யோவான் 7

John 7
அத்தியாயம் 7

கிறிஸ்து தம் சகோதரர்களைக் கடிந்துகொள்ளுதல்

இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார். யோவா 5:16-18யோவா 4:3மத் 21:38யோவா 7:19மத் 10:23அப் 10:38லூக் 13:31-33யோவா 1:19 யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது. சகரி 14:16-19உபா 16:13-16யாத் 23:16-17லேவி 23:34-43எண் 29:12-381 இராஜா 8:21 இராஜா 8:652 நாளாக 7:9-10 அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும். மத் 12:46யோவா 7:51 சாமு 17:28அப் 2:14ஆதி 37:20ஆதி 37:5-11எரே 12:6யோவா 7:10 பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். யோவா 18:20நீதி 18:1-2லூக் 6:45மத் 23:5மத் 6:5மத் 6:1-21 இராஜா 22:13மத் 4:6 அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள். மாற் 3:21யோவா 1:11-13யோவா 7:10யோவா 7:3மீகா 7:5-6 இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது. யோவா 7:8யோவா 2:4யோவா 7:30யோவா 17:1யோவா 13:1யோவா 8:20மத் 26:18அப் 1:7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது. யோவா 15:18-19யோவா 3:19கலா 4:16நீதி 9:7-8யாக் 4:41 யோவா 4:5யோவா 17:141 இராஜா 21:20 நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். யோவா 7:6யோவா 8:201 கொரி 2:15-16யோவா 7:30யோவா 11:6-7யோவா 8:30 இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார். அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார். ஆமோ 5:13மத் 10:16ஏசா 42:2-3கலா 4:4யோவா 11:54யோவா 7:3யோவா 7:5மத் 3:15 பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள். யோவா 11:56 மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். யோவா 7:40-43யோவா 9:16அப் 11:24யோவா 7:32யோவா 7:47யோவா 10:19-21யோவா 6:14யோவா 7:52 ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை. யோவா 9:22யோவா 19:38யோவா 12:42-43யோவா 20:19நீதி 29:25வெளி 2:132 தீமோ 2:9-13கலா 2:12-13

தேவாலயத்தில் இயேசுவின் போதனை

பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார். யோவா 7:28லூக் 19:47ஆகா 2:7-9யோவா 18:20யோவா 8:2யோவா 5:14யோவா 7:2யோவா 7:37 அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். லூக் 4:22மத் 13:54மத் 7:28-29அப் 26:24யோவா 7:46லூக் 2:47மத் 22:22அப் 2:7-13 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது. யோவா 14:10யோவா 14:24யோவா 12:49-50யோவா 17:8யோவா 5:23-24யோவா 5:30யோவா 6:38-40யோவா 17:14 அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். யோவா 8:31-32யோவா 8:43எரே 31:33-34யோவா 8:47தானி 12:10சங் 25:8-9பிலி 3:15-16அப் 17:11 சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. யோவா 5:41பிலி 2:3-51 கொரி 10:31-33யோவா 13:31-32யோவா 12:28யோவா 8:49-501 தெச 2:6யோவா 17:4-5 மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். யோவா 1:17யோவா 7:1யோவா 11:53மத் 12:14உபா 1:17உபா 33:4யாத் 24:2-3கலா 6:13 மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். யோவா 10:20யோவா 8:48மாற் 3:21-22யோவா 8:52மாற் 3:30அப் 26:24மத் 10:25மத் 11:18-19 இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள். யோவா 5:2-11யோவா 7:23 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள். லேவி 12:3ஆதி 17:10-14ரோம 4:9-11கலா 3:17 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? யோவா 5:14-16மத் 12:2மத் 12:5யோவா 5:8-9 தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார். ஏசா 11:3-4யாக் 2:9யோவா 8:15நீதி 17:15நீதி 24:23யாக் 2:1உபா 1:16-17உபா 16:18-19

இயேசுதான் கிறிஸ்துவா?

அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்? யோவா 7:10-11 இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? 2 தீமோ 1:7-8எபே 6:19-20யோவா 7:48அப் 4:13ஏசா 42:4ஏசா 50:7-8யோவா 11:47-53யோவா 9:22 இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். மீகா 5:2யோவா 7:41-42யோவா 6:42யோவா 9:29மத் 13:54-57எரே 30:21மாற் 6:3ஏசா 11:1 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். யோவா 8:42யோவா 8:19எரே 9:6யோவா 12:49யோவா 5:43யோவா 8:14யோவா 8:261 யோவா 2:3-4 நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். யோவா 8:55மத் 11:271 யோவா 4:9யோவா 1:18யோவா 17:18யோவா 17:25-26யோவா 3:16-17யோவா 6:46 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை. யோவா 10:39யோவா 7:6யோவா 8:20யோவா 7:32ஏசா 46:10யோவா 11:57யோவா 11:9-10யோவா 7:19 மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள். யோவா 12:42மத் 12:23அப் 8:13யோவா 10:41-42யோவா 11:45யோவா 8:30-32யாக் 2:26யோவா 12:11 மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள். அப் 5:26மத் 12:23-24யோவா 11:47-48யோவா 12:19யோவா 18:3யோவா 7:45-53லூக் 22:52-53மத் 23:13 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன். யோவா 13:33யோவா 16:5யோவா 14:19யோவா 17:11யோவா 17:13மாற் 16:19யோவா 12:35-36யோவா 13:1 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார். யோவா 13:33-36நீதி 1:24-31ஓசி 5:6யோவா 14:3யோவா 14:6யோவா 17:24யோவா 8:21-24லூக் 13:34-35 அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ? யாக் 1:11 பேது 1:1ஏசா 11:12செப்ப 3:10ஏசா 11:10யோவா 12:201 தீமோ 2:72 தீமோ 1:11 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். யோவா 3:91 கொரி 2:14யோவா 7:34யோவா 12:34யோவா 16:17-18யோவா 3:4யோவா 6:41யோவா 6:52 பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும். ஏசா 55:1யோவா 4:14யோவா 6:35ஏசா 12:3வெளி 22:17ஏசா 44:3யோவா 4:10சங் 42:2 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். யோவா 4:14ஏசா 44:3ஏசா 58:11ஏசா 12:3யோவா 4:10நீதி 10:11சகரி 14:8நீதி 18:4 தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை. அப் 2:17யோவே 2:28யோவா 14:16-17அப் 2:33ஏசா 32:15யோவா 16:7அப் 2:4ஏசா 44:3 மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். மத் 21:11யோவா 1:21யோவா 6:14 வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? யோவா 7:52யோவா 1:46யோவா 1:49யோவா 1:41யோவா 4:25யோவா 4:29யோவா 4:42யோவா 6:69 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். மீகா 5:2மத் 2:5எரே 23:5லூக் 2:4ஏசா 11:1லூக் 2:11மத் 1:11 சாமு 16:1 இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது. யோவா 10:19யோவா 9:16யோவா 7:12லூக் 12:51அப் 14:4அப் 23:7-10மத் 10:35 அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை. அப் 23:11யோவா 7:30யோவா 8:20அப் 18:10அப் 27:23-25யோவா 18:5-6

யூதத் தலைவர்களுடைய அவிசுவாசம்

பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். யோவா 7:32அப் 5:21-27 காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள். மத் 7:28-29லூக் 4:22யோவா 7:26 அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா? யோவா 7:122 கொரி 6:82 நாளாக 32:152இராஜா 18:292இராஜா 18:32யோவா 9:27-34மத் 27:63 அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா? யோவா 12:421 கொரி 1:201 கொரி 2:8யோவா 7:261 கொரி 1:22-28அப் 6:7எரே 5:4-5யோவா 7:50 வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். 1 கொரி 1:20-211 கொரி 3:18-20யாக் 3:13-18யோவா 9:34யோவா 9:40ஏசா 28:14ஏசா 29:14-19ஏசா 5:21 இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து: யோவா 19:39யோவா 3:1-2 ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். நீதி 18:13உபா 1:17அப் 23:3உபா 19:15-19உபா 17:6உபா 17:8-11 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள். யோவா 7:41யோவா 1:46ஏசா 9:1-2மத் 4:15-161 இராஜா 22:24யாத் 2:14ஆதி 19:9யோவா 9:34 பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள். சங் 33:10யோபு 5:12-13சங் 76:10சங் 76:5