யோவான் 11

John 11
அத்தியாயம் 11

லாசருவின் மரணம்

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான். யோவா 12:17லூக் 10:38-422இராஜா 20:1-12யோவா 11:11யோவா 12:9மத் 21:17அப் 9:37யோவா 11:5-6 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான். யோவா 12:3மத் 26:6-7மாற் 14:3லூக் 7:37-38 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். யோவா 11:5வெளி 3:19எபி 12:6-7யோவா 13:23சங் 16:32 தீமோ 4:20ஆதி 22:2யோவா 11:11 இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். யோவா 11:40யோவா 9:31 பேது 4:14யோவா 5:23யோவா 17:51 பேது 4:11யோவா 13:31-32மாற் 5:39-42 இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார். யோவா 15:9-13யோவா 11:36யோவா 17:26யோவா 16:27யோவா 11:8 அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார். ஏசா 30:18ஏசா 55:8-9ஆதி 22:14ஆதி 42:24ஆதி 43:29-31ஆதி 44:1-5ஆதி 45:1-5மத் 15:22-28 அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார். அப் 20:22-24அப் 15:36யோவா 10:40-42லூக் 9:51 அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள். யோவா 10:31யோவா 8:59அப் 21:12-13மத் 16:21-23யோவா 10:39அப் 20:24சங் 11:1-3மத் 23:7 இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான். யோவா 9:4யோவா 12:35எரே 31:9லூக் 13:31-33நீதி 3:23 ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார். நீதி 4:18-191 யோவா 2:10-11எரே 13:16எரே 20:11பிரச 2:14சங் 27:2 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார். தானி 12:2யோவா 11:131 தெச 5:10யோவா 11:43-44மத் 27:521 கொரி 15:51எபே 5:14யாத் 33:11 அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள். மத் 9:24 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி; யோவா 16:25யோவா 10:24யோவா 16:29 நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். 2 தீமோ 2:10யோவா 14:10-111 யோவா 5:13ஏசா 54:15யோவா 11:35-36யோவா 11:42 கொரி 4:15ஏசா 65:8 அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான். யோவா 13:37லூக் 6:15மத் 10:3மத் 26:35மாற் 3:18யோவா 14:5யோவா 20:24-29யோவா 21:2

இயேசு லாசருவின் சகோதரிகளை ஆறுதல்படுத்துதல்

இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார். யோவா 11:39ஓசி 6:2அப் 2:27-31யோவா 2:19 பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யோவா 11:1லூக் 24:13வெளி 14:20யோவா 6:19வெளி 21:16 யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். யோபு 2:111 தெச 5:11யோவா 11:312 கொரி 1:41 தெச 4:18யோபு 42:11ரோம 12:152 சாமு 10:2 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள். 1 தெச 4:17லூக் 10:38-42யோவா 11:30மத் 25:1அப் 10:25அப் 28:15மத் 25:6 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். யோவா 11:32மத் 9:181 இராஜா 17:18யோவா 11:37யோவா 4:47-49லூக் 7:6-10லூக் 8:49-55சங் 78:19 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். யோவா 9:31யோவா 11:41-42மாற் 9:23மத் 28:18எபி 11:17-19யோவா 5:22-27யோவா 17:2யோவா 3:35 இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். யோவா 11:43-44 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். தானி 12:2-3அப் 24:15யோவா 5:28-29ஏசா 26:19அப் 17:31-32ஓசி 13:14லூக் 14:14சங் 17:15 இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 1 தெச 4:14யோவா 3:361 யோவா 5:11-12யோவா 1:4ரோம 8:10-11யோவா 5:21ஏசா 26:19ரோம 8:2 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். யோவா 10:28யோவா 5:24ரோம 8:131 யோவா 5:10-12யோவா 8:51-53யோவா 6:54-58யோவா 3:15-18யோவா 6:50-51 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். மத் 16:16யோவா 6:14யோவா 6:69மல்கி 3:11 யோவா 5:11 யோவா 5:201 தீமோ 1:15-16லூக் 2:11 இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். யோவா 13:131 தெச 4:17-18யோவா 11:20யோவா 20:16மாற் 10:49யோவா 1:41யோவா 1:45யோவா 10:3 அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள். சங் 27:8நீதி 15:23சங் 119:59-60உன்னத 3:1-4நீதி 27:17 இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார். யோவா 11:20 அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள். யோவா 11:192 சாமு 12:16-18ஆதி 37:351 கொரி 2:15 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள். யோவா 11:21லூக் 17:16லூக் 5:8லூக் 8:41வெளி 22:8வெளி 5:14வெளி 5:8யோவா 11:37 அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: யோவா 11:38யோவா 12:27மாற் 3:5ரோம 12:15ஆதி 43:30-31ஆதி 45:1-5எபி 5:7-8மாற் 14:33-35 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். மத் 28:6யோவா 20:2மாற் 15:47மாற் 16:6யோவா 1:39 இயேசு கண்ணீர் விட்டார். லூக் 19:41எபி 4:15யோவா 11:33ஏசா 53:3எரே 13:17சங் 119:136யோபு 30:25எபி 2:16-17 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள். யோவா 11:31 யோவா 3:11 யோவா 4:9-10வெளி 1:5எபே 5:22 கொரி 8:8-9எபே 5:25யோவா 14:21-23 அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள். யோவா 9:6-7யோவா 11:32லூக் 23:35லூக் 23:39மத் 27:40-42சங் 78:19-20யோவா 11:21மாற் 15:32

