ஏசாயா 41

Isaiah 41
அத்தியாயம் 41

இஸ்ரவேலின் மீட்பர்

தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; மக்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, அருகில் வந்து, பின்பு பேசட்டும்; நாம் ஒருமிக்க நியாயாசனத்திற்கு முன்பாகச் சேருவோம். ஏசா 1:18ஆப 2:20சகரி 2:13சங் 46:10ஏசா 41:6-7ஏசா 11:11ஏசா 34:1யோபு 38:3 கிழக்கிலிருந்து நீதிமானை 1 எழுப்பி, தமது பாதப்படியிலே வரவழைத்தவர் யார்? தேசங்களை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவனுடைய பட்டயத்திற்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட வைக்கோலுமாக்கி, ஏசா 45:12 சாமு 22:43எஸ்றா 1:2ஏசா 40:24ஏசா 41:25ஏசா 46:112 நாளாக 36:23ஏசா 45:13 அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடக்காமலிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் செய்தவர் யார்? ஏசா 57:2யோபு 5:24 அதைச்செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற யெகோவாவாகிய நான்தானே; பிந்தினவர்களுடனும் இருப்பவராகிய நான்தானே. ஏசா 48:12வெளி 22:13வெளி 1:17ஏசா 44:6-7ஏசா 46:10ஏசா 41:26ஏசா 43:10வெளி 1:8 தீவுகள் அதைக்கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து, எசேக் 26:15-16யோசு 5:1சங் 65:8சங் 66:3சங் 67:7யாத் 15:14ஆதி 10:5யோசு 2:10 ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசைசெய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்கிறான். 1 சாமு 4:7-9தானி 3:1-7ஏசா 35:4ஏசா 40:19ஏசா 44:12அப் 19:24-28யோவே 3:9-111 சாமு 5:3-5 சித்திரவேலைக்காரன் கொல்லனையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான். ஏசா 40:19-20தானி 3:1-7ஏசா 44:12-15ஏசா 46:6-7நியாயாதி 18:17-18நியாயாதி 18:24எரே 10:3-5எரே 10:9 என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, யாக் 2:232 நாளாக 20:7உபா 14:2யாத் 19:5-6யோவா 15:14-15ஏசா 44:21ஏசா 51:2ஏசா 29:22 நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் ஊழியக்காரன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். 1 சாமு 12:22சங் 94:14உபா 7:6-7யாக் 2:5யோசு 24:2-41 கொரி 1:26-29ரோம 11:1-2ஏசா 41:2 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். யோசு 1:9ஏசா 43:1-2ரோம 8:31உபா 31:6-8பிலி 4:13ஏசா 40:29-312 கொரி 12:9ஏசா 41:13-14 இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற அனைவரும் வெட்கி கனவீனமடைவார்கள்; உன்னுடன் வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். யாத் 23:22ஏசா 45:24வெளி 3:9அப் 16:39ஏசா 54:17அப் 13:8-11தானி 4:35யாத் 11:8 உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். சங் 37:35-36யோபு 20:7-9ஏசா 17:14 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன். ஏசா 41:10சங் 73:23சங் 63:8சங் 109:31ஏசா 42:62 தீமோ 4:17ஏசா 45:1உபா 33:26-29 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். ஏசா 43:14ஏசா 54:5சங் 22:6எரே 50:34யோபு 25:6சங் 19:14யோபு 19:25கலா 3:13 இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். மீகா 4:132 கொரி 10:4-5சகரி 4:7ஆப 3:12ஏசா 21:10ஏசா 28:27சங் 18:42 அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ யெகோவாவுக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய். எரே 51:2ஏசா 45:24-25ஏசா 61:10-11ஆப 3:18எரே 15:7எரே 9:23-241 கொரி 1:30-311 சாமு 2:1-2 சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடைக்காமல், அவர்கள் நாக்கு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். ஏசா 55:1ஏசா 44:3ஏசா 30:19மத் 5:6ஏசா 42:16ஏசா 61:1சங் 34:6சங் 72:12-13 உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்திரத்தைத் தண்ணீருள்ள குளமும், வறண்ட பூமியை தண்ணீருள்ள கிணறுகளுமாக்கி, ஏசா 35:6-7சங் 107:35ஏசா 58:11ஏசா 30:25எசேக் 47:1-8ஏசா 43:19-20வெளி 7:17ஏசா 44:3 வனாந்திரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம் மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருமரங்களையும், பாய்மர மரங்களையும், புன்னைமரங்களையும் வளரச்செய்வேன். ஏசா 55:13ஏசா 37:31-32ஏசா 35:1ஏசா 60:13ஏசா 60:21ஏசா 61:11எசேக் 17:22-24ஏசா 27:6 யெகோவாவுடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள். யோபு 12:9ஏசா 43:21ஏசா 44:23சங் 109:27யாத் 9:162 தெச 1:10ஏசா 43:7-13ஏசா 45:6-8 உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார். யோபு 23:3-4யோபு 38:3மீகா 6:1-2யோபு 31:37யோபு 40:7-9 அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும். ஏசா 45:21ஏசா 46:10ஏசா 44:7ஏசா 48:14ஏசா 42:9ஏசா 43:9-12யோவா 13:19யோவா 16:14 பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாகக் கூடி அதைப்பார்ப்போம். ஏசா 42:9யோவா 13:19எரே 10:5ஏசா 44:7-8ஏசா 45:3ஏசா 45:7-8ஏசா 46:7ஏசா 46:9-10 இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன். 1 கொரி 8:4சங் 115:8ஏசா 41:29எரே 10:14எரே 10:8உபா 27:15உபா 7:26ஏசா 37:19 நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பச்செய்வேன், அவன் வருவான்; சூரியன் உதிக்கும் திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்வான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான். ஏசா 41:22 சாமு 22:43ஏசா 10:6ஏசா 44:28ஏசா 46:10-11மீகா 7:10சகரி 10:5எஸ்றா 1:2-3 நாம் அதை அறியும்படியாக ஆரம்பத்தில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி ஆரம்பகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே. ஏசா 41:22ஏசா 44:7ஏசா 45:21ஆப 2:18-20ஏசா 43:9 முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகர்களைக் கொடுக்கிறேன். ஏசா 40:9ஏசா 52:7ஏசா 44:28ஏசா 48:3நாகூ 1:15எஸ்றா 1:1-2ஏசா 41:4ஏசா 43:10 நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்கும் காரியத்திற்கு மறுமொழி கொடுக்கக்கூடிய ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை. ஏசா 63:5தானி 2:10-11தானி 4:7-8தானி 5:8ஏசா 40:13-14ஏசா 50:2ஏசா 59:16 இதோ, அவர்கள் எல்லோரும் மாயை, அவர்கள் செயல்கள் வீண்; அவர்களுடைய சிலைகள் காற்றும் வெறுமையுந்தானே. எரே 5:13ஏசா 41:24ஆப 2:18ஏசா 44:9-20எரே 10:2-16சங் 115:4-8சங் 135:15-18