தெபொராளின் பாடல்
அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது: யாத் 15:1ஏசா 12:1-6சங் 18:1வெளி 15:3-4வெளி 19:1-31 சாமு 2:12 நாளாக 20:212 நாளாக 20:27
“ 1யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும், நியாயாதி 5:92 நாளாக 17:16சங் 110:3பிலி 2:131 கொரி 9:172 கொரி 8:122 கொரி 9:72 சாமு 22:47-48
மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
ராஜாக்களே, கேளுங்கள்; சங் 138:4-5எஸ்றா 7:21சங் 119:46சங் 2:10-12சங் 49:1-21 இராஜா 18:221 இராஜா 19:101 இராஜா 19:14
அதிபதிகளே, செவிகொடுங்கள்;
நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன்.
யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, உபா 33:2சங் 68:7-8சங் 77:17சங் 18:7-152 சாமு 22:8யோபு 9:6ஆப 3:3-6
ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது,
பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது,
மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; யாத் 19:18சங் 97:5ஏசா 64:1-3நாகூ 1:5ஆப 3:10எபி 12:18சங் 68:8உபா 4:11-12
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.
ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், ஏசா 33:8நியாயாதி 3:31புலம் 1:4லேவி 26:222 நாளாக 15:5நியாயாதி 4:17-18புலம் 4:18மீகா 3:12
யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள்
பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், 2 சாமு 20:19ஏசா 49:23எஸ்த 9:19நியாயாதி 4:4-6ரோம 16:13
இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும்,
கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? உபா 32:16-17நியாயாதி 2:12நியாயாதி 2:171 சாமு 13:19-22நியாயாதி 4:3 மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த நியாயாதி 5:21 நாளாக 29:92 கொரி 8:122 கொரி 8:172 கொரி 8:3-42 கொரி 9:5
இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது;
யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்.
வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, நியாயாதி 12:14நியாயாதி 10:4சங் 105:2ஏசா 28:6யோவே 3:12சங் 107:32சங் 145:11சங் 145:5
வழியில் நடக்கிறவர்களே,
இதைப் பற்றி யோசியுங்கள்.
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் 2 இரைச்சலுக்கு நீங்கினவர்கள் மீகா 6:5நியாயாதி 5:81 சாமு 12:7உபா 22:24எரே 7:2புலம் 5:4புலம் 5:9ஏசா 12:3
அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும்,
அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த
நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்;
அதுமுதல் யெகோவாவின் மக்கள்
நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.
விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; எபே 4:8சங் 68:18சங் 57:82 தீமோ 2:26எபே 5:141 கொரி 15:34ஏசா 60:1எரே 31:26
பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே,
உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; வெளி 2:26-27ஏசா 41:15-16சங் 75:7ரோம 8:37தானி 7:18-27எசேக் 17:24சங் 49:14வெளி 3:9
யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; நியாயாதி 12:15நியாயாதி 3:13நியாயாதி 3:27எண் 32:39-40யாத் 17:8-16நியாயாதி 4:10நியாயாதி 4:14நியாயாதி 4:5-6
உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்;
மாகீரிலிருந்து அதிபதிகளும்,
செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; நியாயாதி 4:141 நாளாக 12:322 கொரி 11:2அப் 15:39அப் 20:13நியாயாதி 4:10நியாயாதி 4:6நீதி 22:13
பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும்
பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்;
ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, எண் 32:24எண் 32:1-5நியாயாதி 5:15புலம் 3:40-41பிலி 2:21பிலி 3:19சங் 4:4சங் 77:6
நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன?
ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.
கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; யோசு 13:25யோசு 13:31யோசு 19:24-31
தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன?
ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி,
மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் நியாயாதி 4:10நியாயாதி 4:61 யோவா 3:16அப் 20:24எஸ்த 4:16நியாயாதி 4:14வெளி 12:11
மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்; நியாயாதி 1:27நியாயாதி 5:301 இராஜா 4:12ஆதி 14:22ஆதி 4:16நியாயாதி 4:13யோசு 10:22-27யோசு 11:1-15
அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்;
அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; யோசு 10:111 சாமு 7:10நியாயாதி 4:15சங் 77:17-18
நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, நியாயாதி 4:7மீகா 7:10சங் 44:51 இராஜா 18:40ஆதி 49:18ஏசா 25:10நியாயாதி 4:13சங் 83:9-10
அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே,
நீ பெலவான்களை மிதித்தாய்.
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, ஏசா 5:28எரே 47:4மீகா 4:13சங் 147:10-11சங் 20:7சங் 33:17
பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
மேரோசைச் சபியுங்கள்; 1 கொரி 16:221 கொரி 3:9நியாயாதி 21:9-10எரே 48:101 சாமு 17:471 சாமு 18:171 சாமு 25:281 சாமு 26:19
அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று
யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்;
அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை;
பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.
பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; லூக் 1:42லூக் 1:28ஆதி 14:19நியாயாதி 4:17நீதி 31:31
கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
தண்ணீரைக் கேட்டான், நியாயாதி 4:19-21
பாலைக் கொடுத்தாள்;
ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
தன்னுடைய கையால் ஆணியையும், 1 சாமு 17:49-512 சாமு 20:22நியாயாதி 4:21
தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து,
சிசெராவை அடித்தாள்;
அவனுடைய தலையில் உருவக்குத்தி,
அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.
அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; யாக் 2:13சங் 52:7மத் 7:2
அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.
“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: 2இராஜா 1:2யாக் 5:7நியாயாதி 4:15நீதி 7:6உன்னத 2:9உன்னத 8:14
அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன?
அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள்.
அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:
அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, யாத் 15:92 சாமு 13:18ஆதி 37:3யோபு 20:5சங் 45:14
ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும்,
சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும்,
கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், 3என்
கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; சங் 37:62 சாமு 23:41 கொரி 8:31 பேது 1:8யாக் 1:12சங் 19:4-5சங் 91:14தானி 12:3
அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.