யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்ளுதல்
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று. யாத் 12:6-23லேவி 23:5-6யோவா 11:55-57மத் 26:2-5மாற் 14:1-21 கொரி 5:7-8மாற் 14:12 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள். யோவா 11:47-53யோவா 11:57லூக் 19:47-48லூக் 20:19மத் 12:14மத் 21:45-46மத் 26:3-5சங் 2:1-5 அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். யோவா 13:2மாற் 14:10-11யோவா 13:18யோவா 13:26-27சங் 55:12-14அப் 5:3லூக் 22:21மத் 26:14-16 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான். அப் 4:1அப் 5:24அப் 5:26லூக் 22:52மத் 26:14மாற் 14:10-11 அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். சகரி 11:12-131 தீமோ 6:9-10அப் 1:18மத் 26:15-16மத் 27:3-52 பேது 2:152 பேது 2:3அப் 8:20 அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான். மத் 26:5மாற் 14:2
இறுதி கர்த்தருடைய பந்தி
பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. யாத் 12:18மாற் 14:12-161 கொரி 5:7யாத் 12:6லூக் 22:1மத் 26:17-19 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார். மாற் 14:13-16அப் 3:1அப் 3:11அப் 4:13அப் 4:19அப் 8:14கலா 4:4-5லூக் 1:6 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய், அப் 8:26-29யோவா 16:41 சாமு 10:2-7மத் 26:18-19லூக் 19:29-40 அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள். யோவா 11:28வெளி 3:20லூக் 19:31லூக் 19:34லூக் 19:5மத் 21:3 அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப் 1:13அப் 16:14-15அப் 20:8யோவா 2:25யோவா 21:17 அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். லூக் 19:32லூக் 21:33எபி 11:8யோவா 2:5யோவா 11:40 நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள். மத் 26:20மாற் 14:17உபா 16:6-7மாற் 6:30 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன். லூக் 12:50யோவா 4:34யோவா 13:1யோவா 17:1 தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, லூக் 14:15வெளி 19:9லூக் 22:301 கொரி 5:7-8யோவா 6:50-58அப் 10:41எபி 10:1-10யோவா 6:27 அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; சங் 116:131 தீமோ 4:4-5லூக் 22:19உபா 8:10எரே 16:7லூக் 9:16சங் 23:5ரோம 14:6 தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 26:29ஏசா 55:1லூக் 22:16மாற் 14:25கொலோ 1:13லூக் 21:31அப் 2:30-36தானி 2:44 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 1 கொரி 11:23-291 கொரி 10:16மாற் 14:22-24லூக் 22:20மத் 26:26-281 கொரி 10:4சங் 111:4தீத் 2:14 போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார். 1 கொரி 11:25மத் 26:28சகரி 9:11யாத் 24:8எபி 13:202 கொரி 3:6எபி 12:24எபி 8:6-13 பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. சங் 41:9யோவா 13:26யோவா 13:18-19யோவா 13:21-22மத் 26:21-24மாற் 14:18-21யோபு 19:19மீகா 7:5-6 தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார். அப் 2:23லூக் 24:25-27சங் 109:6-151 கொரி 15:3-4லூக் 24:46சங் 55:12-15சங் 69:1-361 பேது 1:11 அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். யோவா 13:22-25மத் 26:22மாற் 14:19 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. லூக் 9:46மாற் 9:34மத் 20:20-24மாற் 10:37-411 கொரி 13:41 பேது 5:5-6பிலி 2:3-5ரோம 12:10 அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். மத் 20:25-28மாற் 10:41-45 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். 1 பேது 5:51 பேது 5:3மாற் 9:353 யோவா 1:9-10லூக் 9:48மத் 18:3-5மத் 23:8-12ரோம 12:2 பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன். மத் 20:28லூக் 12:37யோவா 13:5-162 கொரி 8:9லூக் 17:7-9பிலி 2:7-8 மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. எபி 2:18எபி 4:15அப் 1:25யோவா 6:67-68யோவா 8:31மத் 19:28-29மத் 24:13 ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். 2 தீமோ 2:12மத் 25:34யாக் 2:5மத் 24:47மத் 28:18லூக் 12:32லூக் 19:171 கொரி 9:25 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார். மத் 19:28மத் 8:11வெளி 2:26-27லூக் 12:37லூக் 14:15வெளி 3:211 கொரி 6:2-3வெளி 19:9 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். 1 பேது 5:8சகரி 3:1யோபு 1:6-12யோபு 2:1-6வெளி 12:10ஆமோ 9:9லூக் 10:41அப் 9:4 நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். யோவா 21:15-171 பேது 5:8-10யோவா 17:9-11ரோம 8:342 கொரி 1:4-6எபி 7:251 யோவா 2:1-22 பேது 3:14 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். மாற் 14:31மத் 26:33-35யோவா 13:36-37மாற் 14:29மத் 20:22மத் 26:40-41அப் 20:23-24அப் 21:13 அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 13:38மத் 26:34மாற் 14:30மத் 26:74மாற் 14:71-72யோவா 18:27 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். மத் 10:9-10லூக் 10:4லூக் 9:3சங் 23:1சங் 34:9-10சங் 37:3மத் 6:31-33மாற் 6:8-9 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். 1 தெச 2:14-151 தெச 3:4யோவா 15:20மத் 10:22-251 பேது 4:1யோவா 16:33 அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். ஏசா 53:122 கொரி 5:21லூக் 23:32கலா 3:13அப் 13:27-29யோவா 17:4யோவா 19:28-30யோவா 10:35 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். 2 கொரி 10:3-4எபே 6:10-18லூக் 22:49மத் 26:52-541 தெச 5:8யோவா 18:361 பேது 5:9
