குயவனின் வீடு
யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். எபி 1:1அப் 9:6எரே 19:1-2எரே 23:22ஆமோ 7:7எசேக் 4:1-5ஏசா 20:2எரே 13:1 அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான். யோவா 15:14அப் 26:19யோனா 1:3 குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாத்திரம் அவன் கையிலே கெட்டுப்போனது; அப்பொழுது அதைச் சரியாக செய்வதற்கு, தன் பார்வைக்குச் சரியாக தோன்றுகிற விதத்தில் குயவன் அதைத் திரும்ப வேறு பாத்திரமாக வனைந்தான். ரோம 9:20-23எரே 18:6ஏசா 45:9 அப்பொழுது யெகோவாவுடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். ஏசா 64:8ரோம 9:20-21ஏசா 45:9எரே 18:4மத் 20:15தானி 4:23ரோம 11:34 பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு தேசத்திற்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்திற்கு விரோதமாகவும் சொன்ன உடனே, எரே 1:10எரே 12:14-17எரே 45:4ஆமோ 9:8எரே 25:9-14யோனா 3:4 நான் விரோதமாய்ப் பேசின அந்த தேசத்தார் தங்கள் தீமையைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல், மனம் மாறுவேன். எசேக் 18:21எரே 26:13ஓசி 11:8யோனா 3:9-10எரே 26:3ஆமோ 7:3-6நியாயாதி 2:18யோவே 2:13-14 கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு தேசத்தையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு. எரே 31:28ஆமோ 9:11-15எரே 1:10எரே 11:17பிரச 3:2எரே 30:18எரே 31:38எரே 31:4 அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன். 1 சாமு 2:30எசேக் 33:181 சாமு 13:13எசேக் 18:241 சாமு 15:11சங் 125:51 சாமு 15:35எரே 7:23-28 இப்பொழுதும், நீ யூதாவின் மனிதரையும் எருசலேமின் குடிமக்களையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை ஏற்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தைத் திட்டமிடுகிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்துங்களென்று யெகோவா உரைக்கிறாரென்று சொல். 2இராஜா 17:13ஏசா 55:6-7ஏசா 1:16-19எரே 35:15எரே 7:3எரே 25:5அப் 26:20யாக் 5:1 ஆனாலும் அவர்கள்: அது முடியாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தின் கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள். எரே 2:25உபா 29:19எரே 16:12எரே 7:24ஏசா 57:10ஆதி 8:21எரே 3:17லூக் 1:51 ஆகையால் யெகோவா சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று அந்நிய மக்களுக்குள் விசாரித்துப்பாருங்கள்; மிகவும் அதிர்ச்சியடையும் காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள். எரே 5:30ஓசி 6:10ஏசா 66:8எரே 2:10-13எரே 23:14எரே 14:17எரே 31:41 கொரி 5:1 லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து இல்லாமல் போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ? யோவா 6:68 என் மக்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; ஒழுங்குபடுத்தப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களை முந்தின பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது. எரே 6:16எரே 2:32ஓசி 11:2ஏசா 57:14எரே 2:13மல்கி 2:8ஏசா 41:29எரே 10:15 நான் அவர்களுடைய தேசத்தை அழிக்கவும், என்றென்றைக்கும் சத்தமிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான். சங் 22:7எரே 25:9எரே 19:81 இராஜா 9:8எசேக் 33:28-29எரே 49:13எரே 50:13மத் 27:39 கொண்டல்காற்றுப் பறக்கடிப்பதுபோல நான் அவர்களை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளில் என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார். எரே 13:24எரே 2:27ஓசி 13:15யோபு 27:21சங் 48:7எரே 32:33எரே 46:21உபா 28:25 அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள். சங் 52:2எரே 11:19மல்கி 2:7எரே 13:13-14எரே 18:11எரே 5:12-13மீகா 2:1-3நீதி 18:21 யெகோவாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும். நெகே 6:9எரே 20:12மீகா 7:8சங் 109:28சங் 55:16-172இராஜா 19:16லூக் 6:11-12நெகே 4:4-5 நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய கடுங்கோபத்தை அவர்களை விட்டுத்திருப்புவதற்கு நான் அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும். சங் 35:7சங் 57:6சங் 106:231 சாமு 24:17-19சங் 35:12பிரச 10:8எரே 18:22நீதி 26:27 ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்திற்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளையில்லாதவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் கணவன்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் போரில் பட்டயத்தால் மடியக்கடவர்கள். சங் 109:9-20ஆமோ 4:10உபா 32:25யாத் 22:24எரே 15:8எரே 16:3-4எரே 9:21புலம் 5:3 நீர் உடனே அவர்கள்மேல் படையை வரச்செய்யும்போது, கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே. எரே 6:26சங் 140:5எரே 25:34-36செப்ப 1:10-11ஏசா 10:30சங் 56:5-7செப்ப 1:16ஏசா 22:1-4 ஆனாலும் யெகோவாவே, அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்தில் இப்படி அவர்களுக்குச் செய்யும். சங் 35:4சங் 69:22-28ஏசா 2:9நெகே 4:4-5சங் 109:14-15ஏசா 10:3எரே 11:18-20எரே 11:23