மாற்கு 14

Mark 14
அத்தியாயம் 14

இயேசு பெத்தானியாவில் அபிஷேகம்பண்ணப்படுதல்

இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள். யாத் 12:6-20லூக் 22:1-2யோவா 13:1உபா 16:1-8அப் 4:25-28லேவி 23:5-7யோவா 11:47யோவா 11:53-57 ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். யோவா 12:19யோவா 7:40புலம் 3:27லூக் 20:6மத் 26:5மாற் 11:18மாற் 11:32நீதி 19:21 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். லூக் 7:37-39யோவா 12:1-8யோவா 11:2மத் 26:6-13உன்னத 4:13-14உன்னத 5:5மத் 21:17 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்? யோவா 12:4-5மத் 26:8-9பிரச 4:4பிரச 5:4-8மல்கி 1:12-13 இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள். யோவா 13:29மத் 20:111 கொரி 10:10உபா 1:27எபே 4:28யாத் 16:7-8யோவா 12:5-6யோவா 6:43 இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். தீத் 3:14எபி 10:24எபி 13:21மத் 26:102 தீமோ 2:21அப் 9:36எபே 2:10தீத் 2:14 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன். உபா 15:11மத் 26:111 யோவா 3:16-19யாக் 2:14-16அப் 3:21யோவா 12:7-8யோவா 13:33யோவா 16:28 இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். 2 கொரி 8:12யோவா 12:72 நாளாக 31:20-212 கொரி 8:1-3லூக் 23:53மாற் 15:421 நாளாக 29:1-172 நாளாக 34:19-33 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 26:12-13மாற் 16:15மத் 24:14சங் 112:6-9எண் 31:54சகரி 6:14 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான். லூக் 22:3-6யோவா 13:2மத் 26:14-16சங் 41:9யோவா 13:30யோவா 6:70-71மத் 10:4சங் 55:12-14 அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். 1 தீமோ 6:101 இராஜா 21:202இராஜா 5:262 பேது 2:14-15ஓசி 7:3யூதா 1:11லூக் 22:5-6மத் 26:15

கர்த்தருடைய பந்தி

பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். யாத் 12:61 கொரி 5:7-8யாத் 12:18யாத் 12:8லேவி 23:5-6மத் 26:17-19எண் 28:16-18உபா 16:1-4 அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்; லூக் 22:10-13மத் 26:18-19எபி 4:13எபி 5:9யோவா 15:14லூக் 19:30-33மத் 8:9மாற் 11:2-3 அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். வெளி 3:20யோவா 11:28யோவா 13:13மாற் 10:17மாற் 11:3 அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப் 1:132 நாளாக 6:30அப் 20:8யோவா 2:24-25யோவா 21:17நீதி 16:1நீதி 21:1-2சங் 110:3 அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். யோவா 16:4லூக் 22:13லூக் 22:35 மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார். லூக் 22:14யோவா 13:21-26லூக் 22:21-23மத் 26:20-24 அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். சங் 41:9யோவா 6:47யோவா 6:70யோவா 1:51யோவா 13:21யோவா 13:38யோவா 3:11யோவா 3:3 அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள். யோவா 13:22லூக் 22:21-23மத் 26:22 அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி; யோவா 13:26யோவா 6:71லூக் 22:47மத் 26:23மத் 26:47மாற் 14:43 மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார். ஏசா 53:1-12மத் 26:24-25தானி 9:24மத் 18:6-7சகரி 13:7அப் 1:25அப் 13:27-29அப் 2:23 அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். மத் 26:26-29மாற் 14:241 கொரி 10:16-171 கொரி 11:23-29லூக் 22:18-20லூக் 24:30யோவா 6:48-58ஆதி 41:26 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள். மத் 26:27மாற் 14:221 கொரி 10:16லூக் 22:17ரோம 14:6 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. யாத் 24:8சகரி 9:11வெளி 7:9-17எபி 9:15-231 கொரி 10:161 கொரி 11:25எபி 13:20-21யோவா 6:53 நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 26:29சங் 104:15ஆமோ 9:13-14யோவே 3:18லூக் 22:16-18லூக் 22:29-30சகரி 9:17 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். மத் 26:30லூக் 22:391 கொரி 14:15அப் 16:25கொலோ 3:16எபே 5:18-20யாக் 5:13நியாயாதி 18:1-4

இயேசு பேதுருவின் மறுதலிப்பை முன்னறிவித்தல்

அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள். சகரி 13:7யோவா 16:32மத் 26:31யோவா 16:12 தீமோ 4:16லூக் 22:31-32 ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார். மத் 28:16மாற் 16:7மத் 28:7மத் 28:10மத் 26:321 கொரி 15:4-6யோவா 21:1மத் 16:21 அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான். யோவா 13:36-38லூக் 22:33-34மத் 26:33-35யோவா 21:15 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 13:38மாற் 14:66-721 கொரி 10:12ஆதி 1:5ஆதி 1:8யோவா 18:17யோவா 18:25-27லூக் 22:34 அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள். யாத் 19:8யோவா 13:372இராஜா 8:13உபா 5:27-29எரே 10:23எரே 17:9யோபு 40:4-5நீதி 16:18

