோம 9:27ஏசா 6:132இராஜா 20:20யாத் 7:15ஏசா 10:21ஏசா 55:7 நீ அவனை நோக்கி: சீரியர்கள் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாக தீய ஆலோசனைசெய்து, ஏசா 35:4உபா 20:3புலம் 3:26ஏசா 30:15மத் 24:6யாத் 14:13-14சகரி 3:22 நாளாக 20:17 நாம் யூதாவுக்கு விரோதமாகப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் மகனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னார்கள்; சங் 83:3-4சகரி 1:15நாகூ 1:11சங் 2:2 அதனால் நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும்கொண்ட கடுங்கோபத்தினால் உன் இருதயம் துவளவேண்டாம். யெகோவாவாகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை; ஏசா 8:10புலம் 3:37ஏசா 46:10-11சங் 33:11நீதி 21:30அப் 4:25-28ஏசா 37:29சங் 2:4-6 சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருடங்களிலே எப்பிராயீம் ஒரு மக்கள்கூட்டமாக இராதபடிக்கு நொறுங்குண்டுபோகும். ஏசா 17:1-3ஆதி 14:152இராஜா 17:5-232 சாமு 8:6எஸ்றா 4:2ஓசி 1:6-10ஏசா 8:4 எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசிக்காவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார். எபி 11:6ரோம 11:202 நாளாக 20:201 யோவா 5:10அப் 27:25ஏசா 30:12-14ஏசா 8:6-81 இராஜா 16:24-29 பின்னும் யெகோவா ஆகாசை நோக்கி: ஏசா 8:5ஓசி 13:2ஏசா 1:13ஏசா 1:5ஏசா 10:20 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; ஏசா 37:30ஏசா 38:7-82இராஜா 19:292இராஜா 20:8-11ஏசா 38:22நியாயாதி 6:36-40எரே 19:10மத் 12:38-40 ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் யெகோவாவைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான். 1 கொரி 10:92 நாளாக 28:222இராஜா 16:15அப் 5:9உபா 6:16எசேக் 33:31மல்கி 3:15 அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனிதர்களை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? ஏசா 43:24மல்கி 2:17எபி 3:10எரே 6:11ஆமோ 3:13எசேக் 16:47எசேக் 34:18ஏசா 63:10 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள். மத் 1:23ஏசா 9:6லூக் 1:31யோவா 1:1-2யோவா 1:14லூக் 1:351 தீமோ 3:16ஏசா 8:8 தீமையை வெறுக்கவும் நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறியும் வயதுவரை அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். ஏசா 7:22ஆமோ 5:15மத் 3:4பிலி 1:9-10லூக் 1:35சங் 51:5ரோம 12:9லூக் 2:40 அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். ஏசா 8:4உபா 1:392இராஜா 15:29-302இராஜா 16:9ஆமோ 1:3-5ஓசி 5:9ஏசா 17:1-3ஏசா 9:11 எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் யெகோவா உன்மேலும், உன் மக்களின்மேலும், உன் தகப்பனுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரச்செய்வார். ஏசா 10:5-6ஏசா 8:7-81 இராஜா 12:16-192 நாளாக 10:16-192 நாளாக 28:19-212 நாளாக 32:1-332 நாளாக 33:112 நாளாக 36:6-20 அந்நாட்களிலே, யெகோவா எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் சைகைகாட்டி அழைப்பார். ஏசா 5:26உபா 1:44உபா 7:20ஏசா 31:1யோசு 24:122இராஜா 23:33-34யாத் 8:21யாத் 8:24 அவைகள் வந்து ஏகமாக வனாந்திரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். ஏசா 2:19எரே 16:162 நாளாக 33:11ஏசா 2:21மீகா 7:17 அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் சிரைத்துப்போடுவிப்பார். ஏசா 8:7எசேக் 29:18எசேக் 5:1-4ஏசா 10:152 நாளாக 28:20-212இராஜா 16:7-82இராஜா 18:13-16எசேக் 29:20 அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், ஏசா 5:17எரே 39:10ஏசா 17:2ஏசா 37:30ஏசா 7:25 அவைகள் பூரணமாகப் பால்கறக்கிறதினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். ஏசா 7:152 சாமு 17:29மத் 3:4 அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு மதிப்புள்ள ஆயிரம் திராட்சைச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். ஏசா 5:6மத் 21:33உன்னத 8:11-12எபி 6:8ஏசா 32:12-14எரே 4:26 தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். ஆதி 27:3 மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகமுடியாமல் இருப்பதினால், அவைகள் மாடுகளை மேயவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். ஏசா 13:20-22ஏசா 17:2ஏசா 5:17ஏசா 7:21-22செப்ப 2:6