ரோமர் 11

Romans 11
அத்தியாயம் 11

இஸ்ரவேலரைத் தள்ளிவிடவில்லை

இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். 2 கொரி 11:221 சாமு 12:22எரே 33:24-26பிலி 3:5அப் 26:4ஆமோ 9:8-9சங் 94:14அப் 22:3 தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து: சங் 94:14ரோம 8:29-301 பேது 1:2அப் 3:17யாத் 32:1ஆதி 44:15எண் 16:15ரோம 9:23 கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது, 1 இராஜா 19:10-181 இராஜா 18:13நெகே 9:261 இராஜா 18:4எரே 2:301 இராஜா 18:30-31 அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. 1 இராஜா 19:18எண் 25:32இராஜா 10:19-20செப்ப 1:4ஓசி 13:1நியாயாதி 2:131 இராஜா 16:31ஓசி 2:8 அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது. ரோம 9:27எபே 1:5-6ரோம 9:11ரோம 11:6-7ரோம 11:28 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே. கலா 2:212 தீமோ 1:9ரோம 3:27-28ரோம 4:4-5தீத் 3:5எபே 2:4-9கலா 5:41 கொரி 15:10 அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள். ரோம 9:182 கொரி 4:4ரோம 11:25ரோம 11:52 தெச 2:10-14ரோம 9:31-322 கொரி 3:14எபே 1:4 தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது. உபா 29:4ஏசா 29:10எசேக் 12:2எரே 5:212 கொரி 3:14-15லூக் 8:10அப் 28:26மத் 13:13-14 அன்றியும், சங் 69:22-23சங் 28:41 சாமு 25:36-381 தீமோ 6:17-19உபா 32:13-15ஏசா 59:18ஏசா 8:13-14யோபு 20:20-23

“அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும்,

இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;

பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; சங் 69:23உபா 28:64-682 பேது 2:4எபே 4:18ரோம 1:21ரோம 11:82 பேது 2:17ஏசா 65:12

அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.

முறிக்கப்பட்டக் கிளைகள்

இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அப் 13:46-48ரோம 11:31ரோம 10:19ரோம 11:14ரோம 11:12எசேக் 18:23அப் 28:24-28எசேக் 18:32 அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும். ரோம 11:25கொலோ 1:27ரோம 11:15எபே 3:8ஏசா 11:11மீகா 5:7ரோம 9:23ஏசா 66:8-20 யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, அப் 9:152 தீமோ 1:11-121 தீமோ 2:7எபே 3:8கலா 1:16கலா 2:7-9ரோம 15:16-19அப் 13:2 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 1 கொரி 7:161 தீமோ 4:16ரோம 9:3தீத் 3:51 கொரி 1:211 கொரி 9:20-221 தீமோ 2:42 தீமோ 2:10 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ? எபே 1:10ரோம 5:10-112 கொரி 5:18-20கொலோ 1:20-21லூக் 15:24லூக் 15:32ரோம 11:11-12வெளி 11:11 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும். எசேக் 44:30நீதி 3:9யாக் 1:18எரே 2:21லேவி 23:10எண் 15:17-21ரோம 11:17உபா 18:4 சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால், எபே 2:11-13எபே 3:6எரே 11:16யோவா 15:2மத் 21:43சங் 52:8அப் 2:39கொலோ 2:13 நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள். 1 கொரி 10:12ரோம 11:20எபே 2:19-20ரோம 3:27யோவா 10:16நீதி 16:181 இராஜா 20:11கலா 3:29 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே. ரோம 11:23-24ரோம 11:17ரோம 11:11-12 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு. ரோம 12:162 கொரி 1:241 கொரி 10:121 பேது 1:17பிலி 2:121 தீமோ 6:17கொலோ 2:7ஆப 2:4 சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு. 2 பேது 2:4-9எரே 25:29எரே 49:12யூதா 1:5ரோம 11:19ரோம 8:321 கொரி 10:1-12ரோம 11:17 எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய். எபி 3:141 கொரி 15:2எபி 3:6யோவா 15:2வெளி 2:5கலா 6:9எபி 10:35-39ரோம 2:4-5 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே. 2 கொரி 3:16சகரி 12:10மத் 23:39 சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? ரோம 11:17-18ரோம 11:30

எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப்படுவார்கள்

மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும். லூக் 21:242 கொரி 3:14-16ரோம 16:25ரோம 12:16ரோம 11:7-8சகரி 14:9-21சகரி 8:20-23ஏசா 2:1-8 இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். ஏசா 59:20எரே 31:31-37சங் 14:7ஓசி 3:5சகரி 10:6-12ஆமோ 9:14-15ஏசா 45:17யோவே 3:16-21

“மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து,

அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;

நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, எரே 31:31-34ஏசா 59:21எசேக் 36:25-29எரே 32:38-40ஏசா 27:9ஏசா 43:25எபி 10:16எபி 8:8-12

இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது.

நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். உபா 10:15உபா 7:7-8மத் 21:43ரோம 11:7ரோம 9:5அப் 13:45-46லூக் 1:68-75ரோம 11:11 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. எண் 23:19எபி 7:21மல்கி 3:6ரோம 8:28ஓசி 13:14 எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, கொலோ 3:71 கொரி 7:25எபே 2:1-21 கொரி 6:9-112 கொரி 4:1ரோம 11:31தீத் 3:3-71 பேது 2:10 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள். ரோம 10:16ரோம 11:15ரோம 11:25 எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். கலா 3:22ரோம 3:91 தீமோ 2:4-6ரோம 3:22யோவா 1:7யோவா 12:32

இறுதி வார்த்தைகள்

ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்! யோபு 11:7-9யோபு 5:9சங் 92:5கொலோ 2:2-3ரோம 2:4யோபு 37:23எபே 1:7எபே 3:10

“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? ஏசா 40:131 கொரி 2:16யோபு 15:8யோபு 36:22எரே 23:18

அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?

தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” யோபு 41:11யோபு 35:71 கொரி 4:7மத் 20:15

எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். கொலோ 1:15-171 கொரி 8:6எபி 2:101 தீமோ 1:17ரோம 16:27அப் 17:281 நாளாக 29:11-12அப் 17:25-26