சோப்பாரின் வார்த்தைகள்
அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக: யோபு 2:11யோபு 11:1யோபு 42:9
“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் நீதி 14:29சங் 31:22பிரச 7:9யாக் 1:19எரே 20:9யோபு 13:19யோபு 20:3யோபு 32:13-20
நான் விரைவாகச் சொல்லுகிறேன்.
நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; யோபு 33:3யோபு 19:29யோபு 19:3யோபு 20:2யோபு 27:11சங் 49:3சங் 78:2-5
ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது.
துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், ஆதி 1:28ஆதி 9:1-3யோபு 15:10யோபு 32:7யோபு 8:8-9சங் 115:16
மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் சங் 37:35-36யோபு 18:5-6அப் 12:22-23யோபு 27:8யோபு 5:3யோபு 8:12-13மத் 13:20-21சங் 73:18-20
இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், ஏசா 14:13-14ஒபதி 1:3-4ஆதி 11:4ஆமோ 9:2தானி 4:11தானி 4:22மத் 11:23
அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும்,
அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; 1 இராஜா 14:102இராஜா 9:37யோபு 14:10யோபு 4:20யோபு 7:10யோபு 8:18சங் 83:10எரே 8:2
அவனைக் கண்டவர்கள்,
அவன் எங்கே? என்பார்கள்.
அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; சங் 90:5சங் 73:20ஏசா 29:7-8யோபு 18:18யோபு 27:21-23சங் 18:10
இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; யோபு 7:8யோபு 7:10யோபு 8:18யோபு 20:7சங் 37:10சங் 37:36யோபு 27:3சங் 103:15-16
அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை.
அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; யோபு 20:18யோபு 27:16-17லூக் 19:82 சாமு 12:6யாத் 12:36யாத் 22:1யாத் 22:3யாத் 9:2
அவன் பறித்ததை அவன் 1 கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, யோபு 13:26யோபு 21:26சங் 25:7எசேக் 24:13எசேக் 32:27யோவா 8:24அப் 1:25யோபு 19:20
அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், யோபு 15:16சங் 10:7பிரச 11:9ஆதி 3:6நீதி 20:17நீதி 9:17-18சங் 109:17-18
அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
அதை விடாமல் அடக்கி, மத் 5:29-30மாற் 9:43-49எண் 11:18-20ரோம 8:13
தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, ரோம 3:132 சாமு 11:2-52 சாமு 12:10-11உபா 32:24எரே 2:19யோபு 20:16மல்கி 2:2நீதி 1:31
அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும்.
அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; நீதி 23:8மத் 27:3-4
தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; அப் 28:3-6ரோம 3:13உபா 32:24ஏசா 30:6மத் 3:7
விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை. உபா 32:13-14யோபு 29:6லூக் 16:242இராஜா 7:22 சாமு 17:29ஏசா 41:17ஏசா 7:15ஏசா 7:22
தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; யோபு 20:10எரே 22:13எரே 51:44யோபு 20:15நீதி 1:12ஓசி 8:7-8ஏசா 24:7-11எரே 11:15-16
அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்;
அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான்.
அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, யோபு 35:9நீதி 14:31எசேக் 22:29யாக் 2:13யாக் 2:6யாக் 5:4நீதி 22:22-231 இராஜா 21:19
தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும்,
தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும், பிரச 5:13-14ஏசா 57:20-21
அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; எரே 17:11யோபு 15:29யோபு 18:19லூக் 16:24-25
ஆகையால் அவனுடைய செல்வம் நிலைநிற்பதில்லை.
அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், யோபு 15:29வெளி 18:72இராஜா 24:2பிரச 2:18-20ஏசா 10:6யோபு 1:15யோபு 1:17யோபு 16:11
அவனுக்கு வேதனை உண்டாகும்;
சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.
தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், சங் 78:30-31எண் 11:33யாத் 9:23ஆதி 19:24ஏசா 21:4லூக் 12:17-20மல்கி 2:2சங் 11:6
அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது,
அதை அவன்மேல் வரச்செய்வார்.
இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும். ஆமோ 5:19ஏசா 24:182 சாமு 22:351 இராஜா 20:30ஆமோ 9:1-3எரே 48:43-44நீதி 7:23
உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், யோபு 16:13யோபு 18:11உபா 32:41யோபு 15:21யோபு 27:20சங் 7:122 கொரி 5:112 சாமு 18:14
மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்;
பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; சங் 21:9சங் 120:4ஏசா 14:20-22ஏசா 30:33ஏசா 8:22யோபு 18:18-19யோபு 18:5-6யூதா 1:13
அணையாத நெருப்பு அவனை எரிக்கும்;
அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான்.
வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். ஏசா 26:21யோபு 16:18லூக் 12:2-31 கொரி 4:5உபா 31:28எரே 29:23யோபு 18:18மல்கி 3:5
வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்; யோபு 27:14-19யாக் 5:1-3வெளி 18:17செப்ப 1:182இராஜா 20:17உபா 28:31யோபு 20:10யோபு 20:18-22
தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும்.
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், யோபு 27:13யோபு 31:2-3யோபு 18:21சங் 11:5-6புலம் 3:38மத் 24:51உபா 29:20-28
அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான்.