தேவனுடைய சிங்காசனம்
இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது. வெளி 11:12யாத் 24:12வெளி 1:19வெளி 1:10மாற் 1:10வெளி 1:1-3யாத் 34:2-3வெளி 16:17 உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 1 இராஜா 22:19வெளி 1:10ஏசா 6:1எசேக் 3:12-14எசேக் 1:26தானி 7:9வெளி 4:5வெளி 4:9 வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது. எசேக் 1:28ஆதி 9:13-16வெளி 21:11வெளி 10:1எசேக் 28:13எசேக் 1:26வெளி 21:19-20யாத் 24:10 அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். மத் 19:28வெளி 11:16வெளி 4:10வெளி 20:4வெளி 7:112 தீமோ 4:8லூக் 22:30வெளி 3:4-5 அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. வெளி 11:19வெளி 8:5வெளி 1:4வெளி 16:17-18வெளி 5:6யாத் 19:16வெளி 3:1சகரி 4:2 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. வெளி 15:2வெளி 5:6வெளி 14:3வெளி 4:8-9எசேக் 10:12எசேக் 10:14வெளி 19:4வெளி 5:14 முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன. எசேக் 10:14எசேக் 1:10எசேக் 10:21தானி 7:4எசேக் 1:8வெளி 4:6உபா 28:49ஏசா 40:31 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: ஏசா 6:2-13வெளி 1:8எபி 13:8யாத் 15:11வெளி 4:6எசேக் 10:21-22வெளி 15:3வெளி 16:7
“இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, வெளி 5:13-14வெளி 10:6வெளி 7:11-12வெளி 15:7சங் 47:8வெளி 1:18தானி 4:34தானி 12:7
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: வெளி 5:8சங் 95:6வெளி 19:4வெளி 11:161 நாளாக 29:11-16வெளி 4:4வெளி 5:14வெளி 7:11
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் கொலோ 1:16-17வெளி 5:12ஏசா 40:28நீதி 16:4யோவா 1:1-3வெளி 10:6வெளி 14:7வெளி 5:9
வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்;
நீரே எல்லாவற்றையும் படைத்தீர்,
உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்
படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.