ஏசாயா 22

Isaiah 22
அத்தியாயம் 22

எருசலேமைக்குறித்த தீர்க்கதரிசனம்

தரிசனப் பள்ளத்தாக்கைக் 1 குறித்த செய்தி. உன்னில் உள்ளவர்கள் எல்லோரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன? எரே 21:13சங் 125:2ஏசா 15:3யோவே 3:12யோவே 3:141 சாமு 11:51 சாமு 3:12இராஜா 6:28 ஆட்கள் நடமாட்டம் நிறைந்து ஆரவாரம்செய்து, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் பட்டயத்தால் கொலை செய்யப்படவில்லை, போரில் இறந்ததும் இல்லை. ஏசா 32:13ஏசா 23:7எரே 14:18புலம் 2:20ஆமோ 6:3-6ஏசா 22:12-13ஏசா 37:33ஏசா 37:36 உன் அதிபதிகள் எல்லோரும் ஏகமாக ஓடி அலைந்தும், வில்வீரர்களால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட அனைவரும் தூரத்திற்கு ஓடியும் ஏகமாகக் கட்டப்படுகிறார்கள். 2இராஜா 25:18-212இராஜா 25:4-7ஏசா 3:1-8எரே 39:4-7எரே 52:24-27 ஆகையால், என்னை நோக்கிப் பார்க்காதீர்கள்; மகளாகிய என் மக்கள் பாழாய்ப்போனதின் காரணமாக மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதீர்கள் என்கிறேன். எரே 9:1மத் 2:18எரே 13:17எரே 31:15மீகா 1:8சங் 77:2ஏசா 15:3ஏசா 33:7 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும், மிதிக்கப்படுதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது; இது அலங்கத்தைத் தகர்த்து, மலைக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது. ஏசா 10:6ஏசா 37:3புலம் 1:5லூக் 23:30மீகா 7:4ஆமோ 5:18-20ஓசி 10:8ஏசா 22:1 ஏலாமியன் அம்புகளை வைக்கும் பையை எடுத்து, இரதங்களுடனும் காலாட்களுடனும் குதிரைவீரர்களுடனும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும். 2இராஜா 16:9ஏசா 21:2ஆமோ 1:5ஆமோ 9:7ஆதி 10:22ஏசா 15:1எரே 49:35-39 மிகச் சிறப்பான உன் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்; குதிரைவீரர்கள் வாசல்கள் வரை வந்து அணிவகுத்து நிற்பார்கள். ஏசா 10:28-32ஏசா 8:7-8எரே 39:1-3ஏசா 37:34 அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய். 1 இராஜா 10:171 இராஜா 7:21 இராஜா 14:27-28ஏசா 36:1-3உன்னத 4:4 நீங்கள் தாவீது நகரத்தின் விரிசல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு, கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டிவைத்து, 2இராஜா 20:202 நாளாக 32:1-62 நாளாக 32:30நெகே 3:16 எருசலேமின் வீடுகளை எண்ணி, மதிலை பலப்படுத்தும்படி வீடுகளை 2 இடித்து, இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு குளத்தை உண்டாக்குவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரச்செய்தவரைக் கவனிக்காமலும் போகிறீர்கள். எரே 33:2-3மீகா 7:72இராஜா 25:4ஏசா 17:7ஏசா 31:12 நாளாக 16:7-92 நாளாக 32:3-42 நாளாக 6:6 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், சணல்உடையை அணியவும் கட்டளையிட்டார். யோவே 1:13மீகா 1:16யோவே 2:17ஆமோ 8:10பிரச 3:4யாக் 5:1எஸ்றா 9:3யோபு 1:20 நீங்களோ, சந்தோஷித்து மகிழ்ந்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சைரசத்தைக் குடித்து: சாப்பிடுவோம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள். ஏசா 56:121 கொரி 15:32லூக் 17:26-29யாக் 5:5ஆமோ 6:3-7ஏசா 21:4-5ஏசா 5:12ஏசா 5:22 மெய்யாகவே நீங்கள் சாகும்வரை இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறாரென்பது என் காது கேட்கும்படி சேனைகளின் யெகோவாவால் தெரிவிக்கப்பட்டது. எசேக் 24:131 சாமு 3:14ஏசா 5:9ஏசா 13:11ஏசா 26:21வெளி 22:11-121 சாமு 9:15ஆமோ 3:7 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரண்மனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்திற்குப்போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால், ஏசா 36:32இராஜா 18:182இராஜா 18:372இராஜா 19:2ஏசா 37:21 நாளாக 27:251 இராஜா 4:62இராஜா 10:5 உயர்ந்த இடத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? மத் 27:602 நாளாக 16:142 சாமு 18:18யோபு 3:14ஏசா 14:18ஏசா 52:5மீகா 2:10 இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துவதுபோலக் யெகோவா உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாக உன்னை மூடிப்போடுவார். எரே 14:3எஸ்த 7:8யோபு 9:24 அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டிற்கு இகழ்ச்சியாக இருக்கும். ஏசா 17:13ஆமோ 7:17 உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் இடத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய். எசேக் 17:24யோபு 40:11-12லூக் 1:52சங் 75:6-7 அந்நாளிலே இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: 2இராஜா 18:18ஏசா 36:3ஏசா 37:22இராஜா 18:37ஏசா 36:22ஏசா 36:11 உன் உடையை அவனுக்கு அணிவித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிமக்களுக்கும், யூதாவின் வம்சத்திற்கும் தகப்பனாயிருப்பான். ஆதி 45:81 சாமு 18:4எஸ்த 8:15எஸ்த 8:2ஆதி 41:42-43ஏசா 9:6-7 தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். வெளி 3:7மத் 16:18-19யோபு 12:14மத் 18:18-19வெளி 1:18ஏசா 7:2 அவனை உறுதியான இடத்திலே ஆணியாக அடிப்பேன்; அவன் தன் தகப்பன் வீட்டிற்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான். எஸ்றா 9:8யோபு 36:71 சாமு 2:8சகரி 10:4பிரச 12:11லூக் 22:29-30வெளி 3:21எஸ்த 10:3 அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கி வைப்பார்கள். 2 தீமோ 2:20-21தானி 6:1-3யோவா 20:21-23யோவா 5:22-27மத் 28:18ஆதி 41:44-45ஆதி 47:11-25எசேக் 15:3 உறுதியான இடத்தில் அடிக்கப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்து விழும் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார்; யெகோவாவே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார். ஏசா 46:11எஸ்த 9:24-25ஏசா 22:23எரே 17:5-6மீகா 4:4சங் 146:3எஸ்த 9:5-14எசேக் 5:13