ஒலிவமலையில் இயேசுவின் ஜெபம்
பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள். லூக் 21:37யோவா 18:1-2மத் 21:1மத் 26:30மாற் 14:32-34மத் 26:36-38மாற் 11:11மாற் 11:19 அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி, மத் 6:13லூக் 22:46மத் 26:36-461 பேது 5:8-92 கொரி 12:7-10மாற் 14:32-421 பேது 4:7எபே 6:18-19 அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: மத் 26:39மாற் 14:35லூக் 18:11 பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். யோவா 12:27-28மத் 26:39மத் 26:42மாற் 14:36சங் 40:8யோவா 18:11யோவா 5:30மத் 20:22 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான். மத் 4:11மத் 26:53சங் 91:11-12எபி 1:141 தீமோ 3:16எபி 1:6யோபு 4:3-4லூக் 22:32 அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது. புலம் 1:12எபி 5:7சங் 22:12-21ரோம 8:32சங் 130:1-2ஏசா 53:10யோவா 12:27ஆதி 32:24-28 அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு: மாற் 14:40-41மத் 26:40மத் 26:43மாற் 14:37 நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார். லூக் 22:40யோனா 1:6லூக் 21:34-36நீதி 6:4-11
இயேசு கைதுசெய்யப்படுதல்
அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான். மாற் 14:41-50யோவா 18:2-11லூக் 22:3-6மத் 26:45-56மாற் 14:10மத் 26:14-16அப் 1:16-18 இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். 2 சாமு 20:9-10மாற் 14:44-46மத் 26:48-50நீதி 27:6சங் 55:21 அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். லூக் 22:38 அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான். யோவா 18:10-11மாற் 14:472 கொரி 10:4மத் 26:51-54ரோம 12:19 அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார். 2 கொரி 10:1ரோம 12:211 பேது 2:21-23யோவா 17:12யோவா 18:8-9 பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. லூக் 22:4அப் 5:26யோவா 17:12மத் 26:55மாற் 14:48-492இராஜா 11:15 நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார். எபே 6:122 கொரி 4:3-6அப் 26:18கொலோ 1:13யோவா 12:27யோவா 16:20-22யோவா 7:45நியாயாதி 16:21-30
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான். மத் 26:57-58மாற் 14:53-54யோவா 18:12-172 நாளாக 32:31யோவா 18:24லூக் 22:33-34 அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். சங் 26:4-52 கொரி 6:15-17லூக் 22:44மத் 26:69-75மாற் 14:66-72நீதி 9:6சங் 28:31 கொரி 15:33 அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள். யோவா 18:17மத் 26:69மாற் 14:17மாற் 14:6மாற் 14:66-68 அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான். 1 யோவா 1:92 தீமோ 2:10-12அப் 3:13-14அப் 3:19யோவா 18:25யோவா 18:27லூக் 12:9லூக் 22:33-34 சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான். யோவா 18:25மத் 26:71-72மாற் 14:69-70 ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். யோவா 18:26-27மத் 26:73-74மாற் 14:69-70 அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது. யோவா 18:27லூக் 22:34மத் 26:74-75மாற் 14:71-72 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து, லூக் 22:34ஏசா 57:15-18எசேக் 16:63எசேக் 36:31-32எரே 31:18-20யோபு 33:27அப் 5:31எபே 2:11 வெளியேபோய், மனங்கசந்து அழுதான். 1 கொரி 10:12மத் 26:752 கொரி 7:9-11எசேக் 7:16எரே 31:18மத் 5:4மாற் 14:72சங் 126:5-6
காவலாளிகள் இயேசுவைக் கேலிசெய்தல்
இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து, யோவா 18:221 பேது 2:23எபி 12:2ஏசா 49:7ஏசா 50:6-7ஏசா 52:14ஏசா 53:3யோபு 16:9-10 அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, நியாயாதி 16:21நியாயாதி 16:25 மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள். 1 தீமோ 1:13-14அப் 26:11லூக் 12:10மத் 12:31-32மத் 27:39
இயேசு விசாரிக்கப்படுதல்
விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: மத் 27:1மாற் 15:1அப் 22:5அப் 4:25-28மத் 5:22யோவா 18:28சங் 2:1-3 நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். யோவா 10:24-26யோவா 12:37-43யோவா 5:39-47யோவா 8:43-45யோவா 9:27-28லூக் 16:31மத் 11:3-5மத் 26:63-68 நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள். லூக் 20:3-7லூக் 20:41-44 இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார். சங் 110:1தானி 7:13-14எபி 1:3மாற் 16:19அப் 2:34-36எபே 1:20-23மத் 22:44மத் 26:64 அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். லூக் 23:3யோவா 18:37மத் 26:64மத் 27:11மாற் 15:2யோவா 1:34யோவா 1:49யோவா 10:30 அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். மத் 26:65-66மாற் 14:63-64