கெத்செமனே

பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; மாற் 14:36மாற் 14:39சங் 18:5-6யோவா 18:1-11லூக் 22:39-46மத் 26:36-46சங் 109:4சங் 22:1-2 பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். லூக் 22:44எபி 5:7மாற் 1:16-19மாற் 5:37சங் 38:11சங் 69:1-3சங் 88:14-16ஏசா 53:10 அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, யோவா 12:27மாற் 13:35-371 பேது 5:81 பேது 4:7எபே 6:18-19ஏசா 53:12ஏசா 53:3-4புலம் 1:12 சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: மாற் 14:41அப் 10:25-26உபா 9:18ஆதி 17:3எபி 5:7மத் 26:392 நாளாக 7:3வெளி 4:10 அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார். கலா 4:6யோவா 5:30ரோம 8:15-16எபி 5:7-8யோவா 12:27எரே 32:27யோவா 18:11யோவா 6:38-39 பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? மத் 26:402 சாமு 16:17எபி 12:3லூக் 22:45-46லூக் 9:31-32மத் 25:5மாற் 14:29-31மாற் 14:40-41 நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார். மத் 26:41லூக் 21:36மத் 24:42லூக் 22:40ரோம 7:18-25வெளி 3:2-3லூக் 22:46கலா 5:17 அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். மத் 26:42-442 கொரி 12:8மத் 6:7லூக் 18:1 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள். ஆதி 44:16மாற் 9:33-34ரோம 3:19 அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். மாற் 14:35மாற் 9:31யோவா 17:11 இராஜா 18:271 இராஜா 22:152இராஜா 3:13அப் 7:52பிரச 11:9 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார். மத் 26:46யோவா 18:1-2

இயேசு கைதுசெய்யப்படுதல்

உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். யோவா 18:3-11லூக் 22:47-53மத் 26:47-56அப் 1:16சங் 2:1-2சங் 22:11-13சங் 3:1-2 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். மத் 26:48-50நீதி 27:6யாத் 12:13சங் 55:20-211 சாமு 23:22-232 சாமு 20:9-102 தெச 3:17யோசு 2:12 அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். ஏசா 1:3யோவா 13:13-14யோவா 20:16லூக் 6:46மல்கி 1:6மத் 23:7-10மாற் 12:14 அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப் 2:23நியாயாதி 16:21யோவா 18:12புலம் 4:20 அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். யோவா 18:10-11லூக் 22:49-51மத் 26:51-54 இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; 1 சாமு 26:18லூக் 22:52-531 சாமு 24:14-15மத் 26:55 நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். யோவா 18:20யோவா 8:2தானி 9:24-26லூக் 22:37மத் 1:22மத் 26:54மத் 26:56மாற் 12:35 அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். மாற் 14:27யோவா 16:322 தீமோ 4:16சங் 88:18சங் 38:11சங் 88:7-8ஏசா 63:3யோவா 18:8 ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான். மாற் 13:14-16ஆதி 39:12யோபு 2:4

ஆலோசனை சங்கத்தில் இயேசு

இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள். மத் 26:57-68யோவா 18:12-14லூக் 22:54-62ஏசா 53:7யோவா 18:19-24அப் 4:5-6மத் 26:3மாற் 15:1 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். யோவா 18:18மத் 26:3யோவா 18:15-16யோவா 18:251 இராஜா 19:131 இராஜா 19:91 சாமு 13:7லூக் 22:44 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை. 1 பேது 3:16-18அப் 24:1-13மத் 26:59-60மத் 5:221 இராஜா 21:13அப் 6:11-13தானி 6:4சங் 27:12 அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, அப் 6:13-14மத் 26:60-61எரே 26:18எரே 26:8-9யோவா 2:18-21மத் 27:40மாற் 15:29 அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள். யோவா 2:192 கொரி 5:1எபி 9:11அப் 7:48எபி 9:24மாற் 15:29தானி 2:34தானி 2:45 அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். யோவா 19:9-10மத் 26:62-63மாற் 15:3-5 அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். மத் 26:63-64மாற் 15:2ஏசா 53:7யோவா 10:30-31யோவா 19:71 பேது 2:23யோவா 10:36லூக் 22:67-71 அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். தானி 7:13-14சங் 110:1எபி 1:3மாற் 13:26மத் 24:30லூக் 22:69மத் 26:64எபி 12:2 பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? மத் 26:65அப் 14:13-14ஏசா 36:22எரே 36:23-24லேவி 21:10எண் 14:6 தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள். லேவி 24:16யோவா 10:31-33யோவா 19:71 இராஜா 21:9-13யோவா 5:18யோவா 8:58-59லூக் 22:71மத் 26:65-66 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். மத் 26:67-68அப் 23:2ஏசா 50:6யோவா 19:3லூக் 22:63-64எஸ்த 7:8ஏசா 52:14ஏசா 53:3

பேதுரு இயேசுவை மறுதலித்தல்

அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து, மாற் 14:54மத் 26:69-75யோவா 18:15-18யோவா 18:25-27மத் 26:58லூக் 22:55-62 குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள். மாற் 14:54அப் 10:38யோவா 1:45-49யோவா 19:19மத் 2:23மத் 21:11மாற் 1:24மாற் 10:47 அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது. மாற் 14:29-312 தீமோ 2:12-13யோவா 13:36-38மத் 26:71-72மாற் 14:72 வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். கலா 6:1யோவா 18:17யோவா 18:25லூக் 22:58மாற் 14:38 அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். அப் 2:7லூக் 22:59-60மத் 26:73-74மாற் 14:68நியாயாதி 12:6யோவா 18:26-27 அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். 1 கொரி 10:122இராஜா 10:322இராஜா 8:12-15எரே 17:9 உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான். மாற் 14:30மாற் 14:68எசேக் 7:162 கொரி 7:102 சாமு 24:10எசேக் 16:63எசேக் 36:31எரே 31:18-20