நீதியுள்ள கிளை
என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ, என்று யெகோவா சொல்லுகிறார். எரே 10:21சகரி 11:15-17எசேக் 34:2-10எசேக் 13:3மத் 9:36எரே 12:10எரே 22:22ஏசா 56:9-12 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரிக்காமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைச் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 21:12மீகா 7:4யாத் 32:34எரே 23:34ஓசி 2:13யாக் 1:27எரே 11:22எரே 13:21 நான் என் ஆடுகளில் மீதியாக இருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும். ஆமோ 9:14-15எரே 32:37ஏசா 43:5-6எரே 29:14எரே 30:3செப்ப 3:19-20எசேக் 37:21-27எசேக் 11:17 அவைகளை மேய்க்கத் தகுதி உள்ளவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று யெகோவா சொல்லுகிறார். எரே 3:14-151 பேது 1:5அப் 20:28-29எசேக் 34:23-31ஓசி 3:3-5ஏசா 11:11எரே 30:10எரே 31:10 இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். ஏசா 4:2லூக் 1:32-33ஏசா 52:13ஏசா 9:7சகரி 6:12-13சகரி 3:8ஏசா 11:1-5ஏசா 32:1-2 அவர் நாட்களில் யூதா காப்பாற்றப்படும், இஸ்ரவேல் சுகமாக வாசம்செய்யும்; அவருக்குச் சூட்டப்படும் பெயர் நமது நீதியாயிருக்கிற யெகோவா என்பதே. 1 கொரி 1:30பிலி 3:9எரே 33:16மத் 1:21-23தானி 9:24ஏசா 54:17ஏசா 7:14ரோம 11:26-27 ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் செய்யாமல், எரே 16:14-15எரே 23:3ஏசா 43:18-19எரே 31:31-34 இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சொந்ததேசத்தில் குடியிருப்பதற்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் செய்வார்களென்று யெகோவா சொல்லுகிறார். ஆமோ 9:14-15ஏசா 43:5-6எசேக் 34:13எசேக் 36:24எசேக் 39:28செப்ப 3:20எசேக் 37:25ஏசா 14:1
பொய் தீர்க்கதரிசிகள்
தீர்க்கதரிசிகளுக்காக என் இருதயம் என் உள்ளத்தில் நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தருக்காகவும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளுக்காகவும் நான் வெறித்திருக்கிற மனிதனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன். ஆப 3:16தானி 8:27ஏசா 51:21புலம் 3:15சங் 60:32இராஜா 22:19-20எசேக் 9:4எசேக் 9:6 தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்திரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. ஓசி 4:2-3சங் 107:34எரே 5:7-8எரே 9:10எரே 9:2மல்கி 3:5எசேக் 22:9-11ஏசா 24:6 தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 6:13செப்ப 3:4மத் 21:12-13எசேக் 23:39எரே 32:342 நாளாக 36:14எசேக் 8:16எரே 11:15 ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டில் சறுக்கலான வழியாயிருக்கும், துரத்தப்பட்டு அதில் விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தில் அவர்கள்மேல் பொல்லாப்பை வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 13:16எரே 11:23நீதி 4:19சங் 35:6யாத் 32:34ஏசா 8:22எரே 48:44யோவா 12:35 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் மக்களை மோசம்போக்கினார்கள். ஏசா 9:16எரே 2:81 இராஜா 18:18-21ஓசி 9:7-82 நாளாக 33:91 இராஜா 18:25-281 இராஜா 18:40 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்செய்து, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்குச் சோதோமைப்போலவும், அதின் குடிமக்கள் கொமோராவைப்போலவும் இருக்கிறார்கள். ஏசா 1:9-10எரே 29:23எசேக் 22:25உபா 32:32எசேக் 13:22-23ஆதி 18:20எரே 14:14எரே 23:32 ஆதலால் சேனைகளின் யெகோவா தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார். எரே 8:14எரே 9:15புலம் 3:15புலம் 3:5சங் 69:21புலம் 3:19மத் 27:34வெளி 8:11 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமையடையச் செய்கிறார்கள்; யெகோவாவுடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 14:14எசேக் 13:62 கொரி 11:13-15எசேக் 13:3கலா 1:8-9எரே 27:9-10மத் 7:151 யோவா 4:1 அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று யெகோவா சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். மீகா 3:11எரே 13:10ஆமோ 9:10உபா 29:19எரே 5:12எரே 8:11எரே 9:14மீகா 3:5 யெகோவாவுடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? எரே 23:221 கொரி 2:16ஆமோ 3:7ஏசா 40:13-14யோவா 15:15சங் 25:141 இராஜா 22:242 நாளாக 18:23 இதோ, யெகோவாவுடைய பெருங்காற்றாகிய கொடிய புயல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் கடுமையாக மோதும். எரே 30:23எரே 25:32ஆமோ 1:14ஏசா 21:1நீதி 10:25நாகூ 1:3-6ஏசா 40:24ஏசா 