யோவான் 13

John 13
அத்தியாயம் 13

இயேசு சீடர்களின் கால்களைக் கழுவுதல்

பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவா 12:231 யோவா 4:19யோவா 13:34யோவா 13:3யோவா 16:28யோவா 18:4வெளி 1:51 கொரி 1:8 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது; யாக் 1:13-17அப் 5:3யோவா 13:26-27யோவா 6:70-71லூக் 22:3லூக் 22:312 கொரி 8:16எபே 2:3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; யோவா 3:35மத் 11:27எபி 1:2மத் 28:18யோவா 17:2யோவா 8:421 கொரி 15:27எபே 1:21-22 பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு, 2 கொரி 8:9லூக் 22:27லூக் 12:37பிலி 2:6-8லூக் 17:7 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார். லூக் 7:441 தீமோ 5:10சங் 51:2ஆதி 18:4ஆதி 19:21 கொரி 6:111 சாமு 25:412இராஜா 3:11

அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான். யோவா 1:27மத் 3:11-14லூக் 5:8 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார். தானி 12:8யோவா 12:16யோவா 14:26யாக் 5:7-11யோவா 13:10-12தானி 12:12ஆப 2:1-3யோவா 13:36 பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அப் 22:16எசேக் 36:25தீத் 3:5எபே 5:26எபி 10:221 கொரி 6:11வெளி 7:14கொலோ 2:18 அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். சங் 51:2சங் 51:71 பேது 3:21சங் 26:6எபி 10:22எரே 4:14மத் 27:24 இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார். யோவா 15:32 கொரி 7:12 கொரி 5:17எண் 19:19-21எபே 5:26-27லேவி 17:15-16எண் 19:12-131 தெச 5:23 தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார். யோவா 13:18யோவா 13:26யோவா 13:2யோவா 13:21யோவா 2:25யோவா 6:64-71மத் 26:24-25யோவா 17:12

அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? யோவா 13:7எசேக் 24:24யோவா 13:4எசேக் 24:19மத் 13:51மாற் 4:13 நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். லூக் 6:461 கொரி 12:3பிலி 2:11யோவா 11:281 கொரி 8:6ரோம 14:8-9யாக் 2:19மத் 23:8-10 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும். 1 பேது 5:5அப் 20:35ரோம 12:16கலா 5:13லூக் 22:26-271 பேது 4:1மாற் 10:43-45எபி 5:8-9 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். 1 யோவா 2:6மத் 11:291 பேது 2:211 பேது 3:17-18எபே 5:2ரோம 15:5 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல. யோவா 15:20லூக் 6:40மத் 10:24-25யோவா 3:5யோவா 3:3 நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள். லூக் 11:28யாக் 4:17யாக் 1:25மத் 7:24-25யாத் 40:16எசேக் 36:27லூக் 12:47-48சங் 19:11

யூதாசின் சதித்திட்டம்

உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். சங் 41:9மத் 26:23யோவா 17:12மாற் 14:20யோவா 13:26யோவா 13:10-11யோவா 6:70யோவா 15:19 அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏசா 43:10யோவா 14:29யோவா 16:4வெளி 1:17-18ஏசா 48:5யோவா 8:23-24மத் 24:25யோவா 8:58 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக் 10:16லூக் 9:48மத் 25:40மாற் 9:37மத் 10:40-42கலா 4:14யோவா 12:44-48கொலோ 2:6 இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். யோவா 13:18மத் 26:21மாற் 14:182 கொரி 2:12-13அப் 1:16-17யோவா 12:27லூக் 22:21-22யோவா 11:33 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். லூக் 22:23மத் 26:22மாற் 14:19ஆதி 42:1 அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யோவா 19:26யோவா 20:2யோவா 21:20யோவா 21:7வெளி 1:16-182 சாமு 12:3யோவா 13:25யோவா 21:24 யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப் 13:16அப் 12:17அப் 21:40லூக் 1:22லூக் 5:7 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். யோவா 21:20எஸ்த 7:5ஆதி 44:4-12 இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார். மத் 26:23யோவா 13:30லூக் 22:21மாற் 14:19-20யோவா 6:70-71யோவா 12:4-6 அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார். லூக் 22:3யோவா 13:2அப் 5:3பிரச 9:3யாக் 1:13-15மத் 12:45நீதி 1:16தானி 2:15 அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை. யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அப் 20:34-35எபே 4:28யோவா 12:5-6கலா 2:10யோவா 13:1 அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது. ஏசா 59:7நீதி 4:16ரோம 3:15யோபு 24:13-15லூக் 22:53

அன்பாக இருங்கள்

அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். 1 பேது 4:11யோவா 14:131 பேது 1:21யோவா 16:14யோவா 7:39அப் 2:36அப் 3:13எபே 1:5-8 தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார். வெளி 22:1வெளி 22:3ஏசா 53:10-12யோவா 12:23யோவா 17:1யோவா 17:4-61 பேது 3:22எபி 1:2-3 பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். யோவா 7:33-341 யோவா 2:1யோவா 16:16-22யோவா 8:21-24யோவா 12:35-36யோவா 14:19யோவா 14:4-61 யோவா 4:4

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். எபே 5:2லேவி 19:18யோவா 15:171 பேது 1:221 யோவா 3:23கலா 6:21 கொரி 12:26-271 யோவா 4:21 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார். 1 யோவா 4:20-211 யோவா 2:101 யோவா 3:10-14யோவா 17:211 யோவா 2:5அப் 4:32-35ஆதி 13:7-8அப் 5:12-14 சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். 2 பேது 1:14யோவா 21:21-22யோவா 13:33யோவா 14:2யோவா 21:18-19யோவா 14:4-5யோவா 16:17 பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். அப் 20:24அப் 21:13யோவா 21:15மாற் 14:27-31லூக் 22:31-34மத் 26:31-35 இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக் 22:34மத் 26:34மாற் 14:30நீதி 16:18லூக் 22:56-62மத் 26:69-75நீதி 28:261 கொரி 10:12