இயேசு லாசருவை உயிரோடு எழுப்புதல்

அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. யோவா 11:33லூக் 24:2மத் 27:60ஆதி 23:19ஏசா 22:16யோவா 20:1மாற் 15:46மாற் 8:12 இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள். யோவா 11:17சங் 49:7மாற் 16:3ஆதி 3:19பிலி 3:21ஆதி 23:4அப் 13:36அப் 2:27 இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். யோவா 11:4யோவா 11:23-26ரோம 4:17-25சங் 63:2யோவா 1:142 கொரி 3:18சங் 90:162 நாளாக 20:20 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். மத் 11:25யோவா 17:1சங் 123:1லூக் 10:21பிலி 4:6யோவா 12:28-30லூக் 18:13 நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார். யோவா 3:17யோவா 17:211 யோவா 4:14எபி 7:251 யோவா 4:9-10எபி 5:7யோவா 11:22யோவா 17:25 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார். 2இராஜா 4:33-36அப் 9:40அப் 9:34லூக் 7:14-151 இராஜா 17:21-22அப் 3:6அப் 3:12மாற் 4:41 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். யோவா 5:25யோவா 20:7யோவா 11:25-26யோவா 5:21லூக் 7:15பிலி 3:211 சாமு 2:6அப் 20:9-12

இயேசுவைக் கொல்ல சதித்திட்டம்

அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 11:19யோவா 2:23யோவா 10:41யோவா 11:31யோவா 12:17-19யோவா 12:42யோவா 12:9-11யோவா 7:31 அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். யோவா 9:13லூக் 16:30-31அப் 5:25யோவா 12:37யோவா 5:15-16 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. மத் 26:3அப் 4:16-17அப் 4:5-6யோவா 11:57யோவா 12:19யோவா 2:11மத் 5:22அப் 4:27-28 நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். 1 தெச 2:15-16அப் 5:28தானி 9:26-27மத் 23:35-38மத் 27:25சகரி 14:1-2உபா 28:50-68லூக் 11:52 அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது; யோவா 11:51யோவா 18:13-14மத் 26:3நீதி 26:12அப் 4:6லூக் 3:21 கொரி 1:201 கொரி 2:6 மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான். யோவா 18:14லூக் 24:46யோவா 19:12ரோம 3:8யோவா 11:48 இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும், 2 கொரி 5:21தானி 9:261 சாமு 23:9யாத் 28:30கலா 4:4-5மத் 20:281 கொரி 13:21 சாமு 28:6 அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான். யோவா 10:16ஏசா 49:61 யோவா 2:21 பேது 1:1எபே 1:9-10எபே 2:14-22வெளி 5:9ரோம 9:25-26 அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள். அப் 5:33அப் 9:23எரே 38:15எரே 38:4யோவா 11:47யோவா 12:10மத் 16:21மத் 22:46 ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார். யோவா 7:12 நாளாக 13:19யோவா 7:42 சாமு 13:23யோவா 10:40யோவா 18:20யோவா 4:1-3யோவா 7:10 யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். 2 நாளாக 30:17-20எபி 9:13-14யாத் 19:10ஆதி 35:2யோவா 12:1யோவா 2:13யோவா 6:41 கொரி 11:28 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். யோவா 7:11யோவா 11:7-8 பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள். சங் 109:4யோவா 10:39யோவா 5:16-18யோவா 8:59யோவா 9:22