5:25-28 யெகோவா தம்முடைய இருதயத்தின் நினைவுகளை செய்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். எரே 30:24ஏசா 55:11ஆதி 49:1ஏசா 14:24நீதி 21:30சகரி 1:61 இராஜா 8:472இராஜா 23:26 அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களுடன் நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். எரே 14:14எரே 27:15எரே 23:32எரே 28:15எரே 29:31எரே 29:9அப் 13:4ஏசா 6:8 அவர்கள் என் ஆலோசனையில் நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள். எரே 23:18எரே 25:5சகரி 1:4அப் 20:27எசேக் 13:22எரே 35:151 தெச 5:6அப் 26:18-20 நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார். சங் 139:1-101 இராஜா 20:231 இராஜா 20:28எசேக் 20:32-35யோனா 1:3-4சங் 113:5 யாராவது தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார். நீதி 15:3சங் 139:7சங் 90:8ஏசா 29:15ஆமோ 9:2-31 இராஜா 8:27ஏசா 57:15சங் 139:11-16 சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் பெயரைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எரே 23:32எரே 23:28எரே 29:8யோவே 2:281 கொரி 4:5எரே 8:6எண் 12:6ஆதி 37:5 எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். 1 தீமோ 4:1-2எரே 14:142 பேது 2:13-162 தெச 2:9-112 தீமோ 4:3அப் 13:10ஓசி 8:5ஏசா 30:10 என் மக்களின் முற்பிதாக்கள் பாகாலுக்காக என் பெயரை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினால் என் பெயரை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். நியாயாதி 8:33-34நியாயாதி 3:72இராஜா 21:3அப் 13:8உபா 13:1-5நியாயாதி 10:6எரே 29:82 தீமோ 2:17-18 சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார். 1 தீமோ 1:122 கொரி 2:17லூக் 12:42மத் 24:45நீதி 14:51 கொரி 3:12-131 கொரி 4:2 என் வார்த்தை நெருப்பைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று யெகோவா சொல்லுகிறார். எபி 4:12எரே 5:14லூக் 24:32எரே 20:92 கொரி 10:4-5யோவா 6:63வெளி 11:5அப் 2:3 ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். உபா 18:20எசேக் 13:8எரே 14:14-15எசேக் 13:20சங் 34:161 பேது 3:12எசேக் 15:7உபா 29:20 இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை சொன்னார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். எரே 23:172 நாளாக 18:10-122 நாளாக 18:5ஏசா 30:102 நாளாக 18:19-21மீகா 2:11 இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் மக்களைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 13:7-18புலம் 2:14செப்ப 3:4எரே 29:31எரே 7:8மத் 15:14சகரி 13:2-3உபா 18:20
பொய்யான தெய்வவாக்கு மற்றும் பொய் தீர்க்கதரிசிகள்
யெகோவா சொன்னது என்னவென்று, இந்த மக்களாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பதில் என்று நீ அவர்களுடன் சொல்லவேண்டும். மல்கி 1:1உபா 32:19-20ஆப 1:1ஓசி 9:12ஏசா 13:1எரே 12:7நாகூ 1:12 நாளாக 15:2 கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் மக்களாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனிதனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். சகரி 13:3புலம் 2:14 யெகோவா என்ன பதில் கொடுத்தார்? யெகோவா என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அருகில் உள்ளவனையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேளுங்கள். எபி 8:11எரே 31:34எரே 33:3எரே 42:4 ஆனால் கர்த்தரால் வரும் பதில் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பதிலாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் யெகோவா என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள். 2 பேது 3:16ஏசா 3:8எரே 10:102இராஜா 19:4சங் 120:3சங் 64:81 சாமு 17:261 சாமு 17:36 யெகோவா உனக்கு என்ன பதில் கொடுத்தார்? யெகோவா என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக. நீங்களோவென்றால், கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிறதினால்: யெகோவாவின் பதில் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் யெகோவாவின் பதில் என்று சொல்லுகிறீர்களே. 2 நாளாக 11:13-14 ஆதலால், இதோ, நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இல்லாதபடி கைவிட்டு, எரே 23:33எசேக் 8:182 தெச 1:9உபா 32:39எசேக் 34:11எசேக் 34:20எசேக் 5:8எசேக் 6:3 மறக்கமுடியாத, நிலையான நிந்தையையும், நிலையான வெட்கத்தையும் உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 20:11எசேக் 5:14-15எரே 42:18தானி 12:2தானி 9:16உபா 28:37ஓசி 4:7எரே 24:9