நீதிமொழிகள் 31

Proverbs 31
அத்தியாயம் 31

லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள்

ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; நீதி 6:202 தீமோ 1:5நீதி 1:82 தீமோ 3:15நீதி 30:1

அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:

என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, ஏசா 49:151 சாமு 1:111 சாமு 1:28

என்னுடைய பொருத்தனைகளின் மகனே,

பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் உபா 17:17நெகே 13:26நீதி 7:26-27நீதி 5:9-111 இராஜா 11:1ஓசி 4:11

ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.

திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; நீதி 20:1பிரச 10:17ஏசா 5:22ஓசி 4:11-121 இராஜா 20:16-20ஆப 2:5தானி 5:2-4எஸ்த 3:15

லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;

மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, ஆப 2:5

சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; 1 தீமோ 5:23சங் 104:151 சாமு 1:101 சாமு 30:62இராஜா 4:27யோபு 29:13யோபு 3:20

அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, எபே 5:18

தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் சங் 82:3-4நீதி 24:11-12எஸ்த 4:13-16எரே 26:24எரே 38:7-10யோபு 29:12-17எரே 26:16-19யோவா 7:51

உன்னுடைய வாயைத் திற.

உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, ஏசா 1:17ஆமோ 5:11-12லேவி 19:15உபா 1:16யோபு 29:15-16எரே 22:3தானி 4:27ஏசா 1:23

சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.

குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? நீதி 19:14நீதி 12:4நீதி 18:22எபே 5:25-33நீதி 3:15உன்னத 6:8-9ரூத் 3:11பிரச 7:28

அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.

அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; 1 பேது 3:1-72இராஜா 4:22-232இராஜா 4:9-10

அவனுடைய செல்வம் குறையாது.

அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, 1 சாமு 25:18-221 சாமு 25:26-27

நன்மையையே செய்கிறாள்.

ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, 1 தீமோ 5:10தீத் 2:52 தெச 3:10-12அப் 9:39-40ஆதி 18:6-8ஆதி 24:13-14ஆதி 24:18-20ஆதி 29:9-10

தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.

அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; 1 இராஜா 9:26-28எசேக் 27:3-36நீதி 31:242 நாளாக 9:10

தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.

இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, ரோம 12:11லூக் 12:42மாற் 1:35நீதி 20:13பிரச 9:102 நாளாக 36:15யோசு 3:1சங் 119:147-148

தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; மத் 13:44உன்னத 8:12யோசு 15:18

தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, யோபு 38:31 பேது 1:13எபே 6:101 இராஜா 18:46எபே 6:14லூக் 12:352இராஜா 4:29ஏசா 44:12

தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.

தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; 1 தெச 2:9மத் 25:3-102 தெச 3:7-9ஆதி 31:40சங் 127:2

இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.

தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; யாத் 35:25-26

அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.

சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, எபே 4:28எபி 13:16நீதி 19:17நீதி 22:9அப் 20:34-35உபா 15:11சங் 41:1ரோம 12:13

ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.

தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், ஆதி 45:222 சாமு 1:24நீதி 25:20

தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.

இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; வெளி 19:8ஆதி 41:42நீதி 7:161 பேது 3:3எஸ்த 8:15எசேக் 16:10-13நியாயாதி 8:26சங் 45:13-14

மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.

அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது நீதி 12:4ரூத் 4:1உபா 16:18உபா 21:19யோபு 29:7நீதி 24:7ரூத் 4:11

பெயர் பெற்றவனாக இருக்கிறான்.

மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; எசேக் 27:16லூக் 16:191 இராஜா 10:28நியாயாதி 14:12நீதி 31:13நீதி 31:19

கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.

அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; யோபு 40:10ரோம 13:141 தீமோ 2:10எபே 4:24ஏசா 61:10யோபு 29:141 பேது 5:5-6சங் 132:9

வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.

தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; எபே 4:29நீதி 16:24நீதி 10:31நீதி 12:181 பேது 3:4-5கொலோ 4:5நீதி 31:8-91 பேது 3:8-9

தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.

அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், 1 தீமோ 5:10தீத் 2:42 தெச 3:6நீதி 14:11 தெச 4:11

தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.

அவளுடைய பிள்ளைகள் எழும்பி, 2 தீமோ 1:52 தீமோ 3:15-171 இராஜா 2:19நீதி 31:1சங் 116:16ஏசா 62:4-5உன்னத 7:1-9

அவளை பாக்கியவதி என்கிறார்கள்;

அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:

அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; உன்னத 6:8-9எபே 5:27

நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.

செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், நீதி 1:71 பேது 3:4-5நீதி 11:22நீதி 8:131 பேது 1:241 கொரி 4:5எஸ்த 1:11-12சங் 147:11

யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.

அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; சங் 128:2எபி 6:10மத் 7:16வெளி 14:13ரோம 16:1-4பிலி 4:17நீதி 11:30நீதி 31:16

அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.