மத்தேயு 1

Matthew 1
அத்தியாயம் 1

இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு

ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு: ஆதி 22:18ரோம 1:3கலா 3:16வெளி 22:16சங் 132:11எரே 23:5ஏசா 11:1ஏசா 9:6-7 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்; அப் 7:8ஆதி 21:2-5எபி 11:17-18ஆதி 25:26ஆதி 46:8-271 நாளாக 1:281 நாளாக 1:341 நாளாக 2:1-8 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ஆதி 38:24-27ஆதி 38:29-30ஆதி 46:121 நாளாக 4:1ரூத் 4:18-22லூக் 3:33எண் 26:20-211 நாளாக 2:1-15 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; 1 நாளாக 2:10-12எண் 1:7எண் 7:12எண் 2:3லூக் 3:32எண் 10:14எண் 7:17ரூத் 4:19-20 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ரூத் 1:16-17எபி 11:31யாக் 2:25யோசு 6:22-25ரூத் 1:22ரூத் 1:41 நாளாக 2:11-12ரூத் 4:21 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; 1 இராஜா 15:51 சாமு 17:122 சாமு 12:24-252 சாமு 23:11 சாமு 16:12 சாமு 11:26-271 நாளாக 11:411 நாளாக 14:4 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்; 2 நாளாக 14:1-151 நாளாக 3:10-141 இராஜா 15:8-231 இராஜா 11:431 இராஜா 14:312 நாளாக 12:12 நாளாக 13:72 நாளாக 9:31 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்; 1 நாளாக 3:112 நாளாக 26:1-231 இராஜா 15:241 இராஜா 22:2-502 நாளாக 17:1-192 நாளாக 21:12இராஜா 14:212இராஜா 15:1-6 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்; 1 நாளாக 3:11-132 நாளாக 26:212 நாளாக 27:12இராஜா 15:322இராஜா 15:72இராஜா 18:1-20ஏசா 36:1-22ஏசா 7:1-13 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்; 2 நாளாக 32:331 நாளாக 3:13-151 இராஜா 13:22இராஜா 20:212இராஜா 24:3-4எரே 1:2-3 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான். எரே 27:20எரே 52:11-15எரே 52:28-301 நாளாக 3:15-172 நாளாக 36:1-82 நாளாக 36:102 நாளாக 36:202இராஜா 23:31 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்; 1 நாளாக 3:17எஸ்றா 3:21 நாளாக 3:19-24ஆகா 1:14லூக் 3:272இராஜா 25:27எஸ்றா 5:2ஆகா 1:1 செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்; எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். மத் 27:17யோவா 4:25லூக் 3:23லூக் 1:31-35மத் 27:22லூக் 1:27லூக் 2:10-11லூக் 2:4-5 இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும். மத் 1:11-122இராஜா 24:14எரே 27:20யோவா 1:41மத் 11:2

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு

இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. கலா 4:4-5லூக் 1:27-38எபி 10:5யோபு 14:4ஆதி 3:15எபி 7:26யோபு 15:14லூக் 1:25 அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான். உபா 22:21-24உபா 24:1-4யோவா 8:4-5மாற் 6:20ஆதி 38:24லேவி 20:10லூக் 2:25சங் 112:4-5 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. நீதி 3:5-6லூக் 1:19மத் 1:18யோவே 2:28லூக் 2:4மத் 2:19ஆதி 31:11ஏசா 26:3 அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். அப் 13:23அப் 4:12யோவா 1:291 யோவா 3:5கொலோ 1:20-23லூக் 2:21அப் 5:31லூக் 1:31 தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. லூக் 24:441 இராஜா 8:15மத் 2:23அப் 3:181 இராஜா 8:24எஸ்றா 1:1யோவா 17:12யோவா 18:9 அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். ஏசா 7:14ஏசா 9:6-7சங் 46:11யோவா 1:14ஏசா 12:21 தீமோ 3:16சங் 46:7ரோம 1:3-4 யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; யாக் 2:21-26யோவா 15:14யாத் 40:16யாத் 40:27யாத் 40:32ஆதி 22:2-3எபி 11:7-8யோவா 2:5-8 அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான். லூக் 2:21யாத் 13:2யாத் 22:29லூக் 2:7மத் 1:21ரோம 8:29