கடலிலிருந்து எழும்பின மிருகம்
பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது கடலிலிருந்து ஒரு மிருகம் எழும்பிவருவதைப் பார்த்தேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து கிரீடங்களும், அதின் தலைகளின்மேல் தேவனை அவமதிக்கும் பெயர்களும் இருந்தன. வெளி 12:3வெளி 17:3தானி 7:23-25வெளி 11:7தானி 7:2-3தானி 7:7-8தானி 11:36வெளி 17:16 நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போல இருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; இராட்சசப் பாம்பானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. தானி 7:4-71 பேது 5:8வெளி 12:9வெளி 17:12வெளி 20:2வெளி 12:13வெளி 12:15வெளி 12:3-4 அதின் தலைகளில் ஒன்றில் மரணத்திற்குரிய காயமடைந்திருப்பதைப் பார்த்தேன்; ஆனாலும் மரணத்திற்குரிய அந்தக் காயம் குணமாக்கப்பட்டது. பூமியிலுள்ள எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்த மிருகத்தைப் பின்பற்றி, வெளி 17:8வெளி 13:14வெளி 17:10வெளி 17:17அப் 8:13எசேக் 30:24வெளி 13:1-2வெளி 13:12 அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த இராட்சசப் பாம்பை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு நிகரானவன் யார்? அதோடு யுத்தம் செய்பவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். வெளி 13:2வெளி 18:18வெளி 12:3வெளி 13:12-13வெளி 13:152 கொரி 4:42 தெச 2:4தானி 11:36-37 பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. தானி 7:25தானி 7:8தானி 11:36வெளி 12:6தானி 7:112 தெச 2:4தானி 7:20வெளி 11:2-3 அது தேவனை அவமதிப்பதற்காகத் தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய இருப்பிடத்தையும், பரலோகத்தில் வசிக்கிறவர்களையும் அவமதித்து. எபி 9:24மத் 12:34மத் 15:19வெளி 12:12எபி 12:22-23எபி 9:11-12வெளி 11:12வெளி 18:20 மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்செய்து அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு கோத்திரம், மொழி, தேசம் மற்றும் மக்களின்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. தானி 7:21வெளி 11:7தானி 7:25வெளி 12:17தானி 12:1தானி 8:24-25வெளி 17:15யோவா 19:11 உலகம் உண்டானதுமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியில் வசிக்கின்ற மக்கள் எல்லோரும் அதை வணங்குவார்கள். 1 பேது 1:19-20எபே 1:4மத் 25:34வெளி 17:8வெளி 3:5தீத் 1:2யோவா 1:29வெளி 21:27 காதுள்ளவன் எவனோ அவன் கேட்கவேண்டும். வெளி 2:7வெளி 2:17வெளி 2:11வெளி 2:29
சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; எரே 15:2ஏசா 33:1வெளி 14:12வெளி 3:10லூக் 21:19எபி 6:12யாக் 5:7-8வெளி 2:2
பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும்.
பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும்.
பூமியிலிருந்து எழும்பின மிருகம்
பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது. 2 கொரி 11:13-15தானி 7:8மத் 7:15வெளி 17:6தானி 7:24-25வெளி 11:7வெளி 12:3-4வெளி 13:17 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது. வெளி 17:10-11வெளி 14:11வெளி 14:9வெளி 19:202 தெச 2:4வெளி 13:14-17வெளி 13:3-4 அன்றியும், அது மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்விதமாகப் பெரிய அற்புதங்களை நடத்திக்காட்டி, மத் 24:242 தெச 2:9-10வெளி 16:14வெளி 19:201 இராஜா 18:38உபா 13:1-3வெளி 20:9மாற் 13:22 மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது. வெளி 12:9வெளி 19:20வெளி 13:82 தெச 2:42 தெச 2:9-12தானி 11:36வெளி 13:11-12வெளி 13:15 மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. தானி 3:3-6வெளி 16:2வெளி 19:20வெளி 20:4வெளி 17:6தானி 7:25வெளி 13:14வெளி 14:11 அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், வெளி 20:4வெளி 19:20எசேக் 9:4உபா 6:8வெளி 14:9-11வெளி 7:3வெளி 19:18உபா 11:18 அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது. வெளி 13:16வெளி 14:11வெளி 15:2வெளி 22:4வெளி 13:18வெளி 14:9வெளி 3:12வெளி 17:5 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666. வெளி 15:2வெளி 17:9வெளி 21:17தானி 12:10மாற் 13:14வெளி 1:3ஓசி 14:9சங் 107:43