அக்காலத்தில் யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும் எருசலேமுடைய குடிமக்களின் எலும்புகளையும், அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுத்து, எசேக் 6:51 இராஜா 13:22 நாளாக 34:4-52இராஜா 23:162இராஜா 23:20ஆமோ 2:1எசேக் 37:1எரே 7:32-34 அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், தேடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்செய்யப்படாமல் பூமியின்மேல் எருவாகும். 2இராஜா 23:5உபா 4:19அப் 7:42எரே 9:22செப்ப 1:52இராஜா 21:3எசேக் 8:16எரே 16:4 இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். வெளி 9:6எரே 29:14எரே 23:3எரே 23:8உபா 30:4யோபு 7:15-16தானி 9:7உபா 30:1
பாவமும் தண்டனையும்
நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ? நீதி 24:16மீகா 7:8ஓசி 6:1ஏசா 55:7எரே 3:1ஆமோ 5:2எசேக் 18:23ஓசி 14:1 ஆனாலும் எருசலேமியராகிய இந்த மக்கள் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள். எரே 9:6எரே 5:3சகரி 7:11எபி 12:25ஓசி 11:7யோவா 5:402 தெச 2:9-12ஏசா 30:10 நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; போருக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள். சங் 14:2எசேக் 18:282 பேது 3:9ஏசா 30:18லூக் 15:17-19எரே 5:1யோபு 39:19-25மல்கி 3:16 ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் மக்களோ யெகோவாவின் நியாயத்தை அறியார்கள் என்று யெகோவா உரைக்கிறாரென்று சொல். ஏசா 1:3எரே 5:4-5ஏசா 5:12நீதி 6:6-8உன்னத 2:12 நாங்கள் ஞானிகளென்றும், யெகோவாவுடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. ஏசா 10:1-2யோவா 9:41யோபு 5:12-131 கொரி 3:18-20மத் 15:6ரோம 1:22யோபு 12:20சங் 147:19 ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது? சங் 119:98-100எரே 6:15யோபு 5:121 கொரி 1:18-29உபா 4:6ஏசா 19:11எரே 6:19சங் 19:7 ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து, எரே 6:12-13எசேக் 33:31ஆமோ 5:11உபா 28:30-32எசேக் 22:27-28ஏசா 28:7ஏசா 56:10-12எரே 23:11-17 சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். எரே 6:14எசேக் 13:10-161 இராஜா 22:131 இராஜா 22:6எரே 14:14-15எரே 27:9-10எரே 28:3-9புலம் 2:14 தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? ஆனால் வெட்கப்படமாட்டார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 3:3உபா 32:35ஏசா 3:9எரே 6:15சங் 52:7சங் 52:1செப்ப 3:5எசேக் 22:25-31 அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் 1என்று யெகோவா சொல்லுகிறார்; திராட்சைச்செடியில் குலைகள் இராது, அத்திமரத்தில் பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல். மத் 21:19யோவே 1:7எரே 17:8சங் 1:3-4ஆகா 2:17உபா 28:39-42எசேக் 22:19-21எசேக் 24:3-11 நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் நுழைந்து, அங்கே சங்காரமாவோம்; நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அழித்து, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார். எரே 23:15எரே 9:15எரே 35:11புலம் 3:19சங் 69:212 சாமு 20:6உபா 29:18உபா 32:32 சமாதானத்திற்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து. எரே 14:191 தெச 5:3மீகா 1:12எரே 4:10எரே 8:11 தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்சு சத்தம் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த குதிரைகள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் மக்களையும் பட்சிப்பார்கள். 1 கொரி 10:28நியாயாதி 18:29நியாயாதி 5:22எரே 4:15-161 கொரி 10:26ஆப 3:10நியாயாதி 20:1எரே 10:25 மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். பிரச 10:11சங் 58:4-5உபா 32:24ஏசா 14:29எண் 21:6ஆமோ 5:19ஆமோ 9:3வெளி 9:19 நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலவீனமாயிருக்கிறது. ஏசா 22:4எரே 6:24புலம் 1:16-17புலம் 5:17தானி 10:16-17ஆப 3:16எரே 10:19-22யோபு 7:13-14 இதோ, சீயோனில் யெகோவா இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் மக்களாகிய மகள் தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார். ஏசா 39:3ஏசா 13:5வெளி 2:1உபா 32:16-21ஏசா 12:6ஏசா 33:22ஏசா 52:1எரே 14:19 அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ காப்பாற்றப்படவில்லை. லூக் 13:25மத் 25:1-12நீதி 10:5லூக் 19:44எபி 3:7-15 என் மக்களாகிய மகளின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது. எரே 14:17யோவே 2:6நாகூ 2:10சங் 137:3-6உன்னத 1:5-6எரே 4:19எரே 9:1லூக் 19:41 கீலேயாத்திலே பிசின் தைலமருந்து இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் மக்களாகிய மகள் சுகமடையாமற்போனாள்? எரே 46:11ஆதி 37:25எரே 51:8எரே 30:12-17லூக் 8:43லூக் 5:31-32ஆதி 43:11ஏசா 1:5-6